Friday, 12 February 2016

இவர்கள் ஒற்றுமைக்கு மண்ணை அள்ளி( சுற்றிப்) போடுங்கள்.

எம்.பி.க்கள் தற்போது சம்பளமாக மட்டும் ரூ.50 ஆயிரம் பெறுகின்றனர். 

தொகுதி நிதியாக மாதம் ரூ.45 ஆயிரம் பெறுகின்றனர். 
 பேப்பர்  மற்றும் எழுது பொருட்கள் வாங்க மாதம் ரூ.15 ஆயிரம்,
 அலுவலக ஊழியர்கள் சம்பளத்துக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 
நாடாளுமன்றத்துக்கு  வரும்போது ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் படி வழங்கப்படுகிறது. 
இதை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என பா.ஜ எம்.பி யோகி ஆதித்யநாத்  தலைமையிலான நாடாளுமன்ற கூட்டு குழு கடந்தாண்டு ஜூன் மாதம் வேண்டுகோள் விடுத்தது. இதில் மட்டும் விழிப்புடன் உள்ளனர்.

கேபினட் செயலாளருக்கு இணையாக எம்.பி.க்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனகூறியுள்ளனர்  .  இதையடுத்து எம்.பி.க்கள் சம்பளத்தை  உயர்த்துவது பற்றி ஆராய குழு அமைக்க மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முடிவு செய்தது. இந்நிலையில் எம்.பி.க்களின் சம்பளம் மற்றும்  சலுகைகளை இரு மடங்கு உயர்த்துவது தொடர்பாக அமைச்சரவை குறிப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் பட்ஜெட்டில் இந்த உயர்வு அறிவிப்பு இருக்குமாம்.
தற்பொது வழங்கப்படும் ஊதியமே தண்டம் என்பதுதான் மக்கள் கருத்து.
வாக்குகளை வாங்கும் போது மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் என்றும்,நான் மக்களின் வேலைக்காரன் என்றும்தானே வாக்குகளை பொறுக்குகிறார்கள்.
இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய எதற்கு ஊதியம்.ஊதியம் வழங்கப்பட்டால் அதில் என்ன சேவை வருகிறது?
முதலில் மக்கள் பிரதிநிதி என்று வாக்குகலைப்பொறுக்கி வருபவர்களுக்கு கவுன்சிலர் முதல் அமைச்சர்கள் வரை ஊதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.
அவர்கள் பின் எப்படி வாழ்வது என்கிறீர்களா.
இன்று கார் இல்லாத சின்ன கவுன்சிலர் கூட இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?அது தவிர வாடகை வீட்டில் இருந்த அதே கவுன்சிலர் இன்று பல வீடுகளுக்கும்,சின்ன வீடுகளுக்கும் உரிமையாளர் என்பதும் உங்களுக்கே தெரியும்.அவர்கலுக்கு கொடுக்கப்பட்டு ஊதியம் அஞ்சுக்கும்,பத்துக்கும் இப்படி செழிக்க முடியுமா?

ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே வாங்கி ஆட்சி முடிவில் 50000 கோடிகளுக்கு உரிமையாளராகி வழக்குகளை சந்திக்கும் மக்கள் பிரதிநிதி கள் உள்ள நாட்டில்தான் நாம் உள்ளோம்.
அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுக்கும்,ஓய்வூதியங்க்களுக்கு போராடிக்கொண்டே இருக்கும் நாட்டில் சேவை செய்ய பிறப்பெடுத்த இவர்களுக்கு ஆண்டு தவறாமல் ஊதிய உயர்வு.ஐந்தாண்டு காலம் பதவி வகிர்த்தால்தான் ஓய்வூதியம் என்றிருந்த தை  ஒரு முறை பதவியேற்பு செய்தாலே ஒரு நாள் மட்டும் இருந்தாலே ஓய்வூதியம்  என்று எந்த போராட்டமும் இல்லாமல் அவர்களாகவே சட்டமேற்றிக்கொண்டுள்ளனர்.
ஆனால் இவர்கள் செயல்பாடுகள்.தமிழகத்தில் இருந்து போன 29 மக்களவை உறுப்பினர்கள் அம்மா வாழ்க என்று சொல்லியதைத்தவிர வேறு எதற்காகவும் வாய் திறந்ததாக இதுவரை தகவல் பாராளுமன்ற பதிவுகளில் இல்லை.
எத்தனையோ திட்டங்கள்,ரெயில்வே திட்டங்கள் ,அரசு தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு போகின்றன.
இதில் வேடிக்கை துணை சபாநாயகரே இந்த 30இல் ஒருவர்தான்.
மற்ற மாநில மக்களவை உறுப்பினர்கள் எப்படியோ .தமிழ் நாட்டுக்கு வாய்த்தவர்கள் மக்கள் முன்பு செய்த ஊழ் வினை பலன்தான்.
வெள்ளம்,மழை மாநிலத்தை புரட்டிப் போட்டபோது இவர்களை காணாதது கண்டு மக்கள் இந்த 39 களும் வெள்ளத்தில் காணாமல் போய்  விட்டார்களா என்று கதறி  அழுதது செய்தி.
39 எம்பிகள் கூட்டம்?
அதிலும் தூத்துக்குடி தொகுதி உறுப்பினர் செயல்பாடுகள் அவர் சார்ந்த கட்சியினரே பாராட்டி அனுதாபம் தெரிவிக்கும் அளவு இருந்தது.
காட்டாற்று வெள்ளம் அவரின் பாதி தொகுதியை சூழ்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி துன்பப்படுகையில் மனிதர் தொகுதி யில் உள்ள வீடு பக்கம் கூட வரவில்லை.அதைவிட கொடுமை தனக்கு அமைப்புச்செயலாளர் பதவியை தந்த அம்மாவை வாழ்த்தி அனைத்து நாளிதழ்களிலும் வண்ண விளம்பரங்களை கொடுத்தது.
நாடு முழுக்க வரிகளை வசூழித்து,மத்திய அரசுப்பனிகளை செய்து அதை மக்களை சென்றடைய செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ,ஒய்வூதியம் வழங்காமல் மக்கள் வரிப்பணத்தில் உண்டு கொழுத்த மக்கள் சேவையாளர்களுக்கு அவர்களாகவே ஊதிய்ழ்த்தை உயர்த்திக்கொள்வது எந்த வகையிலும் சரியானதல்ல.
நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் கீரியும்,பாம்புமாக சண்டை,கூக்குரலிட்டுக் கொள்ளும் எல்லாக்கட்சியினரும் இது போன்றவற்றில் மட்டும் ஒற்றுமையாக  வெளியே சப்தமே கேட்காத அளவு செயல்படுவதை பார்க்கும் போது நம் மக்கள் கண்ணே பட்டு விடும்.
இவர்கள் ஒற்றுமைக்கு மண்ணை அள்ளி( சுற்றிப்) போடுங்கள்.

1 comment:

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.