Wednesday, 3 February 2016

தேசியக்கொடியை எரித்த இளைஞர் புழல் சிறையில் அடைப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் தேசியக்கொடியை எரிப்பது
போல படங்களை சமூகவலை தளங்களில் பரப்பி இருந்தார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தனிப்படை அமைக்கப்பட்டு நடத்திய தேடுதல் வேட்டையில் நேற்று முன்தினம் ராயப்பேட்டையில் உள்ள விடுதியில் பதுங்கி இருந்த வாலிபர் பிடிபட்டார்.  போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் நாகப்பட்டினம் மாவட்டம் சின்னக்காடு புளிக்கடை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த திலீபன் (வயது 24) என்பதும், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
தந்தை பெரியார் கழகத்தில் தீவிர ஈடுபாடு உடைய தனக்கு டி.வி., பத்திரிகை ஆகியவற்றில் தன்னுடைய பெயரும், படமும் வரவேண்டும் என சுயவிளம்பரத்திற்காக தேசியக்கொடியை எரித்ததாக’’ போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து அவர் மீது தேசிய தடுப்பு சட்டம் மற்றும் தேசியக்கொடி அவமதிப்பு போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.