Friday, 5 February 2016

பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு.(fun)

மனைவியை மடக்க சில யோசனைகள்....😜


1. மாமியார் விரதம் இருக்கும் போது ” உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?”னு அக்கரையா கோப படனும்(கொஞ்சம் நடிங்க பாஸ்..)

2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது “அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் “னு அவுத்து விடனும்”

3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா
” இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும்

4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும்.

5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தனு ”சொல்லனும்.

6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் )

7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.(வேற வழி இல்ல)

8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு.

9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது.

10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா
பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..!😂😂😂


ஆண்களின்  நலன் கருதி வெளியிடுப்படுகிறது. தனியாக ஆலோசனை கேட்பவர்கள் ரூ 1000/ செலுத்தி முன்பதிவு செய்யலாம் 🙏🙏🙏

11 comments:

 1. Hello..admin sir இருங்க.. உங்க ஆத்துக்கார அம்மாக்கிட்ட சொல்லி ஒரு நாள் பட்டினி போடச்சொல்றேன்.

  ReplyDelete
  Replies
  1. அட போங்க சார்,,நான் புதுக்கோட்டையில் சாப்பிடுறது,ஹோட்டல் சாப்பாடு தான்.எங்க ஊரு குற்றால அருவியாய் கண்ணீர் கொட்டுது...

   Delete
  2. ஹோட்டல் சாப்பாட்டுக்கே... இம்புட்டு குசும்பா????

   Delete
 2. எல்லா பாயின்டும் ஓ.கே சார். பாயின்டு5 தான் சார் முடியல நெஞ்ச வலிக்குது.

  ReplyDelete
  Replies
  1. சும்மா,ஒரு பொய்யை அவிழ்த்து விடுங்கள்,ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணுறோம்.அதேபோல இந்த மாதிரி ஒரு சில பொய்யை அவிழ்த்து விட்டாதான் வாழ்க்கை ஓடும்.

   Delete
 3. Hai anonymous madam....how r u....

  ReplyDelete
 4. உங்க 2 பேரையும் சோமாலியாவுக்கு நாடு கடத்திடுவேன்.

  ReplyDelete
 5. Madam....you please pardon us.....already we are in Lifetime Prison.....just we are relaxing ourselves ....oh,....my wife is coming ...let's chat later.....

  ReplyDelete
 6. ம்...அந்த பயம் இருக்கட்டும்.

  ReplyDelete
 7. Hai Ravi sir....என்னா கமல் இந்த ஆர்டிக்கில முதல்ல வைங்க...நிறைய புது நண்பர்கள் வருகிறார்கள் பாருங்கள்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.