Sunday, 25 December 2016

All pass அவசியமா?

All pass அவசியமா?

------------------
மனிதனின் வாழ்க்கை முழுவதும் தொடரும் செயலே கற்றல். இதுவரை 8ம் வகுப்புவரை கட்டாயத்தேர்ச்சி என்னும் நடைமுறை இருந்துவருகிறது.மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தால்போதும் அவர்களுக்கு தேர்ச்சியளிக்க வேண்டும். ஆனால் இப்போது மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டுத்துறை அளித்துள்ள 5ம் வகுப்பு வரை மட்டும் தேர்ச்சி என்னும் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மாணவர்களை பாதிக்கும் ஒரு விதியாகவே கருதவேண்டியுள்ளது.
கட்டாயத்தேர்ச்சி முறை ஏன் வந்தது?
இம்முறை வருவதற்கு முன்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் அந்த வகுப்பிலேயே நிறுத்தப்பட்டு விடுவார்கள். இவ்வாறு 2, 3 வருடங்களாக ஒரே வகுப்பில் படித்த மாணவர்களும் இருந்தார்கள். அப்படி தொடர்ச்சியாக ஒரே வகுப்பில் மாணவர்களை நிறுத்தி வைப்பதால் கல்வியின் மீது வெறுப்பும் விரக்தியும் ஏற்பட்டு பள்ளியைவிட்டு இடைநிற்றலும், படிப்பை பாதியில் நிறுத்துவதும் அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிக்கல்வியைக்கூட முழுமையாக நிறைவுசெய்யாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமானது. தன் வயது மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்வதைப் பார்க்கும் தோல்வியடைந்த மாணவர்கள் தாழ்வுமனப்பான்மையோடு தங்கள் படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டனர். இந்த இடைநிற்றலைக் குறைக்க வேண்டும், மாணவர்கள் குறைந்தது பள்ளிக்கல்வியை மட்டுமாவது நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காகவே 8ம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சிமுறை கொண்டுவரப்பட்டது.
இப்போது 5ம் வகுப்பு வரை மட்டும் கட்டாயத்தேர்ச்சி என்பது மீண்டும் பழையபடி பள்ளியை விட்டு  இடைநிற்றலும் விலகலும் அதிகரிக்கவே வழிசெய்யும். கல்வி குறித்த விழிப்புணர்வும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் அடுத்தபடிநிலையாக கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான பணியைச் செய்யாமல் 'வேதாளம் முருங்கைமரம் ஏறிய' கதையாக மீண்டும் 5ம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி என்பது கல்வித்துறையைப் பின்னோக்கி இழுக்கும் வேலையாகும். இது வருந்தத்தக்கது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது.

3 comments:

 1. SANTHANA TNPSC. THIYAGADURGAM.
  CELL: 8760273175, 9941049962

  • அடுத்து வரக்கூடிய TNPSC GR 2, VAO, GR 2A, GR 4
  தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

  • வாரத்தேர்வுகள், மாதத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

  • அறிவுக்கூர்மை பகுதியில் 25 க்கு 25 பெறும் வகையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

  • மேற்கண்ட தேர்வுகளுக்கு தனித்தனியாகவும், ஒன்றாக சேர்த்தும் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

  • ஒன்றாக சேர்த்து பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி உறுதி! இல்லையேல், கட்டணம் திருப்பி செலுத்தப்படும்.  BATCH 1 : MONDAY TO FRIDAY ( 09 : 30 AM TO 12 : 30 PM )

  BATCH 2 : MONDAY TO FRIDAY ( 02 : 00 PM TO 05 : 00 PM )

  BATCH 3 : SATURDAY & SUNDAY ( 10 : 00 PM TO 05 : 00 PM )


