Wednesday, 17 February 2016

அவர்தான் நல்ல தலைவர்! (குட்டிக்கதை)

ஓர் ஊரில் ஒருகட்சியின் கொடியேற்றம் முடிந்தபின், மாற்றுக் கட்சியின் தொண்டன் தன் கட்சியின் கொடி அதைவிட உயரமாகப் பறக்க வேண்டும் என்று விரும்பி ஏற்பாடுகளைச் செய்தான்.
 மாற்றுக்கட்சித் தலைவரும் கொடியேற்றி முடித்து காரில் ஏறினார். இதைப் பார்த்த அந்த ஊர்க்காரர், அந்தக் கட்சித் தலைவரிடம் போய், “என்னய்யா உங்கக் கட்சியாளு இப்படி இருக்கான்?”  
 “ஏன்?எப்படி இருக்கான்? நல்லாத்தானே கட்சி வேல   பாக்குறான்?
“அட போங்க தலைவரே! நீங்க இப்பக் கொடியேத்துன கொடிக் கம்பத்துல நேத்து ராத்திரி விறுவிறுன்னு ஏறி உயரத்தை அளந்து பாத்துட்டு இறங்கினான்.  ஏன்டா நட்டுவச்ச மரத்துல ஏறுறியே கீழவிழுந்து கால் கை ஒடிஞ்சா என்ன பண்ணுவன்னு கேட்டேன், அவன் “உயரத்த அளக்குறேன்“ னு சொன்னான். 
“அட லூசுப்பயலே, கொடிக்கம்பத்த நடுறதுக்கு முன்னாடியே கம்பத்த கீழபோட்டு அளந்திருக்க வேண்டியதுதானடா?னு கேட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?.. 
“எங்களுக்குத் தெரியாதா? கீழகிடக்கும்போது அளந்தா அதுக்குப் பேரு நீளம். நட்டுவச்சி அளந்தாத்தான் அது உயரம்! எங்க கொடி அந்தக் கட்சிக் கொடியவிட உயரத்துல பறக்கணும்னுதான் எங்க தலைவர் சொன்னாரே தவிர நீளத்துல பறக்கணும்னா சொன்னாரு?” அப்படின்னு கேக்குறான்!
“ஆமா.. அதுக்கு என்ன இப்ப?“
“அதுக்கு என்னவா? நீளத்துக்கும் உயரத்துக்கும் வித்தியாசம் தெரியாத தொண்டன வச்சிக்கிட்டு என்னய்யா பண்ணப் போறீங்க..“
“அய்யா நீங்க அரசியலுக்குப் புதுசா..? நீளத்துக்கும் உயரத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்குற வரைக்கும்தான் அவன் தொண்டனா இருப்பான். தெரிஞ்சிட்டா நா தலைவனா இருக்க முடியாது இல்ல..?
---------சரி கதை ஒன்றும் கற்பனைக் கதை இல்லை. தமிழ்நாட்டில் இந்தியாவில் பெரீய்ய கட்சிகளில் நடப்பதுதான்..

  தான் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காகவே தொண்டர்களை விவரமில்லாமல்–உணர்ச்சி வசப்படுத்தி – வைத்திருக்கும் கட்சிகள் எவை...?

     நான் சொல்லப்போவதில்லை..

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.