Friday, 5 February 2016

பார் போற்றும் பாரதி

நாவிற் சிறந்திடும் நற்கவிதை - நின்று
    நெஞ்சினை அள்ளும் இளங்கவிதை,

பாவிற் சிறக்கப் படைத்தளித்தான்! - அந்த
    பாரதி புதுமை வழிவகுத்தான்!

பாட்டினைத்  தீயெனில் மிகையில்லை -அவன்
   புரட்சியின் சுடருக்கு நிகரில்லை!
வாட்டும் துயர்தனை ஓட்டிடுமே - அவன்
    வார்த்தை அருமருந் தாகிடுமே!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.