Saturday, 25 June 2016

சிங்கம் போல வரனும்

சிங்கம் தன் குட்டியை சிங்கமாதான் வளர்க்குது.

புலி தன் குட்டியை புலியாத்தான் வளர்க்குது.
ஏன் ஒரு சின்ன எலிகூட தன் குட்டியை எலியாத்தான் வளர்க்குது.
ஆனா மனுஷன் தன் குழந்தையை மனுஷனாவா வளர்க்குறான்?

குதிரை மாதிரி ஓடுன்றான், மயிலப்போல ஆடுன்றான், குயிலப்போல பாடுன்றான்.
ஒரு சின்ன குழந்தை தன் வீட்ட சுத்தி இருக்குற குழந்தைகளோட விளையாடுற நேரத்துல கண்ட கோச்சிங்க்குனு பணத்தை கட்டி கௌரவத்துக்கு சேத்துவிட்டுர்ரான். குழந்தைக்கு  திறமை வளர்ந்திருக்கானு யோசிச்சானே தவிர  என்னைக்காவது 'குழந்தைகிட்ட மனுசனா வாழ தேவையான நல்ல குணங்கள வளர்த்திருக்கிறோமா' யோசிச்சு பாக்குறானா?

 குழந்தைய நீ கடைசிவரைக்கும் மனுசனா வளர்க்கல. அப்புறம் எப்படி உன் கடைசி காலத்துல உன் குழந்தை உன்னை பாத்துக்கும்? கொண்டுபோய் முதியோர் இல்லத்திலதான் சேர்க்கும்...

 இதைப்புரிஞ்சுகிட்டா கடைசி காலத்துல வீட்டுசோறு,
இல்லன்னா . . . . . . . . . .
 {சொல்ல விரும்பல}

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.