Sunday, 27 March 2016

சொன்னவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Einstein-puzzles-tamil-answerதொழில்நுட்ப மாற்றம் என்பது கொடுமைக்காரன் கையில் கிடைக்கும் கோடாளி.

ஒருவன் பள்ளியில் கத்துகிட்ட மொத்த வித்தையும் மறந்து போய் எஞ்சி இருப்பது கல்வி.
கப்பல் கரையில் இருப்பது பாதுகாப்பானது தான்… ஆனால் அதற்காக அது உருவாக்கப் படவில்லையே.
ஈர்ப்பு விசை   காதலில் விழுபவர்களுக்கு பொறுப்பாகாது.
உலகில் புரிந்து கொள்ள கடினமான விசயம் ஒன்று உண்டென்றால் அது வருமானவரி.
நான் எதிர்காலத்தை பற்றி நினைப்பதே இல்லை, அதுவே சீக்கிரம் வந்துவிடுகிறதே.
செய்யப்படுபவை முடிந்தவரை எளியதாக இருக்கவேண்டும்.  ஆனால் எளிமையான தாக இருக்க வேண்டியதில்லை.
ஒருவனின் படைப்பாற்றலின் ரகசியம் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது  என்பது அதன் ஆதாரங்கள்(சோர்ஸ்) எப்படி மறைக்கப்படுகிறது என்பதில் இருக்கிறது.
புதிர்களை விடுவிப்பது என்பது அதை உறுவாக்கிய முறையிலே தான் என்று சொல்ல முடியாது.
அவனுக்கு வெளியே வாழ்ந்து பார்க்கும் போதுதான் அவன் வாழ தொடங்குகிறான்.
கணிதம் சிக்கலாக இருப்பாதாக கவலைப் படவேண்டாம், என் திறமை அதில் அதி மோசமானது.
இரண்டு விசயங்கள் எல்லையற்றது. ஒன்று இந்த பிரபஞ்சம், அடுத்து மனித முட்டாள்தனம். பிரபஞ்சத்தை பற்றி உறுதியா தெரியல.
மூன்றாம் உலகப்போரில் எந்தவிதமான ஆயுதங்கள் பயன்படுத்தப் படுமோ தெரியல, ஆனா
நான்காம் உலகப்போரில் கற்களையும், தடிகளும் பயன்படுத்தப் படலாம்.
மந்தையில் மாசற்ற உறுப்பினராக இருக்க வேண்டுமானால் அவர் ஒரு செம்மறி ஆடாக இருந்தாக வேண்டும்.
ஆபத்து அறியாமல் விபத்தில் இறப்பவனுக்கு “மரண பயம்” அனைத்து பயங்களிலும் நியாயமற்றது
மனநிலை பிறழ்ந்தவர்கள் ஒன்றையே திரும்ப திரும்ப செய்கிறார்கள் ஆனால் விதவிதமான முடிவை எதிர் பார்க்கிறார்கள்.
கற்பனை அறிவைவிட முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு.  கற்பனை பரந்துபட்டது
நல்ல அரசியல் ஆலோசகரின் வயிறு காலியாக இருக்காது.
புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் ஊள்ள வித்தியாசம். புத்திசாலி எல்லைகளை வகுத்து கொண்டவன்.
ஒவ்வொருவரும் புத்திசாலி தான் எப்போது ? தர்க்கரீதியாக சிந்திக்கும் போது. மீன் மரம் ஏறும் என்பதை அறிந்தவனை விட மீன் வாழ்க்கையை அங்கேயே கழிக்கும் என நினைப்பவன் முட்டாள்.
சார்பியல் (ரிலேட்டிவிட்டி) என்பது ? அழகிய பெண்னை ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டே இருப்பது மணி துளி போல ஓடிவிடும்  : அதுவே சூடான அடுப்பின் மேல் ஒரு சில மணிதுளி  உட்கார்ந்திருப்பது ஒரு மணி நேரம் போன்றது.
திறமைசாலி பிரச்சனையை அணுகுகிறான்.  அறிவாளி அதில் இருந்து தப்பிக்க நினைக்கிறான்.
A = x + y + z  இதில் A என்பது வாழ்க்கையின் வெற்றி , x  என்பது வேலை, y  என்பது விளையாட்டு, z என்பது வாயை மூடி இருப்பது.
ஆண் கடைசிவரை மாற மாட்டோம் என்று பெண்னை கலியாணம் செய்துகொள்கிறான்.  கடைசிவரை சேர்ந்திருப்போமா…என்று நினைத்த பெண், ஆணை கலியானம் செய்து கொள்கிறாள் . இதில் இருவருமே ஏமாற்றமடைகிறார்கள்.
எதையும் அறிவியல் பூர்வமாக வரையறுத்து விடலாம், ஆனால் அதை உணர முடியாது.  பீத்தோவனின் சிம்பொனி அலையின் வேறுபாடு மற்றும் அழுத்ததை பொறுத்தது என்று சொல்வது போல.
தண்டனைக்கு பயந்துதான் ஒழுக்கமானவனாக இருக்கிறான், ஒழுக்கமானவனுக்கு பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா அவன் இருக்கிறான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குள்ள உரிமை கொடுக்க வேண்டும்.
தனியொருவனுக்கு,  அவனுக்கு தெரியாமல் ஏதும் மறைக்கப் படவில்லை என அரசியல் நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.
வாழ்க்கையின் ஜீவாதாரமாக இருப்பது வேலை மட்டுமே.
ஆர்வம் எனும் புனிதத்தை இழக்கக் கூடாது.
அனைத்திற்கும் வெளியே  இருந்து பார்க்கும் போது கவலை கொள்வதற்கு சின்னதும் பெரியதுமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.
காகிதங்களில் எழுதி வைத்துக்கொள்வது நாம் ஞாபகப் படுத்தி கொள்வதற்காகத்தான். மூளை சிந்திபதற்கு மட்டுமே.
சொன்னவர் : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.