Sunday, 7 February 2016

ஆடுகள் ஆடுகின்றன! கோழிகள் குதிக்கின்றன!

சிரிக்கவா...சிந்திக்கவா...


*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…

*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!

*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வீட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!

*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!

*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!

*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத, ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!

*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!!

*சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!

*‘சரியாக் கேட்க மாட்டேங்குது, அப்புறமாப் பேசுறேன்’ என்பது மட்டும் சரியாகக் கேட்டு விடுகிறது!

*சிறு வயதில் ஆம்லெட் ஆக முடியாமல் தப்பித்த முட்டைகள்தான் வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது!

*ஆடுகள் ஆடுகின்றன! கோழிகள் குதிக்கின்றன!
பல வீட்டின் குழம்புச்  சட்டியில் இன்று!!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.