Tuesday, 7 March 2017

ஒரு இலட்சம் =7451 ரூபாய்

வருமானத்தில் நீங்கள் செலவு செய்யப்படாத தொகை 'சேமிப்பு'..
இது எழுதப்படாத உண்மை என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
நீங்கள் வாங்கிய சம்பளத்தில் 10 சதவீத தொகையை மிச்சப்படுத்தியதும் சேமிப்புதான், வீடுகளில் அம்மாக்கள் பருப்பு டப்பா, அரிசி மூட்டை எனப் பல இடங்களில் யாருக்கும் தெரியாமல் வைப்பதிருப்பதும் சேமிப்புதான்.
ஆனால் இன்றைய காலங்களில் சேமிப்பு என்பது, நீண்ட காலத்திற்குப் பணத்தின் வாயிலாக மட்டுமே இருக்கக் கூடாது என்பதை நாம் பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட காலத்தில் உணர்ந்திருப்போம்.
உண்மையாகவே பணத்திற்கு நிலையான ஒரு மதிப்பு இல்லை பணவீக்கத்தால் அதன் மதிப்பு தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே இருக்கும். பலபேருக்கு இது தெரியாத காரணத்தினால், பலர் வெறும் ரூபாய் வாயிலான சேமிப்பின் மூலம் மிகப்பெரிய அளவிலான பணத்தை இழந்து வருகின்றனர்.
சேமிப்பு அளவின் மாற்றம்...
1984ஆம் ஆண்டு நீங்கள் 1 லட்சம் ரூபாய் சேமிப்பு வைத்திருந்தால் பணவீக்கத்தின் காரணமாகத் தற்போது அதன் மதிப்பு சரிந்து வெறும் 7,451 ரூபாயாகக் குறைந்துள்ளது.
பொருட்களின் விலை உயர்வால் கடந்த வருடம் 100 ரூபாய் மதிப்பு இந்த வருடம் 10 அல்லது 20 ரூபாயாகக் கூடக் குறையலாம். பணவீக்கம் மெல்ல மெல்ல நம்முடை சேமிப்பைக் கரைக்கிறது.
 
போதிய புரிதல்..
மக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் முதலீடு குறித்துப் போதிய அளவிலான புரிதல் இல்லாததே இத்தகைய நிலைக்கு முக்கியக் காரணம் என்று முதலீட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
உதாரணம்
வங்கியில் 1 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த டெபாசிட்-க்கு வருடத்திற்கு 7 சதவீத வட்டி (கூட்டு வட்டி).. இதே நிலையில் இந்தியாவில் விலை நிலையும் 7 சதவீதம் உயந்தால் உங்களின் லாபம் எதுவுமில்லை.
ஆம், 10 வருடத்திற்கான இந்த டெபாசிட் முடியும் போது உங்களுக்கு 2.16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

விலை நிலை...
இந்த 10 வருட காலத்தில் விலை நிலையும் உயர்ந்துள்ள காரணத்தால் 10 வருடத்திற்கு முன் 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய அதே பொருளை அதே அளவில் 10 வருடத்திற்குப் பின் 2.16 லட்ச ரூபாய்க்கு வாங்குவீர்கள்.
இதுதான் பணவீக்கத்தின் வெளிப்பாடு.
 • எதிர்காலத் தேவை..

  தற்போதைய நிலையில் 25 வயதுடைய உங்களுக்கு மாதத்திற்கு 50,000 ரூபாய் தேவைப்பட்டால், உங்களின் 40 வயதில் மாத செலவு 2.5 லட்சமும், 80 வயதில் 10 லட்சமும் தேவைப்படுமானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
 • சரியான யோசனை

  இந்நிலையில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தின் தேவையை உணர்ந்து சேமிப்பு, வங்கி டெபாசிட் ஆக மட்டும் அல்லாமல் லாபம் தரும் திட்டங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்து அதிக லாபத்தைப் பெறுங்கள்.
  இதன் வாயிலாக மட்டுமே நம்முடை நிதிதேவையை எளிதாகப் பூர்த்திச் செய்ய முடியும். இல்லையெனில் நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் அனைத்தும் காற்றில் கரைந்துவிடும்.

3 comments:

 1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் வெயிட்டேஜ. விவரம் (தமிழ் பாடம்) பதிந்தவர்களின்
  நிலவரம்
  பிற்படுத்தபட்டவர் (BC)

  Inbalexmi. 68.55
  Vasanthi 68.26
  Kalaivani. 68.25
  Murugesan. 68.23
  Kathirvel. 68.21
  Kala. 68.14
  Vijay vithra. 68.12
  Devika. 68.07
  Ganesh. 68.05
  Kiruthika. 68.03
  Felicita. 68.02
  Aarumugam 68.02
  Paavai Mani. 68.02
  Unknown kovai. 68.01
  Ganesh. 68.00
  Indira. 67.95
  Nagarajan. 67.95
  Venkadesan. 67.89
  Sasikala (pH). 67.88
  David. 67.87
  Nithya. 67.80
  Malar (pH) 67.78
  Murugan. 67.72
  Manivannan. 67.71
  Kavitha. 67.69
  Ganesh. 67.69
  Raja lexmi. 67.68
  Thilagavathi. 67.68
  Chitra. 67.64
  Malathi. 67.56
  Dinesh. 67.53
  Sankar. 67. 52

  மிகவும் பிற்படுத்தபட்டவர்( MBC)

  Geetha. 68.00
  Ravi. 67.99
  Jegatheswaran. 67.98
  Vijaykanth. 67.96
  Balakrisnan. 67.95
  Muthumari. 67.92
  John peter. 67.91
  Chidhamparam. 67.77
  Dinakaran. 67.69
  Elangovan. 67.68
  Dinakaran. 67.67
  Panthadunayaki. 67.61
  Kathiresan. 67.51

  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று நூலிலையில் பணி வாய்ப்பை இழந்த தமிழாசிரியர்கள் கவனத்திற்கு!

  மேற்குறிப்பிட்ட ஆசிரியர்கள் தவிர...
  Waitage 67.50க்கு மேல் உள்ள Bc & MBc வகுப்பைச்சார்ந்த இதுவரை பதிவுசெய்யாதவர்கள் பதிவுசெய்யவும்.

  9994994339 & 8870452224 & 8883773819

  ReplyDelete
 2. PG TRB - ENGLISH
  VETTRI TNPSC/TET/TRB
  COACHING CENTRE
  DHARMAPURI

  PG TRB ENGLISH
  DEMO 26-04-2017
  REGULAR CLASS - 03-05-2017
  PLACE -- DHARMAPURI
  PH : 9786583121 (Bala Chandru)
  9786102355

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.