Saturday, 9 April 2016

யாருக்கும் வெட்கமில்லை. – (உண்மையை உரக்க‍ச் சொல்கிறது)

யாருக்கும் வெட்கமில்லை. – (உண்மையை உரக்க‍ச் சொல்கிறது)

இந்த (ஏப்ரல், 2016) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்
தமிழ்நாட்டு அரசியல் கேவலத்தின் உச்ச‍க்கடத்திற்குச் சென்று கொண்டி ருக்கிறது. கூட்ட‍ணிக் கூத்து கூத்தாடிகளின்
கூத்தையும் வென்றிடும் போலிருக்கிறது. 

காத்திருந்த குடும்பம் கலங்கிப்போனதும்… காக்க வைத்த‍ தலைவர் வேறு அணிக்குள் காணாமல்போனதும் … கதவு திறக்காது என்று தெரிந்தும் சிலர் காத்துக் கிடப்பதும்… காணாம ல் போனவர்களை தேடித் தேடி தன் அணிக்கு ஆள் பிடிப்ப‍தும் … யப்பா… அக்னி நட்சத்திரத் திற்கு முன்பே மண்டை காயும் காட்சிகள் …
தொண்டர்களின் கருத்திற்கு மாறாக கூட்ட‍ணி வைத்த‍தால் ஒரு கட்சியேபிளவுபட்டுவருவதும்… என்னுடன்சேரவில்லையா நீ, உன் குடும்பத்தையே கலைக்கிறேன் பார் என்று பழி வாங்குவதும், தனிப்பட்ட‍ முறையில் தரக் குறைவாய் விமர்சிப்ப‍தும் தமிழக அரசியலுக்கு தலை குனிவுதான்.
இவ்வ‍ளவு செலவுசெய்து தேர்தலில்நிற்பது எதற்கு ? நாங்கள் அதை சம்பாதிக்க‍ வேண்டாமா எனவேதான் வெளியேறுகிறோம். என கொஞ்சங்கூட கூச்ச‍மேயில்லாம ல், வெட்கமேயில்லாமல் சிலர் அறிக்கை விடு வது தேர்தல் என்பது சூதாட்ட‍ம், அதில் பதவி என்பது விட்ட‍தைபிடிக்கும் விளையாடு என்று நியாயப்படுத்தி விடுவார்களோ என அஞ்சத் தோன்றுகிறது.
வேட்பாளர் என்பவர் மக்க‍ளுக்காக மக்க‍ளால் தேர்ந்தெடுக்க‍ப்படும் சமூகநலத்தொண்டர் என்பது மாறி… கட்சித்தலைவர்களால் ஏலத்தில் பொறுக்கி எடுக்க‍ப்படுகிற காய்கறிகளாய் மாறி யிருப்ப‍து என்ன‍ கொடுமையடா சாமி? எவ்வ‍ளவு பணம் செலவு செய்வாய்?.. கட்சிக்கு எவ்வ‍ளவு கப்ப‍ம்கட்டுவாய்? உன் ஜாதி மக்க‍ளிடையே உன் செல்வாக்கு என்ன‍? என்று கேட்பது மாடு பிடிக்கும் வியாபாரம் அல்ல‍வா? இது ஜன நாயகத்திற்கான நேர்க்காணல் அல்ல‍. பண நாயகத்தின்நேர்க் கோணல் அல்ல‍வா?
அரசியல் என்பது ஒருவேள்வி என்பதிலிருந்து தியாக மாக மாறி… சேவையாக சுருங்கி… வியாபாரமாக விழுந்து கிடப்பதை பார்க்கும்போதுஅயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்று கண்ண‍தாசன் அன்றே சொன்ன‍தில் தவறி ல்லை என்று தானே தோன்றுகிறது.
இலவசம், பிரியாணி, குவார்ட்ட‍ர், வாக்குக்கு துட்டு என்றுஅடித்தட்டு மக்க‍ளை மயக்கியும்.. கமிஷன், கோட்டா, காண்டிரா க்ட் அனுமதி என்று மேட்டுக் குடியினருக்கு வலை விரி த்தும்.. நல்லாட்சி, சலுகைகள் இடஒதுக்கீடு என்று நடுத்த‍ரவர்க்க‍த்தை நம்பவைத்தும், ஆட்சியைப் பிடிக் கும் அரசியல் அவலம் அடியோடுஅகற்றப்பட வேண்டும் அதற்கு…
மக்க‍ள் எவ்வ‍ழி மன்ன‍ன் அவ்வ‍ழி என்கிற அநாகரிக அரசியல் தந்திரம் ஒழிய வேண்டும். மன்ன‍ன் எவ்வ‍ழி மக்க‍ள் அவ்வ‍ழி என்கிற ஆரோக்கிய அரசியல் மந்திரம் ஒலிக்க‍ வேண்டும் என்பதே நமது பிரார்த்த‍னை. 

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.