Friday, 5 February 2016

ஸ்டாலின் அவர்களுக்கு பரந்து விரிந்த மனது ” –

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் கீழ்க்கண்ட ட்விட்டர்

செய்தியையும், அவர் பிரசுரித்திருக்கும் புகைப்படத்தையும்
பார்த்தவுடன் –
எனக்கு இந்த இடுகையை எழுதத் தோன்றியது.

twitter-swamy-on-stalin-visit-2
stalin-and-s-swamy-2
ஆனால் கூடவே ஒரு பிரச்சினையும் தலை தூக்கியது….
இந்த இடுகை வெறும் ட்விட்டர் செய்தியையும்,
புகைப்படத்தையும்
மட்டுமே கொண்டது –
என் விமரிசனங்கள் எதுவும் இல்லை –
ஆதலால், பிரச்சினை இடுகையில் அல்ல …..
பிரச்சினை – தலைப்பில் தான் ….!!!

ஒரே சமயம் 4 தலைப்புகள் மனதில் தோன்றின.
அவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்று யோசித்து,
யோசித்து பார்த்தேன்.
முடிவெடுக்க
முடியவில்லை… இறுதியில்,
விஷயம் எப்படி இருந்தாலும், தலைப்பை நல்லதாகவே
போடுவோமே என்று முடிவெடுத்ததால் தான்
மேற்கண்ட தலைப்பு.
என்னென்ன தலைப்புகள் தோன்றின என்பதையும்
சொல்லி விடுகிறேன்….
முதல் தலைப்பு –
” ஸ்டாலின் அவர்களுக்கு பரந்து விரிந்த மனது ” –

காரணம் –
ஸ்டாலின், சுப்ரமணியன் சுவாமியை தன் 62 வயதுக்
காலத்தில் இதுவரை நேரில் சந்தித்ததே இல்லை.
அவர்கள் இருவரும் நண்பர்களும் இல்லை.
குடும்ப நண்பர்களும் இல்லை.
சுப்ரமணியன் சுவாமி –
ஸ்டாலினின் தங்கை கனிமொழியின் 8 மாத “திஹார்”
சிறைவாசத்திற்கு காரணமாக இருந்தவர்.
ஸ்டாலின் அவர்களின் தாயார் தயாளு அம்மாள் அவர்களின்
மீது இந்த தள்ளாத வயதில் சிபிஐ வழக்கு தொடரவும்
காரணமாக இருந்தவர்.
ஸ்டாலின் அவர்களின் மாமன் மகன்களான, மாறன்
சகோதரர்களின் மீது 700 கோடி ஊழல் வழக்கு தொடரப்படவும்
காரணமாக இருப்பவர்.
ஸ்டாலின் அவர்களின் தந்தை கலைஞர் கருணாநிதி மீது,
தொடர்ந்து இன்னமும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அள்ளி
வீசி வருபவர்.
திமுக -வை ஒழித்துக் கட்டுவேன் என்று சபதம் போட்டிருப்பவர்.
ஈழத் தமிழர்களின் அழிப்புக்கு துணை போனவர்.
தமிழக மீனவர்களின் படகுகளை
இலங்கை திரும்பத் தரக்கூடாது என்று சொன்னவர்.
ராஜபக்சேயின் “ஜிக்ரி” தோஸ்த்…!!!
காவிரி நீரைக் கேட்டு கர்நாடகாவை தொல்லைப்படுத்துவதை
தமிழகம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தஞ்சை டெல்டா பாசன வசதிகளுக்கே – தேவையான நீரை –
கடல் நீரை நல்ல நீராக மாற்றுவதன் மூலம்
பெற்றுக் கொள்ள வேண்டும் –
– என்றெல்லாம் சு.சுவாமி சொல்லியும் கூட –
சு.சுவாமி – இதுவரை பார்த்தே இராத,
தனது தம்பி தமிழரசுவின்
மகன் அருள்நிதியின்
திருமணத்திற்கு கட்டாயம் வந்தேயாக வேண்டுமென்று
என்று விடியற்காலையில் வீடு தேடிப்போய்,
சு.சுவாமிக்கே ‘சர்ப்ரைஸ்’ கொடுத்து –
வேண்டி, விரும்பி, அழைப்பிதழ் கொடுத்த விதம் இருக்கிறதே –
மிக மிகப் பரந்து விரிந்த மனம் உடையவரால் மட்டும் தானே
இதைச் செய்ய முடியும்…..?
(மற்ற 3 தலைப்புகளுக்கு விரிவான விளக்கங்கள் தேவைப்படாது 
யோசிக்காமலே உங்களுக்கே காரணம் புரிந்து விடும்…!!! )
இரண்டாவது தலைப்பு –
“காரியம் ஆகணும்’னா கழுதையானாலும் காலைப்பிடி ”
மூன்றாவது தலைப்பு –
“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே –
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே”
(தூக்குத் தூக்கியில் சிவாஜி பாடலின் வரிகள் …)
நான்காவது தலைப்பு –
“எப்படியாச்சும், எதாச்சும் செய்யுங்க சார்….
ஒங்களைத்தான் நம்பி இருக்கோம் …”
———————————————————–
பின் குறிப்பு –
நான் கொடுத்த தலைப்பு,
கொடுக்க நினைத்த தலைப்புகள் – ஆகியவை
பொருத்தமாக இல்லை என்று நண்பர்கள் கருதுவீர்களேயானால்,
நீங்கள் கொடுக்கும் தலைப்பு பொருத்தமானதாக இருந்தால் –
அதையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
———————————————-

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.