Sunday, 14 February 2016

சிறிய தவறு vs பெரிய தவறு

ஆசிரியர் ஒருவர் வகுப்பில் நல்லொழுக்கப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
வகுப்பில் இருந்த மாணவர்களிடம் அவர்கள் செய்த தவறுகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டார். பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் சிறிய தவறுகளையே செய்வதாக கூறினார்கள். சிறிய பொய்கள், பக்கத்து மாணவனின் பென்சிலை தெரியாமல் எடுத்து வீட்டுக்கு கொண்டு செல்வது, அப்பா அம்மாவிடம் அவர்களுக்குத் தெரியாமல் வீட்டிலிருக்கும் காசை திருடி வருவது, நண்பர்களிடம் சின்னச் சின்ன சண்டை போடுவது என அவர்களில் சிறிய தவறுகள் நீண்டு கொண்டே போனது.

ஒரு மாணவன் மட்டும் ஆசிரியரிடம் தான் மிகப்பெரிய தவறு ஒன்றை செய்த்தாக கூறினான்.
“நான் மிகப்பெரிய பாவச்செயல் புரிந்து விட்டேன். என்னுடைய பொறாமை உணர்வு சக மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி  செய்யும் அளவுக்கு என்னை அழைத்துச்சென்றது. உங்களுடைய அறிவுரையின் படி நல்ல வழியில் நடப்பதற்கு முயற்சிக்கிறேன்” என்றான்.

இப்போது ஆசிரியர் சிறிய தவறுகள் செய்த மாணவர்களை அழைத்து “ நீங்கள் விளையாட்டு மைதானம் சென்று  சிறிய கற்களாக பார்த்து 100 கற்களை எடுத்து ஒரு பையில் போட்டு கொண்டு வாருங்கள்” என்றார்.

இது போன்று பெரிய தவறு செய்ததாக ஒப்புக்கொண்ட மாணவனிடம் “ நீ விளையாட்டு மைதானத்திற்கு சென்று அங்கு இருக்கும் கற்களிலேயே மிகவும் பெரிய கல்லைத் தூக்கிக் கொண்டு வா.” என்றார்.

மாணவர்கள் ஆசிரியர் கூறியதை உடனடியாக செய்தனர். சிறிய தவறு செய்த்தாக கூறியவர்கள் 100 சிறிய கற்களை ஒரு கோணியில் போட்டு கொண்டு வந்தனர். பெரிய தவறை செய்ததாக கூறியவன் ஒரு மிகப்பெரிய கல்லை தூக்கமுடியாமல் கஷ்டப்பட்டு தூக்கிவந்தான்.

இப்போது ஆசிரியர் எடுத்த இடத்திலேயே  கற்களை போட்டுவிட்டு வருமாறு அனைவரிடமும் கூறினார்.
பெரிய தவறு செய்தவன் தயங்காமல் தான் கொண்டு வந்த பெரிய கல்லை தூக்கிக் கொண்டு எடுத்த இட்த்தில் வைத்து விட்டான். சிறிய தவறுகள் செய்தவற்களோ 100 சிறிய கற்களையும் அவைகளை எடுத்த இடத்தை எப்படி தேடிக் கண்டுபிடித்து வைப்பது என்று திகைத்து நின்றனர்.
இப்போது ஆசிரியர் பேசினார்.
“ பெரிய தவறு செய்த செய்தவர்கள் தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு அந்த தவறு மேலும் நடைபெறாதவாறு நடந்து கொள்ளலாம். ஆனால் சிறிய தவறு செய்தவர்கள் அதை தவறு என்றே உணரவில்லை. அந்த தவறினால் யாரெல்லாம் பாதிக்கப் பட்டார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இந்த சிறிய கற்களை எடுத்த இடத்தில் மீண்டும் வைப்பது எவ்வளவு சிரமமோ அது போல சிறிய தவறுகள் செய்தால் அதிலிருந்து மீட்சி என்பது கடினம்” என்று கூறினார்.

சிறிய தவறுகள் எளிதில் மறந்துவிடும் அல்லது மறைந்துவிடும்
அதன் தடங்கள் நமக்கு தெரியாமல் காலம் காலமாய் தொடர்ந்து வரும்.q

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.