  ReplyDelete
 2. 1. செப்டம்பர் 2016 ல் இந்தியாவுடன் திறந்த வாகன கொள்கை எனப்படும் வான் போக்குவரத்து சேவைகள்
  குறித்தான ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு?
  அ) இரஸ்யா ஆ) சீனா இ) ஜப்பான் ஈ) கிரேக்கம்
  2. புதுமையான தொழில் முனைவுகளை ஊக்குவிப்பதுடன் தொடர்புடையது?
  அ) NHAI ஆ) NIDHI இ) NDIHI ஈ) NHIDI
  3. மத்திய அரசினால் “சிறந்த தோட்டக்கலை” மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ள
  மாநிலம்?
  அ) மஹாராஸ்டிரா ஆ) பஞ்சாப் இ) ஹரியானா ஈ) கேரளா
  4. டால்கோ நிறுவனத்துடன் தொடர்புடையது?
  அ) போர்ச்சுக்கல் ஆ) ஸ்பெயின் இ) நெதர்லாந்து ஈ) அயர்லாந்து
  5. வங்கி செயல்பாட்டில் ‘ரோபாடிக்ஸ்’ பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ள வங்கி எது?
  அ) எஸ்.பி.ஐ ஆ) ஐ.சி.ஐ.சி.ஐ இ) ஐ.ஒ.பி ஈ) கனரா வங்கி
  6. சுத்தமான மாநிலங்களின் பட்டியலில் 2 வதாக இருப்பது?
  அ) கேரளா ஆ) சிக்கிம் இ) தமிழ்நாடு ஈ) மிசோரம்
  7. இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்? ( உலகிலேயே பெரிய ஆற்று தீவு )
  அ) கட்ஜூ ஆ) மஜுலி இ) ஜும்மா ஈ) லிமஜூ
  8. ரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டையும் இணைத்து ஒன்றாக தாக்கல் செய்யலாம் என்று
  பரிந்துரைத்த குழுவின் தலைவர்?
  அ) விவேக் தேவ்ராய் ஆ) ஜோக்கோவிச் இ) ஆண்டிமுரே ஈ) ராஜ்நாத்சிங்
  9. “கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம்” இதனுடன் தொடர்புடைய மாநிலம்?
  அ) தமிழ்நாடு ஆ) கேரளா இ) ஜம்மு – காஷ்மீர் ஈ) சண்டிகர்
  10. நாடு முழுவதும் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி தகவல்களை பெறும் புதிய திட்டத்துடன் தொடர்புடையது?
  அ) பி.எஸ்.என்.எல் ஆ) ஏர்டெல் இ) ஐடியா ஈ) ஜியோ
  11. e-nivaran என்னும் இணையதள சேவையை நிறுவியுள்ள அமைப்பு?
  அ) CBI ஆ) HDFC இ) CBDT ஈ) TNPDS
  12. ஜி.எஸ்.டி முறையை அமல்படுத்துவதுடன் தொடர்புடைய சட்டத்திருத்தம்?
  அ) 278A ஆ) 279A இ) 280A ஈ) 281A
  13. International Seabed Authority எனும் அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது?
  அ) வெலிங்டன் ஆ) நியூயார்க் இ) ஜெனிவா ஈ) கிங்ஸ்டன்
  14. சிக்கிமில் _____ சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளது.
  அ) 92.8 ஆ) 99.98 இ) 98.2 ஈ) 95.8
  15. ‘ஏழு சகோதரிகள்’ என்று அழைக்கப்படும் இந்திய மாநிலங்களுடன் தொடர்பற்றது?
  அ) உத்திர பிரதேசம் ஆ) அருணாசலப்பிரதேசம் இ) திரிபுரா ஈ) அஸ்ஸாம்
  16. “ஆபரேசன் காம் டவுன்” இதனுடன் தொடர்புடைய மாநிலம்?
  அ) கர்நாடகா ஆ) தமிழ்நாடு இ) ஜம்மு – காஷ்மீர் ஈ) பாகிஸ்தான்
  17. தேசிய சட்ட ஆணையத்தின் தலைவர்?
  அ) எச்.எல்.தத்து ஆ) பிரமோத் கோக்லி இ) பல்பீர் சிங் சவுகான் ஈ) டி.எஸ்.தாக்கூர்
  18. பறவை காய்ச்சல் நோயற்ற நாடாக ________ தன்னை அறிவித்துள்ளது.
  அ) ஸ்பெயின் ஆ) நார்வே இ) இலங்கை ஈ) இந்தியா
  19. “யூத் அபியாஸ் 2016” எங்கு துவங்கப்பட்டது?
  அ) ஜார்கண்ட் ஆ) உத்திரகாண்ட் இ) மேகாலயா ஈ) சிக்கிம்
  20. ஆதார் சட்ட மசோதா எப்போது அரசிதழில் வெளியிடப்பட்டது?
  அ) மார்ச் 26 ஆ) ஏப்ரல் 26 இ) மே 26 ஈ) செப்டம்பர் 26

