Sunday, 24 April 2016

சாத்தான்

உலகில் தோன்றிய எல்லா மதங்களுமே நல்லனவற்றையே உரைக்கின்றன
ஆனால் அவற்றை பின்பற்றுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு பலர் செய்யும் பித்தலாட்டங்களால் அவற்றின் உண்மைத்தன்மை கேள்விக்குரியாதாகிவிடுகிறது ,
ஒருமதத்தை இழிவுபடுத்துவதால் இன்னொரு மதம் உயர்ந்துவிடப்போவதில்லை அதுமட்டுமல்ல பிறமதங்களை தவறாக சித்தரிப்பதன்மூலம் எம் மதத்தினையும் வளர்த்துவிடவும்முடியாது , 
ஒவ்வொருமதத்திலுமுள்ள நல்லவிடயங்களை நாமாக தேடியறிந்தால் உண்மையை உணரலாம் ஆனால் இறைவனுக்கு இடைத்தரகர்கள்போல செயற்படும் சில போதகர்கள் பூசாரிகளின் பயனற்ற போதனைகளை கேட்போமாயின் நாம்தான் வீணாகக்குழம்பிப்போவோம் 
நான் மதவாதியல்ல ஆனால் ஒவ்வொரு மதத்தையும் மதிக்கிறேன் அதனால் அந்தந்த மதத்திலுமுள்ள புனித நூல்களை அவற்றில் என்ன கூறப்பட்டிருக்கின்றன என்பதை அறியும் ஆவலில் வாங்கிப்படித்திருக்கிறேன்
அந்தவகையில் பைபிளில் எழுதப்பட்டிருப்பதற்கும் சில போதகர்கள் போதிப்பதற்குமிடையில் பல வேற்றுமைகள் வித்தியாசங்கள் , மாறுபாடுகள் இருப்பதைக்கண்டிருக்கிறேன் அவற்றில் ஒன்று நேரடியாக என் வீடு தேடி வந்தது அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்கிறேன்..
அன்று வியாழக்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு காலை 6:30 மணியளவில்தான் வீடு திரும்பியிருந்தேன் சற்று நேரம் தூங்கலாமென்று படுக்கையில் சோர்ந்து அயர்ந்து தூங்கிவிட்டேன் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியாது ஆனால் திடிரென்று கேட்ட வீட்டு அழைப்புமணிசத்தம் என்னை எழுப்பிவிட்டது, அட இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணியவாறு கைக்கடிகரத்தைப் பார்க்கிறேன் அது 10:00 மணியென்று காட்டுகிறது, சரியான தூக்கம் இன்னும் தூங்கியிருக்கலாமே யாரது விடிய வெள்ளன என்று முணுமுணுத்துக்கொண்டு கதவைத்திறந்து வெளியே வந்துபார்த்தேன் மூன்றுபேர் இரண்டு வயதான பெண்களும் ஒரு இளைஞனும் கையிலே சில சஞ்சிகைகளையும் வேறுசில புத்தகங்களையும் வைத்திருந்தார்கள் , பார்த்தவுடனேயே புரிந்துவிட்டது அவர்கள் யாரென்று சரி என்றுவிட்டு வெளியே வந்து அவர்கள் முன் சென்றேன் நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன் , வந்திருந்த பெண்களில் ஒருவர் மிகவும் பண்பாக கனிவான குரலில் "நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் உங்களுடன் பேச விரும்புகிறோம் சிறிது நேரத்தை எங்களுக்காக ஒதுக்கமுடியுமா? என்று பதிலளித்தார்.
நானும் சரியென்றதும் அவர்கள் மளமளவென்று பல கேள்விகளை கேட்கத்தொடங்கினார்கள்
வழக்கம்போல
உங்கள் பெயரென்ன?
நீங்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்?
உங்கள் தாய்மொழி என்ன?
நீங்கள் எந்த மதத்தைச்சேர்ந்தவர்?
எனக்கு நித்திரைக்கலக்கம்வேறு இவர்களும் கேள்விகள் கேட்டவுடன் என்ன செய்வதென்று தெரியவில்லை அவர்களின் கேள்விகளுக்கு நானும் பதிலளித்தேன் ,
