Sunday, 17 April 2016

உங்கள் தலைவிதி

கல்கி இதழுகாக எழுத்தாளர் #ஞாநி எழுதிய 'யாருக்கு ஓட்டு
போடவேண்டும்?' என்ற கட்டுரையின் ஒரு பகுதி:

  விஜய்காந்த்தை நம்பி மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்க முடியுமா என்பதே பலரது சந்தேகம். #விஜய்காந்த் கருணாநிதியை விட ஜெயலலிதாவி விட சிறந்த முதலமைச்சராக இருப்பாரா என்று யோசிப்பதை விட அவர்களை விட மோசமான முதல்வராக இருப்பாரா என்று யோசிப்பதே சரியாக இருக்கும்.

  அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே நான் நம்புகிறேன். எல்லா ஊழல் அராஜகங்களையும் செய்துவிட்டு அவற்றை நியாயப்படுத்தும் சாமர்த்தியமான கருணாநிதியின் திறமையும் , அவற்றை பற்றி பதிலே சொல்லத் தேவையில்லை என்ற ஜெயலலிதாவின் ஆணவமும் விஜய்காந்த்திடம் நிச்சயம் இல்லை. அவர் முதல்வரானாலும் கூட, ஒரு பக்கம் #வைகோ, மறுபக்கம் #இடதுசாரிகள், #திருமா என்று அவரை நெறிப்படுத்தக் கூடிய பலமான சக்திகள் உடன் இருப்பதுதான் உண்மையில் விஜய்காந்த்தின் பலம். #மன்மோகன் சிங்கின் முதல் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவே பொருளாதார நெருக்கடியில் சரிந்தபோதும் அதில் இந்தியா பாதிக்கப்படாமல் இருக்க முக்கிய காரணம், அன்றைய மன்மோகன் ஆட்சியைக் கட்டுப்படுத்திய இடதுசாரிகள்தான் என்று பொருளாதார அறிஞர்களே சுட்டிக் காட்டியுள்ளனர். அதே மன்மோகனின் இரண்டாவது ஆட்சியில் இடதுசாரிகளின் கடிவாளம் இல்லாமல் கட்டுத்தெறித்தபோதுதான் 2ஜி உள்ளிட்ட பல ஊழல்கள் நடந்தன.

  தவறு செய்தால், #கருணாநிதி குடும்பத்தை தூக்கி எறியும் சக்தி தி.மு.கவில் இல்லை. #ஜெயலலிதா-#சசிகலா குடும்பத்தை தூக்கி எறியும் சக்தி அ.தி.மு,கவிலும் இல்லை. ஆனால் விஜய்காந்த்தோ தே.மு.தி.கவோ ஆட்சியில் தவறு செய்தால் அதை சரி செய்யவோ, சரி செய்யவே முடியாதென்றால் தூக்கி எறியவோ இடதுசாரிகளும் வைகோவும் திருமாவும் தயங்கமாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.