Saturday, 2 July 2016

ஆபத்தான விஞ்ஞான வளர்ச்சி – ” Facebook ” …!!! பக்குவப்படாதோரை மீட்பது எப்படி…..?

facebook -logo
facbook-like-and-share-thumbs-up
தமிழ்நாட்டையே குலுக்கிய ஒரு மரணத்தின் முடிச்சு
ஒருவழியாக அவிழ்க்கப்பட்டுள்ளது.
எத்தனை பேருக்கு மன உளைச்சல்…
எத்தனை பேருக்கு வசவு …
எத்தனை பேருக்கு உறக்கம் போனது….
எத்தனை பேர் மீது சந்தேக வலைவிரிப்பு …
எத்தனை ஜாதிகள் / மதங்கள்
வம்புக்கு இழுக்கப்பட்டன, வசை பாடப்பட்டன …
இத்தனைக்கும் இறுதியில் காரணமானது எது….?
இளம் வயது – பெண்களோ, ஆண்களோ,
பருவ உணர்வுகளின் காரணமாகவும்,
ஹார்மோன்களின் தூண்டுதல்கள் காரணமாகவும்,
தங்களைத் தாங்களே ரசிக்கும் மனநிலையிலிருந்து
சற்று பிசகிப் போய், தங்களை மற்றவரும் பார்த்து,
ரசித்து, புகழ வேண்டும், பாராட்ட வேண்டும் என்கிற
மனோ நிலைக்கு ஆளாகின்றனர்….
ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் ஆகாத நிலையிலேயே,
ஒருவரோடு இன்னொருவர் பழகாத நிலையிலேயே,
ஒருத்தரின் உண்மையான வயது, படிப்பு,
தொழில் ( ஜாதி, மதம்….? )
இன்னவென்று தெரியாத நிலையிலேயே –
அவருடன் நட்பு கொள்ள வேண்டும் என்று எந்தவித
அவசியமும் இல்லாத நிலையிலேயே –
இளம் பெண்களின் புகைப்படங்கள் வெகு சுலபமாக
அனைவரின் பார்வைக்கும் கிடைக்கின்றன…
Just like that – ஒரு ” like ” போட்டுவிட்டு,
உடனடியாக நட்பை துவங்கவும், தொடர்ந்து
சம்பாஷனைகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள்
வெகு சுலபமாக ஏற்படுத்தித் தரப்படுகின்றன.
இளைஞர்களின் விபரீத உணர்வுகளுக்கு, ஆசைகளுக்கு –
தெரிந்தோ, தெரியாமலோ –
இவை தூண்டில் போடுகின்றன…
இளம் பெண்கள் சற்று தீவிரமாகவே யோசிக்க வேண்டும்…
அவர்களுக்கு Facebook அவசியம் தேவையா..?
அது இல்லாமலே, மற்ற gadget-களின் உதவியுடன்
அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள
முடியாதா…?
சரி ஒருவேளை அப்படி அவசியம் என்று தோன்றினாலும்
கூட – முன்பின் அறிமுகமில்லாதவர்களின் பார்வைக்கு,
இவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொண்ட
விதம் விதமான புகைப்படங்கள் போவது அவசியமா ..?
அந்த புகைப்படங்களை அங்கே வெளியிடுவதால்,
அவர்களுக்கு ஏற்படும் சுயதிருப்தியை விட –
வேண்டாத, தவிர்க்கப்பட வேண்டிய நட்புகளும்,
உறவுகளும், ஏற்பட்டு அதனால் விளையக்கூடிய
தொந்திரவுகளே அதிகம் என்கிற நிலையில்
இது தேவையா…?
ஒருவேளை facebook account தேவை என்று
தோன்றினாலும் கூட, அதில் சொந்த பெயரையோ,
புகைப்படங்களையோ – போடவேண்டியதன் அவசியத்தை
பற்றி, அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை பற்றி
கொஞ்சம் யோசிக்க வேண்டாமா…?
சேலை முள்ளில் சிக்கினாலும், முள் சேலையில்
சிக்கினாலும் – இறுதியில் பாதிப்பு சேலைக்கு தானே…?
இந்த உணர்வு இளம் பெண்களுக்கு இருக்க வேண்டாமா…?
அதுவும் இத்தகைய அசட்டு ஆசைகள் – விபரீதங்களில்
கொண்டு போய் விடுவதை அண்மைக்காலங்களில்
கண்கூடாக பார்த்த பின்னராவது …?
இதைப்பற்றியெல்லாம் யோசிக்கும் திறன் இல்லாத,
பக்குவப்படாத இளம் வயதினரிடையே facebook
அனுமதிக்கப்பட வேண்டுமா என்கிற கேள்வியையே
இத்தகைய சம்பவங்கள் விதைக்கின்றன….?
சமுதாய அக்கரையுடைய அமைப்புகள்,
இந்த பிரச்சினையிலிருந்து, இன்றைய இளைஞர்களை
வெளியே கொண்டு வருவது எப்படி என்று அவசரமாக
யோசிக்க வேண்டும்.


No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.