Saturday, 21 May 2016

வாழ்க்கை - ஸ்டீவ் ஜாப்

ஆப்பிள் நிறுவனத்தின்
ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...

நான் வணிக உலகில்
வெற்றியின் உச்சத்தை
அடைந்திருக்கிறேன்.

பிறரின்
பார்வையில் என் வாழ்க்கை
வெற்றிகரமானது.

எப்படியிருந்தாலும் என்
பணிச்சுமைகள் எல்லாம்
தாண்டி நானும் வாழ்க்கையில்
சிறிது சந்தோசங்களை
அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே
வாழ்க்கையில்லை என்பதை
இறுதியில் தான் அறிந்து
கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து
கொண்டு என் முழு
வாழ்க்கையையும் திரும்பி
பார்க்கும் இந்த தருணத்தில்
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த
அங்கீகாரங்கள், பணம் , புகழ்
எல்லாம் செல்லா காசாக ,
அர்தமற்றதாக மரணத்தின் முன்
தோற்று போய் நிற்பதை
உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க
வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ
இயந்திரங்களின் மெல்லிய
சத்தங்கள் மட்டுமே காதுகளில்
ரீங்கரிக்கிறது.

கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில்
உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு
போதுமான பணம் சம்பாரித்த
பின், பணத்திற்கு
சம்மந்தமில்லாத
விஷயங்களையும் சம்பாரிக்க
தொடங்க வேண்டும் என்பது
இப்போது புரிகிறது.

அது
உறவாகவோ, இல்லை எதாவது
கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ
இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே
நோக்கமாக கொண்டு ஓடும்
மனிதனின் வாழ்க்கை
முற்றிலும் வேறு திசையில்
திரும்பிவிடுகிறது என்
வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம்
அனைவரின் மனதில் இருக்கும்
அன்பை உணரசெய்யும் சக்தியை
கொடுத்திருக்கிறார், பணத்தால்
நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும்
பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும்
இங்கு கொண்டுவர முடியாது.

நான் மகிழ்ந்திருந்த என்
நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன்
இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள்
உங்களுடன் பயணிக்கும்.

வாழ்க்கைக்கு எந்த
எல்லைகளுமில்லை. எங்கு
செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள்.

தொட
நினைக்கும் உயரத்தை தொட
முயற்சியுங்கள்.

நீங்கள்
வெற்றியடைவது உங்கள்
எண்ணத்திலும் கைகளிலும்
தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள்
என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,

ஆனால் அந்த
பணத்தின் மூலம் உங்கள்
வலியை, உங்கள் துயரை யாரும்
வாங்கிகொள்ளுமாறு செய்ய
முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும்
பொருட்கள்
தொலைந்துவிட்டால் மீண்டும்
வாங்கிவிடலாம்.

ஆனால் நீங்கள்
தொலைத்து அதை பணத்தால்
வாங்க முடியாது என்ற ஒன்று
உண்டென்றால் அது உங்கள்
வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும்
பரவாயில்லை , இப்போது
வாழ்க்கையை வாழ
ஆரம்பியுங்கள்.

நாம் நடித்து
கொண்டிருக்கும் வாழ்க்கை
எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு,
அன்பை வாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் சந்தோசமாக
வைத்து கொள்ளுங்கள்.

அனைவரையும் மனமார
நேசியுங்கள்.
மரணப்படுக்கையில் ஸ்டீவ்..

1 comment:

  1. கணவனின் காதல் :

    {ஒரு பெண்
    ஷாப்பிங் போனார்..
    கேஷ் கவுன்டரில்
    பணம் கொடுக்கும் போது
    அவரது கை பைக்குள்
    டி.வி ரிமோட்
    இருப்பதைப் பார்த்து,
    கடைக்காரருக்கு
    ஆச்சரியம்.. }

    "நீங்க டி.வி ரிமோட்டை
    எப்பவுமே உங்க பையிலதான்
    வச்சிருப்பீங்களா? "
    என்று கேட்டார்..
    அதற்கு அந்தப் பெண்
    "இல்லை இல்லை, என் கூட
    ஷாப்பிங் வரமாட்டேன்னு
    என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு..
    அதான்
    அவர் டி.வி பார்க்காம
    இருக்கறதுக்காக
    ரிமோட்டை கையோட
    தூக்கிட்டு வந்துட்டன்" என்றாள்..

    *கருத்து : மனைவி எங்கே
    கூப்பிட்டாலும்
    செல்ல மறுக்காதீர்கள்]

    இதைக்கேட்டு கடைக்காரர்
    சிரித்தபடி,
    அந்த பெண் வாங்கிய
    பொருட்களை எல்லாம்
    எடுத்து உள்ளே
    வைத்தார்..
    "என்னாச்சு? என்று
    ஆச்சரியத்தோடு
    அந்த பெண் கேட்டார்..
    அதற்கு அந்த கடைக்காரர்
    சொன்னார் "உங்க கிரடிட் கார்டை
    உங்க ஹஸ்பண்ட் பிளாக்
    பண்ணிருக்கார்" என்று..

    *கருத்து : உங்கள் கணவரின் ஆசைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்]

    அந்த பெண் உடனே
    தன் பையிலிருந்து
    தனது கணவனின்
    கிரடிட் கார்டை
    எடுத்து நீட்டினார்..
    அது பிளாக்
    செய்யப்படாமலிருந்தது..
    இப்போது அந்த பெண்
    கடைக்காரரைப் பார்த்து
    ஏளனமாக ஒரு
    சிரிப்பு சிரித்தார்..

    *கருத்து : மனைவியின் பவரை
    குறைத்து மதிப்பிடாதீர்கள்]

    அந்த கிரடிட் கார்டை
    ஸ்வைப் செய்தவுடன்,
    "ஒன் டைம் பாஸ்வேர்டை
    என்டர் செய்யவும்.,
    அது உங்கள் மொபைலுக்கு
    அனுப்பப்பட்டிருக்கிறது" என்று
    மெஷின் ஒளிர்ந்தது..

    *கருத்து : ஆண்கள் சமத்தாக
    இருந்தாலும் கூட
    மெஷின்கள் அவர்களை
    சாமர்த்தியமாக காப்பாற்றும்]

    அந்த பெண் பொருட்கள்
    எதுவும் வாங்காமல்,
    மனம் நொந்து போய்
    கடையிலிருந்து
    வெளியே வந்தார்.
    அப்போது அவளுடைய
    மொபைலுக்கு
    ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது..
    அது ஒரு ஃபார்வர்டு மெஸேஜ்..
    அதில்
    "உங்கள் ஒன் டைம் பாஸ்வேர்டு"
    என்றிருந்தது..
    அது அவளுடைய கணவர்
    அனுப்பியது..
    உடனே அவள் முகம்மலர்ந்தது.,
    ஆனால்,
    அவள் கண்களில்
    கண்ணீர் மட்டும் தேங்கி நின்றது..
    மீண்டும் கடைக்குள் நுழைந்தவள்
    வேண்டிய பொருட்கள்
    அனைத்தையும் வாங்கினாள்..

    *கருத்து :
    உங்கள் கணவரைப் பற்றி
    நீங்கள் என்ன
    வேண்டுமானாலும்
    நினைத்துக்கொள்ளுங்கள்.,
    ஆனால்,
    அவர்கள் எப்போதும்
    தன் மனைவிக்காக
    தியாகம் செய்பவர்களாகவே
    இருக்கிறார்கள், இருப்பார்கள்]

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.