Sunday, 11 September 2016

வள்ளுவரும் வானிலிருந்து வாழ்த்தி மகிழ்கிறார்.

ஒரு பேருந்தின் சக்கரம்
ஐந்து வயது குழந்தை
மாரியப்பன் தங்கவேலின்
வலது காலை நசுக்கி நின்றது.

வலியால் அலறித்துடித்தது
அந்தக் குழந்தை...

இருபத்தோரு ஆண்டுகளுக்குப்பிறகு
ரீயோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில்-
அந்த குழந்தை  வளர்ந்து 21வயது ஊனமுற்றோர் பிரிவில் வீரனாக களத்தில் நிற்கிறது...

1.74 mts Hight to be cleared ...
5.8 அடி உயரம்.

தங்கவேலு உள்ளிட்ட 12 வீரர்கள்
T-42 கால் ஊனமுற்றோர் பிரிவில்
அந்த உயரத்தை தாண்டி
அடுத்த உயரத்திற்கு தேர்வாகின்றனர்.

அன்று,
நசுங்கிய காலைப் பார்த்து
அருகிருந்த அனைவரும்
கண்ணீர் விட்டு கலங்கி வருந்தினர்.

மருத்துவமனையில்-
முதன் முதலாய் அவன் இடது கால்
வலது காலின் சுமைகளையும் தாங்கிக் கொண்டு தாளமுடியாமற் தத்தத்தொடங்கியது.

Now the Height is 1.77...,
மாரியப்பனுடன் இருவர் போட்டிக்களத்தில்
தொடர்கின்றனர்...

ஒரு உன்னதமான லட்சியத்தை
தனக்கு இன்னொரு காலாக்கிக் கொண்டு
வளர்ந்தது அவன் மனம்.
சிதைந்த கால்களுடன்
சிகரங்களை நோக்கி நடக்க முயன்றது.

Now 1.83 mts mark to be cleard...

மீண்டும் அதே மூன்று போட்டியாளர்கள்
மாரியப்பனை தொடர்கிறார்கள்...

And Now 1.86mts.

அமெரிக்க வீரர் உலக சாதனையாளர் சாம் குருவ் இந்த உயர இலக்கினைத் தாண்டி கடுமையான போட்டியை ஏற்படுத்துகிறார் மாரியப்பனுக்கு!

"வாழ்க்கை தரும் வலிகளில் என்னைத் தேற்றுவதற்கு
என் மனதைப்போல் உற்ற நண்பன் யாருமில்லை,
என் ஆன்மாவைப்போல் வேதனையில் சிறந்த மருந்து எதுவுமில்லை,
உன் சாதனைக்கு வானம் தானடா வரைவெல்லை!"
என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.

Next 1.89 mts height mark 6அடிகள் 3அங்குல உயரம்...
அமெரிக்கவீரர் வெற்றி வாய்ப்பை இழக்கிறார்.

இப்போது மாரியப்பன்
முறை...

தன் வேதனைக்காக அழுத உலகத்தை
தன் சாதனைக்காக
ஆனந்த கண்ணீர் வடிக்கவைக்க வேண்டும்!
சாத்தியப்படுமா...?

இலக்கை நோக்கி அசைகிறான்-
அவனை அப்படியே தூக்கி Cross barக்கு வெளியே எறிந்து
ஓய்ந்து வீழ்ந்தது அவன் இடது கால்!

அந்த ஒற்றைக்காலுக்குத்தான்
எத்தனை தவ வலிமை?

அன்று விபத்து ஏற்படுத்திய
வலியால் அழுத கண்களில்
ஆனந்த கண்ணீரைச்
சிந்தவைக்கின்றன அவன் கால்கள்.

வள்ளுவரும் வானிலிருந்து
வாழ்த்தி மகிழ்கிறார்.

'பொறியின்மை யார்க்கும் பழியன்று
அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி'

பள்ளி நாட்களில் பயின்ற குறளுக்கு சான்றாக ஒருவன் கிடைத்தது வள்ளுவருக்கு மட்டுமா மகிழ்ச்சி?!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.