Friday, 11 March 2016

பதில் சொல்லிவிட்டு வாக்குச்சாவடி செல்லவும்.

டாஸ்மாக் முதல் வெள்ளம் வரை இன்று அப்பட்டமாக மக்களுக்கு எதிராக நிற்கும் ஒரு அரசினை குறித்து பேசவோ, அது குறித்து பிரச்சாரம் செய்து தேர்தலை சந்திக்கவோ எந்தகட்சியும் தயாராக இல்லை.

போயாஸ்கார்டனில் அமர்ந்து கொண்டு வெளியில் தலை காட்டாமல் மீண்டும் அம்மா ஆட்சி தான், 234 தொகுதிகளிலும் வெற்றி, நாட்டில் ஆல்ரெடி பாலாறும் தேனாறும் ஓடுது என புரூடா விடும் அதிமுக கட்சி, ஒரு அமைச்சர் – மேயர் கலந்து கொண்டு நடத்துற மாபெரும் கூட்டத்துல வெறும் 20 பேர் பார்வையாளர்களாக கலந்துகொள்ளும் நிலையில் தான் மேற்கண்ட புரூடா விடுகிறது அதிமுக.
1
இதுல பெங்களூர் கேஸ், ஓபிஎஸ் – குமாரசாமி, அக்ரி என நீளும் ஜெயலலிதாவை எதிர்கொள்ள ஆர்.கே நகரில் தேர்தலை புறக்கணித்த கட்சிகள் இன்று தனித்தனியே நின்று கொண்டு எங்க பின்னாடி வாங்க என ஆவேசமாக பேசுகின்றனர்.
கடந்தமுறை கலைஞர் ஆட்சியை தூக்க அம்மாவுடன் கைகோர்த்த தேமுதிக வுக்காக இன்று அம்மா ஆட்சியை தூக்க பால், பழம் என நாக்கை தொங்க போடுகிறார் கலைஞர்.
மோடி வந்தால் நாடு ஏரோப்பிளேனில் பறக்கும் என மக்கள் காதில் பூ சுற்றிய வைகோ, அன்புமணி, விஜயகாந்த் இன்று மோடி கட்சி கடாசிவிட்டு ஆளுக்கு ஒரு அணி என நிற்கின்றனர்.
நேற்று வரை அம்மாவுக்கு ஓட்டுக்கேட்ட என்பதை விட வக்காலத்து வாங்கிய (தருமபுரி மாணவிகள் குறித்து சீமான் பேச்சை பார்க்கவும்) சீமான் இன்று அதிமுக, திமுக எதிர்த்து நின்று கொண்டு இதுவரை பேசிவந்த ‘ இனந்துரோகி காங்கிரஸை’ கூட என் பின்னால் வந்து நில்லு  என்கிறார்.
இதைவிட மோசமாக ஆட்சி செய்யமுடியாது என்றபடி அமைச்சர் முதல் அதிகாரிகள் தூக்கி அடித்து நேரில் பார்க்கமுடியாத ஒரு முதலமைச்சரை மட்டும் 2016 மே க்கு பிறகு மாற்றிவிட்டால் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என இந்த ஓட்டுக் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, தேர்தல் ஆணையமும் கூவுவதற்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா?
போயஸ்காடர்னை மாற்றிவிட்டு மீண்டும் அறிவாலயமோ அல்லது தாயகமோ, தைலாபுரதோட்டமோ, கோயம்பேடோ வந்துவிட்டால் பருப்பு விலை 180 ரூபாயிலிருந்து குறைந்துவிடுமா?
மக்களுக்கு காசு இல்லாமல் கல்வி கிடைச்சுடுமா? அல்லது பிஆர்பி, வைகுண்டராஜன் போன்றோர் கைது செய்து மக்கள் சொத்து மீட்கபடுமா? 
மல்லையா தான் தண்டிக்கபப்டுவாரா? விவசாயி பாலன் போன்றவர்கள் மதிக்கப்படப்போகிறார்களா? 
ஏன் இதே ஜெயலலிதா 66 கோடி சொத்து குவிப்பு கேஸை 20 ஆண்டு நடத்தி குமாரசாமி மூலம் ஊத்தி மூடிய கேஸை  நடத்தி அவர் தண்டிக்கப்படுவாரா?

எதுவும் நடக்கப்போவதில்லை. அப்புறம் எதுக்கு ஓட்டு…? பதில் சொல்லிவிட்டு வாக்குச்சாவடி செல்லவும்.

ஓட்டுப்போடலைன்னா எப்படி?  தெய்வம் இல்லை என்று சொல்லிவிட்டு வரம் கேட்கமுடியுமா? நாளைக்கு இதே அரசிடம் தண்ணீர் வரலை, ரோடு போடலை என உரிமை கேட்க முடியுமா? என ‘புரட்சியாளர்’ சீமான் போல யோசிப்பவர்களுக்கு ஓட்டுப்போட்டா மட்டும் மேற்கண்ட நமது உரிமைகள் இத்தனை நாள் கிடைச்சுடுச்சா என்ன?
ஆனா ஓட்டுப்போடலைன்னா இவர்களை நாம் அங்கிகரீக்கவில்லை என்றால் இவர்களுடை அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படும்… மக்களுக்கு அதிகாரம் இல்லாத அமைப்பை நடத்த நம்மிடமே ஒப்புதல் வாங்கும் நடைமுறைதான் இந்த தேர்தல்.
இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் எந்த தடிக்கம்பால் அடி வாங்க போகிறீர்கள் என மக்களே தேர்தெடுத்து கொள்வது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.