  ReplyDelete
 3. 36. ஒரு சலவை இயந்திரத்தின் விலை ரூ.7000/- விலையில் 30% தள்ளுபடி செய்யப்படுகிறது. பின்பு
  சேவைக்காக 20% விலை உயர்த்தப்படுகிறது. புதிய விலை ?
  அ) ரூ. 4200 ஆ) ரூ. 5100 இ) ரூ. 5280 ஈ) ரூ. 5880
  37. 40 பொருட்ளின் அடக்கவிலை 24 பொருட்களின் விற்பனை விலைக்குச் சமம், எனில் இலாப % என்ன?
  அ) 66.66% ஆ) 66.44% இ) 66.22% ஈ) 66.11%
  38. A – இன் வருமானம் B – இன் வருமானத்தை விட 30% குறைவு எனில், B – இன் வருமானம் A – இன்
  வருமானத்தை விட எவ்வளவு % அதிகம்?
  அ) 22.85% ஆ) 32.85% இ) 42.85% ஈ) 52.85%
  39. ஒரு செவ்வகத்தின் நீளம் 40% அதிகரிக்கப்படுகிறது மற்றும் அதன் அகலம் 40% குறைக்கப்படுகிறது
  எனில் புதிய செவ்வகத்தின் பரப்பளவு?
  அ) மாறாமலிருக்கும் ஆ) 0.016% அதிகரிக்கும் இ) 1.6% குறையும் ஈ) 16% குறையும்
  40. ஒரு நாற்காலியின் விலை முதலில் 10% அதிகரிக்கப்பட்டு பின்பு 20% அதிகரிக்கப்படுகிறது.
  எனில், குறைவு அல்லது அதிகரிப்பு சதவீதம் எவ்வளவு?
  அ) 32% அதிகரிக்கும் ஆ) 23% குறையும் இ) 44% அதிகரிக்கும் ஈ) 44% குறையும்
  41. ஒரு மேஜையின் விலை 40% குறைந்து, பின்பும் 30% குறைகிறது எனில், எவ்வளவு சதவீதம் குறைவு
  ஏற்படும்? அ) 44% குறைவு ஆ) 82% குறைவு இ) 72% குறைவு ஈ) 62% குறைவு
  42. 100 புத்தகங்களின் அடக்க விலை 60 புத்தகங்களின் விற்ற விலைக்கு சமம் எனில் லாப அல்லது நட்ட
  சதவீதம் என்ன? அ) 662/3% ஆ) 663/9% இ) 66% ஈ) 661/4%
  43. ஒரு பசுவை 25% லாபத்தில் ரூ. 6000 –க்கு விற்றால், அதன் அடக்க விலை?
  அ) 5000 ஆ) 4000 இ) 5800 ஈ) 4800
  44. 10% of 360 – 10% of 240 – ன் மதிப்பு காண்க.
  அ) 54 ஆ) 36 இ) 24 ஈ) 12
  45. ஒரு எண்ணின் 16% ஆனது 400 எனில், அந்த எண் யாது?
  அ) 4444 ஆ) 3333 இ) 2500 ஈ) 3500
  46. A : B = 5 : 4, B : C = 4 : 7, எனில் A : C : B காண்க.
  அ) 5 : 4 : 7 ஆ) 5 : 7 : 4 இ) 3 : 5 : 4 ஈ) 2 : 3 : 4
  47. m : n = 4 : 2 எனில், (4m + 5n) : (4m – 5n) –இன் மதிப்பைக் காண்க.
