Wednesday, 10 February 2016

திமுகவின் கூட்டணி தகிடுதத்தம் காமெடிகள்

படித்ததில் ரசித்து சிரித்தது:

☀திமுகவின் கூட்டணி  தகிடுதத்தம் காமெடிப் பேச்சுக்கள்:

☀காங்கிரஸ்: திமுகவோடு கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ்  ஊழல் செய்து நாட்டைக் கொள்ளையடித்த கட்சி. 2ஜி ஊழலில் திமுகவை மாட்டிவிட்டு கூட இருந்தே குழிபறித்த கட்சி. அன்பிற்குரிய கனிமொழியை சிறையில் தள்ளிய கொடுமைக்கார காங்கிரஸ். கொள்கைக்குன்று ஆ. ராசாவை வழக்கில் மோசடியாக  சிக்கவைத்த கட்சி. தயாநிதி, கலாநிதியை பொய்யான வழக்கில் சிக்க வைத்த கட்சி. தயாளு அம்மாளை விசாரித்துக் கொண்டு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய கட்சி. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி. அதிமுக வெற்றி பெற  மறைமுகமாக உதவி செய்கிறது காங்கிரஸ். அது அதிமுகவின் B team.   காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது.
☀காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்தால், காங்கிரஸ் ஒன்றும் கூட்டணி வைக்கக்கூடாத கட்சி அல்ல. 2006-2011 மைனாரிட்டி ஆட்சியில் அமைச்சரவையில் பங்கெடுக்காமல்  திமுகவுக்கு கடைசி வரை ஆதரவு தெரிவித்த கட்சி. 2004-2014 வரை மத்திய அமைச்சரவையில் திமுக கேட்ட இலாகாக்களை கொடுத்த கட்சி. காமராஜர் வளர்த்த கட்சி. எங்களோடு கூட்டணி வைத்தால் நல்ல கட்சி.

☀ பாஜக :
திமுகவோடு கூட்டணி வைக்காவிட்டால் பாஜக மதவாத கட்சி. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி. கார்பரேட் கம்பெனிகளுக்கான கட்சி. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசரச்சட்டமாக கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான கட்சி. "பார்ப்பன கட்சி". தலித் அடக்குமுறைகள் நாடு முழுவதும் அதிகரித்து விட்டது.  வாஜ்பாயை போல மோடியைக் கருத முடியாது. அதிமுக வெற்றி பெற மறைமுகமாக உதவி செய்கிறது பாஜக. அது அதிமுகவின் B team. 

☀பாஜக திமுகவுடன் கூட்டணி வைத்தால், பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல. வாஜ்பாய் ஆட்சியில் குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு நாம் கூட்டணி வைத்திருக்கிறோம். இந்திய மக்கள் பாஜகவிற்கு பெரும்பான்மை வெற்றியை மத்தியில் வழங்கியுள்ளார்கள். எங்களோடு கூட்டணி வைத்தால் நல்ல கட்சி.

☀தேமுதிக:
திமுகவோடு கூட்டணி வைக்காவிட்டால் தேமுதிக நடிகனின் கட்சி. கொள்கையற்ற கட்சி. சென்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து நம்மை தோற்கடித்த கட்சி.விஜயகாந்த்திற்கு என்ன தகுதி இருக்கிறது?  அதிமுக வெற்றி பெற மறைமுகமாக உதவி செய்கிறது தேமுதிக. அது அதிமுகவின் B team.

☀தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்தால்,  அதிமுக ஆட்சியை விரட்ட நம்மோடு கைகோர்த்த கொள்கை பற்றாளன் திராவிடக் குலத்திலகம் புரட்சி கலைஞர்  கேப்டன். எங்களோடு கூட்டணி வைத்தால் நல்ல கட்சி.
☀பாமக:
திமுகவோடு கூட்டணி வைக்காவிட்டால் பாமக ஒரு சாதிகட்சி. தலித்துகளுக்கு எதிரான கட்சி. தலைவரைப் பற்றி அவதூறாக காடுவெட்டி குரு பேசியதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. ராமதாஸ், அன்புமணிக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுக வெற்றி பெற மறைமுகமாக உதவி செய்கிறது பாமக. அது அதிமுகவின்  B team.

☀பாமக திமுகவோடு கூட்டணி வைத்தால் பாட்டாளிகளுக்கான கட்சி. மருத்துவர்கள்  ராமதாஸ், அன்புமணி போன்ற படித்தவர்கள் தலைமை வகிக்கும் கட்சி. தமிழர்களுக்கான கட்சி. எங்களோடு கூட்டணி வைத்தால் நல்ல கட்சி.

