Saturday, 14 January 2017

இந்த தீர்ப்பு மட்டும் மயிர் வளரும் வேகத்தில் முளைத்துக்கொண்டே இருக்கிறது.

🔴சல்லிக்கட்டு நடத்துவோம்🔴

’கூடங்குளம் அணு உலையால் ஆபத்து இல்லை. அது இயங்கட்டும்’ என்பது உச்சநீதி மன்றத்தின் நீதிதான்.
’மாடுகளை விரட்டினால் அது மாடுகளுக்கு ஆபத்து’ என்பதும் உச்ச நீதி மன்றத்தின் நீதிதான்.

 நண்பர்களே, ’அணுக்கசிவைவிட, காளை தழுவும் மனிதர்கள் ஆபத்தானவர்கள்’ என அது தீர்ப்பெழுதிவிட்டது.

பல்லாயிரம் கோடி ஊழல் செய்தவர்களின் வழக்குகள் நடந்துகொண்டே இருக்கின்றன. தமிழகத்தின் ஒரு தீவையே அண்டை நாட்டுக்குத் தூக்கிக்கொடுத்த இந்தியாவின் மீதான வழக்கு இன்னும் தீரவில்லை. காளைகளை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கான தீர்ப்புகள் மட்டும் உடனுக்குடன் முடிக்கப்படுகின்றன.

காவிரி எனும் உயிர் நதியின் தீர்ப்புகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. 25 ஆண்டுகளாகச் சிறைக்குள் கிடக்கும் மனிதர்களின் விடுதலைத் தீர்ப்புக்கு இன்னும் உயிர் தரவில்லை. ’காளைகளைத் தழுவக் கூடாது’ எனும் தீர்ப்பு மட்டும் மயிர் வளரும் வேகத்தில் முளைத்துக்கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.