  அ) 13 : 3 ஆ) 9 : 4 இ) 11 : 1 ஈ) 9 : 1
  48. A : B = 7 : 9, B : C = 15 : 7 எனில், A : C காண்க.
  அ) 5 : 3 ஆ) 3 : 5 இ) 7 : 21 ஈ) 4 : 15
  49. x : y = 8 : 6 எனில், 5x-4y : 3x+2y –க்கு சமமானது?
  அ) 2 : 21 ஆ) 4 : 9 இ) 4 : 42 ஈ) 42 : 4
  50. 480 தொகையினை மூன்று பகுதியாக 6 : 4 : 2 என்ற விகிதத்தில் பிரித்தால் மிகப்பெரிய பகுதியை காண்க.
  அ) 200 ஆ) 240 இ) 260 ஈ) 280
  51. 163.5 : 46 – இன் விகிதம் காண்க.
  அ) 1 : 16 ஆ) 16 : 1 இ) 4 : 1 ஈ) 16 : 4
  52. கூட்டு விகித சமன் காண்க. (2:4) (3:4) (4:9)
  அ) 2 : 15 ஆ) 15 : 2 இ) 2 : 12 ஈ) 15 : 1
  53. 2 : 5 என்ற விகிதத்துடன் எந்த எண்ணைக் கூட்ட அந்த விகிதம் 5 : 6 ஆக மாறும்?
  அ) 12 ஆ) 10 இ) 13 ஈ) 11
  54. இரு எண்களின் விகிதம் 5 : 4, அவற்றின் கூடுதல் 180 எனில், அவற்றில் பெரிய எண் யாது?
  அ) 100 ஆ) 80 இ) 60 ஈ) 50
  55. அசல் ₹ 20,000-க்கு 5% வருட வட்டி விகிதத்தில் 3 வருடத்தில் கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு?
  அ) ₹ 22,400 ஆ) ₹ 23,000 இ) ₹ 21,400 ஈ) 23,400
  56. ₹ 10,000-க்கு 31/2 வருடங்களுக்கு 8% வருட வட்டி விகிதத்தில் தனிவட்டி காண்க.
  அ) ₹ 2400 ஆ) ₹ 2800 இ) ₹ 2700 ஈ) ₹ 2900
  57. ₹ 5,000 - த்தை 10% வருட வட்டிவீதத்தில் 73 நாட்களுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க.
  அ) ₹ 80 ஆ) ₹ 120 இ) ₹ 100 ஈ) ₹ 140
  58. ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ₹ 1000 ஆனது ₹ 1150 ஆகிறது. 3% கூடுதலாக வட்டி
  வீதம் இருப்பின், தற்போதைய மொத்த மதிப்பு?
  அ) ₹ 1400 ஆ) ₹ 1300 இ) ₹ 1140 ஈ) ₹ 1240
  59. ஒரு தொகையானது 3 வருடங்களில் ₹ 725 ஆகவும், 4 வருடங்களில் ₹ 800 ஆகவும் மாறுகிறது எனில்,
  அந்த தொகை எவ்வளவு?
  அ) ₹ 600 ஆ) ₹ 500 இ) ₹ 525 ஈ) ₹ 550
  60. ஒரு தொகை 20 வருடத்தில் தனிவட்டியில் இரண்டு மடங்கானால் வட்டி வீதம் என்ன?
  அ) 5% ஆ) 10% இ) 20% ஈ) 50%

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.