Thursday, 26 May 2016

பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடையாதவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

அடிமைகளை உருவாக்கும் இந்த மனப்பாட கல்வியை விழுந்து விழுந்து மண்டைக்குள்
ஏற்றி அதை அப்படியே பேப்பரில் வாந்தி எடுப்பவன் முதல் மாணவன் என்றால் அதை ஒரு கணினி கூட செய்து விடும் என்பதாலும் . 
கடைசி பெஞ்சில் இருந்தாலும் வேறு பல திறமைகளை உள்ளடக்கிய உங்களை நான் வாழ்த்துகிறேன்

நமது நாட்டின் பிரதமர் டீக்கடைதான் நடத்தினார் நமது முதல்வரோ பத்து வரைதான் படித்திருக்கார் ஆக 

திறமையை வளர்ப்பதற்கும் -சமூக அந்தஸ்து பெறுவதற்கும் இந்த கல்வி உதவாது .
ஆனால் உங்கள் பெற்றோர் உங்களை படி படி என துன்புறுத்தி இருக்க்லாம் இந்த தேர்வில் நீங்கள் தோல்வி அடைந்து இருக்கலாம் இதெற்கெல்லாம் மனம் உடைந்து நொந்து போக கூடாது 

அகாடமி கல்வி அடிமைகளை உருவாக்குகிறது 

முதல் மதிப்பெண் பெற்ற பெண் டாக்டராக போகிறேன் என்கிறார் 

ஆனால் உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன் - நீங்கள் தலைவர்களாக தகுதி பெற்றவர்கள் 

ஆமாம் இந்த நாடு தலைவர்களை கேட்கிறது அரசியல் பாதை உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது .

படிக்காதவன் மட்டுமே தைரியமாக துணிந்து முடிவெடுக்க முடியும் படித்தவன் மண்டைக்குள் சென்றிருக்கும் பல்வேறு விதமான டேட்டாக்கள் அவனை முடிவெடுக்க முடியாமல் வைத்து விடுகின்றன . 

பெரிய விஞ்ஞானி  தாமஸ் ஆல்வா எடிசனே பள்ளி கூடத்தில் சரியா படிக்கவில்லை என்று துரத்தி அனுப்ப பட்டவர் 

ஆகவே செல்வங்களே நீங்கள் திறமையை சமூகத்தில் வெளிப்படுத்த இந்த சமூகம் எனும் களம் காத்து கொண்டு இருக்கிறது 

முன்னேறுங்கள் நமக்கெதற்கு இந்த முதலாளித்துவ படிப்பும் அடிமை வேலையும் 

சமூகத்தை புரட்டி போடும் வாழ்க்கை கல்வியை கற்க புறப்படுங்கள் 

மார்க்சிம் கார்கியை போல .

1 comment:

  1. No words to appreciate .....u r really great admin sir.........

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.