"ஓ தமிழா உங்கள் தாய்மொழி அதுமிகவும் கடினமான மொழியாயிற்றே அது இந்தியாவில் பேசப்படும் மொழியல்லவா " என்று ஒருவர் தன் புலமையைக் காட்டினார் அத்தோடு எங்களிடம் பலமொழி சஞ்சிகைகள் இருக்கின்றன ஆனால் தமிழில் இல்லை நீங்கள் விரும்பினால் அவற்றை ஜெர்மனியிலிருந்து வரவழைப்போம் என்றார் ஒருவர் நான் கூறினேன் வேண்டாம் நான் அடிக்கடி அயல் நாடுகளுக்கு செல்பவன் அங்குள்ள என் உறவினர்கள் தமிழில் விழித்தெழு,காவற்கோபுரம் புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் அவற்றை நான் வாங்கிப்படிப்பதுண்டு என்றதும் அந்தப்பேச்சு நின்றது ,
வந்திருந்த அந்த இளைஞன் தன் பங்கிற்கு உங்கள் மதத்தைபற்றி என்ன நினைக்கிறீர்? உங்கள் இந்துமதம் குழப்பமானதல்லவா? ஆயிரக்கணக்கானகடவுள்களையும் கல்லையும்,மரத்தையும் மிருகங்களையும் வணங்குபவர்களல்லவா?
எதற்காக இத்தனை கடவுள்களை வணங்கவேண்டும் இது சரியா? முறையா என்று கேட்டதும் எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது ஆனாலும் அடக்கிகொண்டு அவருக்கு இவ்வாறு பதிலளித்தேன்
ஒவ்வொரு நாட்டிலும் ஜனாதிபதியோ பிரதமரோ இருப்பார் ஆனால் அவர்களால் தனித்து நாட்டை நிர்வகிக்க முடியாது அவர்களின்கீழ் பல அதிகாரிகள் அமைச்சர்கள்,நகரசபை ,கிராமசபை என்பன இருக்கின்றன அவர்களின் மூலம் இலகுவாக நாட்டை நிர்வகிக்க முடியும் ஒரு நாட்டிற்கே இப்படியென்றால் அகிலமெல்லாம் ஆளும் அந்த இறைவனுக்கு நிச்சயமாக பல அதிகாரிகள் தேவைப்படுவார்கள் அந்த அதிகாரிகள்தான் சிறுதெய்வங்கள்,உபதெய்வங்கள் என்று பதிலளித்தேன் நான் அப்படி பதிலளித்ததும் அந்த இளைஞன் அமைதியாகிவிட்டான்(உரையாடல் இடம்பெற்றது இத்தாலி மொழியில் ஏதோ எனக்குத்தெரிந்த இத்தாலியைவைத்து சமாளித்து தட்டுத்தடுமாறி பதிலளித்தது புரிதலுக்காக தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்)
அதன் பின் அடுத்தவர் தொடங்கினார் யேகோவாவே உண்மையான தேவன் ,அவரே இந்த உலகைப்படைத்தவர் கிறிஸ்தவமே உண்மையான மதம் நம்பவேண்டிய மதம் அதனால்தான் கிறிஸ்தவத்தை பின்பற்றும் ஐரோப்பிய நாடுகள் செல்வச்செழிப்புடன் இருக்கின்றன ஏனைய மதங்களை பின்பற்றும் நாடுகளில் உள் நாட்டுச்சண்டையும் வறுமையும் இருக்கின்றன 
இயேசு என்பர் யார் , இந்த உலகம் எதை நோக்கிப்போய்கொண்டிருக்கின்றது ,இங்கே நடப்பவற்றையெல்லாம் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறார் , நல்லவர்கள் எல்லோரும் அதுவும் யெகோவாவை நம்புகிறவர்கள் வாழ்வார்கள் மற்றவெரெல்லாம் அழிந்துபோவார்கள் என்று தன் போதனையை தொடங்கினார் ஆனால் நான் அவரை தொடர்ந்து பேசவிடாது இடைமறித்துக்கேட்டேன் "உங்கள் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்கிறீர்களே அப்படியானால் எங்கள் நாட்டில் அண்மையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள்,சிறுவர்கள்,குழந்தைகள்,பெண்கள்,இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டார்களே அவற்றை உங்கள் யெகோவா பார்க்கவில்லையா? நிச்சயமாக பார்த்திருப்பாரல்லவா அப்படியானால் அந்த அபலைகளுக்கு ஏன் உதவவில்லை ஏன் அவர்களை காக்கவில்லை என்று உணர்ச்சிவசமாக கேட்டுவிட்டேன் அதற்கு அவர்களிடம் நல்ல பதிலிருக்கவில்லை ஆனால் இன்னொருவிதமாக பேச்சை ஆரம்பித்தார்கள் ஏற்கனவே என்னுடைய மதத்தையும் மொழியையும் இழிவாக பேசிவிட்டார்கள் என்ற கோபத்தில் இவர்களின் வாயை எப்படியும் அடைத்தே தீருவதென்ற முடிவில் அடுத்து என்ன கூறப்போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன் 1,2,3,4,5 ஆஹ் ஆ அ அதாவது அது வந்து அது என்னவென்றால் அழிவுகள் தேவனுடையதல்ல அவற்றை சாத்தானே ஏற்படுத்துகிறான் சுனாமியும் அவனால்தான் வந்தது ஆகவே படுகொலைகள் உயிர்ப்பலிகளுக்கு தீய சாத்தானே காரணமென்றார்கள் தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்த நானும் சட்டென்று இனிமேல் நான் சாத்தானை வழிபடப்போகிறேன் என்றேன் அதற்கு ஏன் அப்படிக்கூறுகிறீர்கள் என்றார்கள் நானும் 
