Sunday, 23 April 2017

ஆசைகள் ஓட்டை குடம் போல

வயதான பிறகும்: 😜👍👇👇

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்

பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்

ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமிற்கு 36 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது

24 வயதில் திருமணம் செய்த ஒருவர் தனது 30 வது வயதில் இறந்தார்,

தனது 40 வயதில் திருமணம் செய்தவர் தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார்

ஒருவருக்கு திருமணம் ஆன பத்தே மாதத்தில் குழந்தை பிறந்து விடுகிறது..

வேறு ஒருவருக்கு 10 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் கிடைக்கிறது... சிலருக்கு கிடைக்காமலே போய் விடுகிறது.

ஆபிரகாமிற்கு கூட தனது 100 வது வயதில் தான் மகன் ஈசாக்கு பிறக்கிறான்.

ஒருசிலருக்கு தனது ஆராய்ச்சியில் முதல் படியிலேயே வெற்றி கனியை ருசித்து விடுகின்றனர். ஆனால் பலரோ பல தோல்விக்குப் பின்பே வெற்றி காண்கின்றனர்.

தாமஸ் ஆல்வா எடிசன் கூட மின்சார பல்பை கண்டுபிடிக்க 1000 முறை தோல்வி அடைந்த பின்னரே பல்பு கண்டு பிடித்து வெற்றி கண்டார்.

ஒருவருக்கு 40 வயத்துக்குள்ளே வாழ்க்கையில் சகலமும் அனுபவித்து 41 வது வயதில் மரணம் அடைகிறார்.

இன்னொருவரோ 40 வயதில் தான் வாழ்க்கையே ஆரம்பம் ஆகிறது... அதன்பின்பு 90 வயது வரை நன்றாக வாழ்ந்து மரணம் அடைகிறார்.

ஒருவர் தன் இளமையிலே ஏதாவது நோய் வாய் பட்டு 25 வயதிலேயே மரணம் அடைகிறார்..

இன்னொருவரோ தனது 70 வயதிலும் எந்த நோயும் இல்லாமல்  என்றும் இளமையுடன் நன்கு திடனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஒருவர் நடந்து போய்க்கொண்டிரும் போதே சிறு கல் தடுக்கி மரணம் அடைகிறார்..

இன்னொருவரோ விமான விபத்திலும் சிறு காயம் கூட இல்லாமல் பிழைத்து விடுகிறார்.

ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது.

இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.

ஒருவர் 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்...

ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 45 வது வதில் கோடீஸ்வரர் ஆகிறார்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கூட 40 வயதுக்கு மேல்தான் மலைக்கள்ளன் திரைப்படம் ஹிட் ஆனது.

அதுவரையில் அவர் பட்ட கஷ்டங்கள், வறுமை, நஷ்டங்கள் எல்லாம் சொல்லி முடியாதது..  40 வயதிற்கு  பின்பு தான்  அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், நாடோடி மன்னன் போன்ற திரைப்படங்கள் வரிசையாக ஹிட் ஆகி பின்பு தமிழ்நாட்டின் முதல்வரானார்.

எம்ஜியாருக்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம். கடைசி 30 வருடங்கள் சாகும்வரை  ராஜயோக வாழ்க்கை.

சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார்.

பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் Pertouched Pepler என்ற நாவலை எழுதினார்.

டால்ஸ்டாய் தனது 82 வது வயதில் I Cannot Be Silent என்றார்.

வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்...

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.

எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.

உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.

யார் கண்டது,  அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான்.

எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம்.

இங்கே இப்போது இந்த நொடியில்  என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ  அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்.

அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.

தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்

ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.