Thursday, 31 March 2016

ஆனா இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரங்கள். நாமெல்லாம் சொன்ன எடுபடவா போகுது?

எப்படி எல்லாம் கணக்கு போட்டு வக்கிறாங்க பணத்தை?
கோடிகள்ல புரள்றவங்களுக்கு அந்தப் பணத்தை எண்றதுக்கு நேரமில்லையாம்.. பழைய பேப்பர் எடை போட்டுக் கொடுக்கிற மாதிரி எல்லாம் கிலோ கணக்குத்தான்..

1 கோடி ரூபாய் பணம்னா அது 1000 ரூபாய் நோட்டா இருந்தா 17 கிலோ இருக்குமாம். எண்ண வேண்டியதே இல்லையாம். இதே 500 ரூபாய் நோட்டாயிருந்தா 35 கிலோவாம். 100 ரூபாய்ன்னா அது ஒரு கோடிக்கு 114 கிலோ இருக்குமாம். பொதுவா இப்படி கோடிக்கணக்கான பணத்தை கையால எண்றதுக்கு பதிலா மெஷின்ல வச்சி எண்ணுவாங்க. இப்போ அதுக்குக்கூட நேரமில்லாம கருப்புப்பணம், கணக்கில வராத பணம் வச்சிருக்கிற வங்க எடை மெஷின்ல எடைபோட்டு இத்த‍னை கோடின்னு கணக்குப்போட்டு பாத்துக்கறாங்களாம். யம்மாடீ..

இந்த ரூபாயெல்லாம் சாலைகள் வழியாக எந்த சந்தேகமும் ஏற்படாத வண்ணம் கன்ட்டெய்னர்கள்ல கொண்டு போறாங்க. அப்படி கொண்டுபோறதுல ஒவ்வொரு கன்டெய்னரிலும் எவ்வளவு இருக்கும்னு பாத்தா பெரிய பாக்ஸ் கன்டெய்னர்ல ஒண்ணே முக்கால் டன் எடை வரை பணக்கட்டுகளை நெருக்கி ஏத்தலா மாம். ஆயிரம் ரூபாய் நோட்டாக இருந்தால் ஆயிரத்து 51 கோடி ரூபாயா இருக்குமாம்.

சின்ன கன்டெய்னர்னா ஒரு பாக்ஸில் முக்கால் டன் (750 கிலோ) ஏத்தலாமாம். அதே ஆயிரம் ரூபாய் நோட்டாக இருந்தால் 525 கோடியே 50 ஆயிரம் ரூபாய் அதில் பிடிக்குமாம்..

பொதுவாகவே கன்டெய்னர் கூட்ஸ் என்றாலே எந்த இடத்திலும் ஓப்பன் பண்ணிக் காட்ட வேண்டியது இருக்காதாம். ஏனென்றால், அவ்வளவு பெரிய கூட்ஸின் பெட்டிகளின் ‘லாக்’ கை சாதாரணமாக ஓப்பன் செய்து டோல்கேட்களில் காட்டிக் கொண்டிருக்க முடியாது. அவர்களைப் பொருத்தவரை  ஏதோ கன்டெய்னர் போகிறது… அது யாரோ ஒருவரின் கம்பெனி கன்டெய் னர் அவ்வளவுதான் என்ற அளவில்தான் செக்கிங் ஷோவே இருக்குமாம். அதிகமாக அதுபற்றிக் கேட்டால் கம்பெனி பில்லைக் காட்டுவதோடு, வழக்கமாக ‘கொடுப்பதை’ விட கொஞ்சம் கூடுதலாய்க் கொடுத்து விட்டு கன்டெய்னரை அங்கிருந்து கொண்டு போய் விடலாமாம், அவ்வளவுதான் ரொம்பவும் ஈசி.

20, 40,60 அடிங்கிற அளவுகள்ல கண்டெய்னர்கள் இருக்கு. ஆனா இப்படி ரகசியமா பணம் கொண்டு போறவங்க 60 ஃபீட் கன்டெய்னர்கள்ல தான் கொண்டு போவாங்களாம். ஏன்னா  அதை ஃபாரீன் கூட்ஸ்னுதான் கணக்குல காட்டி ஆகணுமாம், வேற வழியே கிடை யாதாம். அந்தக் கணக்குலதான் இந்த பணமெல்லாம் ரொம்ப ரகசியமா யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாற அதுவும் நைட்லதான் பக்காவா தார்பாய் ஸ்க்ரீன் போர்த்திக் கொண்டு எடுத்துட்டுப் போவாங்களாம்.

இப்படித்தான் ஆயிரக்கணக்கான கோடிகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நெடுஞ் சாலைகள் வழியாகப் போய்க்கொண்டிருக்கின்றதாம். இப்ப தேர்தல் நேரத்தில இந்த மாதிரி கன்ட்டெய்னர்கள் வழியா பணம் போகுதாங்கிற ஆராய்ச்சி நமக்கு வேணாம்.

ஆனா தேர்தல் பறக்கும் படையைச் சார்ந்த அதிகாரிகள் மாருதி ஆல்ட்டோவையும், Hyundai Ean காரையும் செக் பண்ணி சில நேரங்கள்ல ஆயிரக்கணக்குல, கணக்குல வராத பணத்தை பறிமுதல் பண்ணிகிட்டு இருக்காம இப்படியான கன்டெய்னர்களையும் செக் பண்ணா கணக்கில் வராத ஆயிரக்கணக்கான கோடிகளை பறிமுதல் செய்ய வாய்ப்பிருக்கலாம். எந்த வழியா எவ்வளவு பணம் போகுதுன்னு யாருக்கு தெரியும்?

ஆனா இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரங்கள். நாமெல்லாம் சொன்ன எடுபடவா போகுது? பெட்டைக் கோழி கூவியா பொழுது விடியப்போவுது..

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.