☀மதிமுக :
திமுகவோடு கூட்டணி வைக்காவிட்டால், மதிமுகவுக்கு ஓட்டு கிடைக்குமா? மதிமுக என்ற கட்சி தமிழகத்தில்  இருக்கிறதா? வைகோவுக்கு என்ன தகுதி இருக்கிறது?  அதிமுகவுக்கு எதிரான  ஓட்டுகளை பிரித்து திமுகவை தோற்கடித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய அதிமுகவால் உருவாக்கப்பட்டவர்தான் வைகோ. அதிமுக வெற்றி பெற மறைமுகமாக உதவி செய்கிறது மதிமுக. அது அதிமுகவின் B team.

☀மதிமுக திமுகவுடன் கூட்டணி வைத்தால், வைகோ என் தம்பி. திராவிட பிரச்சார பீரங்கி. கொள்கைக்காக வாழும் அண்ணாவின் தம்பிகளுள் ஒருவன். எங்களோடு கூட்டணி வைத்தால் நல்ல கட்சி.
☀கம்யூனிஸ்ட் கட்சிகள் :
திமுகவோடு கூட்டணி வைக்காவிட்டால் அவை இரண்டுமே உண்டியல் கட்சிகள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கைதான்  கம்யூனிசம். தனியாக நின்று டெபாசிட் வாங்க முடியுமா? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுக வெற்றி பெற மறைமுகமாக உதவி செய்கின்றன இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும். அவை அதிமுகவின் B team.

☀கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்தால், கொள்கைக்காக நடத்தப்படும் கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சிகள். என்றுமே ஏழை மக்களுக்காகவும், விளிம்புநிலை மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் போராடும் கட்சிகள்  கம்யூனிஸ்ட்கள் தான். கலைஞர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறுவார். அதனால்தான் அவர் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தார். அவர்கள் எங்களோடு கூட்டணி வைத்தால் நல்ல கட்சி.

☀விடுதலை சிறுத்தைகள் :
திமுகவோடு கூட்டணி வைக்காவிட்டால், "திருமாவளவனுக்கு அளவுக்கு மீறி மரியாதை கொடுத்து விட்டோம். அவர்களை சரிசமமாக உட்கார வைத்துப்பார்த்ததற்கு திமுகவிற்கு அவர்கள் செய்யும் நன்றி இதுதான்." அவர்களால் டெபாசிட் வாங்க முடியுமா? திருமாவளவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுக வெற்றி பெற மறைமுகமாக உதவி செய்கிறது விடுதலை சிறுத்தைகள். அது அதிமுகவின் B team.

☀திமுகவோடு கூட்டணி வைத்தால், விடுதலை சிறுத்தைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் கட்சி. திருமணமே செய்து கொள்ளாமல்  தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் திருமாவளவன். அவர்கள் எங்களோடு கூட்டணி வைத்தால் நல்ல கட்சி.

இறுதியாக!!!!!!

☀வாக்காளர்களே!
நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் நீங்கள் தமிழினத் துரோகிகள். திராவிட இனத்தின் எதிரிகள். நீங்கள் அதிமுக வெற்றி பெற நேரடியாகவும்,  மறைமுகமாகவும் உதவி செய்கிறீர்கள். நீங்கள் அதிமுகவின் B team.

☀வாக்காளர்களே!
நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டால் நீங்கள் தமிழினத்தின் விடிவெள்ளி!  திராவிட இனத்தின் குலக்கொழுந்து! நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டால் மட்டுமே
நல்லவர்கள்!
உண்மையான தமிழர்கள்!!
உணர்வுள்ள திராவிடர்கள்!!! இல்லாவிட்டால் மீண்டும் சொல்கிறேன் நீங்கள் அதிமுக வெற்றி பெற உதவி செய்கிறீர்கள். நீங்கள் அதிமுகவின் B, C, D, E, F,G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z teamதான்

☀இப்படிக்கு,

கூட்டணி வைக்க கட்சி கிடைக்காமல், தனித்து நின்றால் தோற்றுவிடுவோம் என்று பயந்து,  தனித்து நிற்க தைரியமில்லாத கட்சிக்கும், கலைஞர் குடும்பத்திற்கும் விசுவாசியான நன்றியுள்ள
☀திமுக தொண்டன் ☀
(குறிப்பு: கட்சிக்காக உழைப்பவனுக்கு தேர்தலில் நிற்க சீட்டும், கட்சிப்பதவியும்  கிடைக்காது என்று தெரிந்தும் கட்சியில் இருப்போர் பிரிவு)

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.