பைபிளில் இருக்கிறது இந்த உலகையும் அதனுள்ளிருக்கும் வானம்,காற்று,நீர்,நெருப்பு எல்லாவற்றையும் தேவனே படைத்தாரென்று ஆனால் அவர் படைத்தவற்றை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை அதனாலேயே கடல் நீரால் சுனாமி வந்து பேரழிவு ஏற்பட்டது ஆகவே சாத்தானே பலம்பொருந்தியவன் கடவுளைவிட சக்திமிக்கவன் எனவே நான் அவனை வணங்கப்போகிறேன் என்றதில் தவறில்லையே என்றதும் வந்திருந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் ,
பின்னர் என்னிடம் சொல்லாமலேயே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துபோய்விட்டார்கள் அந்த சம்பவத்தின்பின் பல தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் ஏன் சமூக வலைத்தளங்களிலும் மதங்களை கிண்டலடித்தும் கேலியாக பேசுவதையும் பார்த்திருக்கிறேன் அப்போது நினைத்துக்கொள்வேன் அடடே இவங்கள் ஒரு கூட்டமாய்த்தான் அலையுறானுங்க.......
மதங்கள் கூறுகின்றன
உழைத்து உண்,
உன்னைப்போலவே உன் அயலவனையும் நேசி,
புலால் உண்ணாதே,
மிருகங்களை வருத்தாதே,
எல்லா மதங்களையும் மதித்து அவற்றிலுள்ள நல்லவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்
ஆனால் இவற்றை உண்மையாக கடைப்பிடித்து நேரிய வழியில் வாழ்பவர் யார்?
இந்தக்கேள்வி உங்களுக்குள் எழுந்தால் அதற்கான பதில் கிடைக்காது.
இந்துமதம் தொன்மையானது தனித்துவமானது அதேபோல கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களும் தனித்துவமானவை அவற்றை ஆழமாகத் தெரிந்துகொண்டால் எல்லா மதங்களுக்குமிடையிலான பொதுவான நல்ல விடயங்களை அறிந்துகொள்ளலாம் அதனை உரிய விதத்தில் தேடினால் நிச்சயம் பதில் கிடைக்கும்.

4 comments:

 1. மிகச் சிறந்த பதிவு.

  ReplyDelete
 2. Why you are always saying about christianity ,whether any Christians are saying anything about any religions . you only said that all religions are one religions . but you are always scolding the Christianity.do you know anything about Christians and bible ????? Whether you have read the bible ????? Please avoid saying about Christians and other religions also .

  ReplyDelete
 3. Why you are always saying about christianity ,whether any Christians are saying anything about any religions . you only said that all religions are one religions . but you are always scolding the Christianity.do you know anything about Christians and bible ????? Whether you have read the bible ????? Please avoid saying about Christians and other religions also .

  ReplyDelete
 4. Christian s are very good converters

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.