Tuesday, 5 July 2016

இதை அவரவர் மனைவியிடம் சொல்வதால் வரும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது....!!!!!!!😀😀😀

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..! - செல்வம் பெருகும்....


கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர். ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.
 

ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது வேதனைதான்......

 இதை அவரவர் மனைவியிடம் சொல்வதால் வரும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது....!!!!!!!😀😀😀

1 comment:

 1. 7th pay commission special


  எல்லோர்க்கும் தெரிந்த பழங்கதை ஒன்று உண்டு.
  ஒரு
  காட்டில் ஒரு திருடன் தங்கி அந்த வழியாக வருவோர் போவோர் எல்லோரிடமும் வழிப்பறி செய்துவிட்டு , கட்டிய துணியோடு மட்டும் துரத்தி விடுவானாம் .
  அவனை திட்டாத சபிக்காத ஆட்களே அந்த பகுதியில் எவருமே இல்லை.
  அந்த திருடனுக்கும் வயதாகிவிட்டது. அதனால் அப்பாவைத் தொடர்ந்து மகன் வழிப்பறி செய்ய தொடங்கினான்,
  .
  அவனுடைய அப்பன் படுக்கையில் சாகும் தருவாயில் கிடந்த போது மகனை அழைத்து 'மகனே , என்னை திட்டாத ஆளே இங்கில்லை. ஆனால் இனி கொஞ்சநாளில் சாகப்போறேன். இந்த கொஞ்சநாளிலாவது என்னை பாராட்ட வேண்டும் . அதுக்கு நீதாண்டா ஏதாவது செய்யனும்னு கெஞ்சினான் .
  . .
  அன்று முதல் அந்த மகன் வழிப்பறி செய்ததோடு மக்களோட துணியை கூட விடாமல் உருவி விட்டான் .
  பாதிக்கப்பட்ட மக்கள்
  அடேங்கப்பா
  இவன் அப்பனே தேவலாம் . புண்ணியவான்.
  மானத்தோடாவாவது அனுப்பினான்.
  இந்த பயலுக்கு அவங்கப்பன் நல்ல மனுஷன்தான்..
  என பேச துவங்கி விட்டார்கள் . .
  . . .
  தகப்பன் - 6thpay commission
  மகன் - 7th pay commission
  --😩😩😩😩😩😩

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.