Wednesday, 3 February 2016

ஸ்டிக்கர்...

மு.க.ஸ்டாலின் முன்பு வெற்றி பெற்ற தொகுதி
ஆயிரம் விளக்கு. அந்தத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல தற்போது அவர் உறுப்பினராக உள்ள ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியிடக் கோரி பலரும் விருப்ப மனு தாக்கல் செய்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் செம்மலையும், ஜெயலலிதாவுக்காக சீட் கேட்டு நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். இதேபோல பல்வேறு பிரமுகர்களும் ஜெயலலிதாவுக்காக விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.
இதில் காமெடி என்னவென்றால் ஜெயலலிதாவுக்காக தாக்கல் செய்யும் மனுக்களில் மாண்புமிகு அம்மாவுக்காக என்று கூறி ரப்பர் ஸ்டாம்ப்பில் முத்திரை குத்தி கொடுக்கின்றனராம்.
இதை விருப்ப மனுக்களை விநியோகிப்போரே விண்ணப்பத்தில் ரப்பர் ஸ்டாம்ப்பால் குத்திக் கொடுக்கின்றனராம். அதாவது கட்சியே இந்த ரப்பர் ஸ்டாம்ப்பை தயார் செய்து கொடுத்திருக்கிறது போல.
ஒருவேளை 'நமக்கு நாமே' என்பதை அதிமுகவினர் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.