Saturday, 6 February 2016

36 துறைகளின் சாதனைகளை விளக்க 36 நாட்கள் தேவை: ஜெயலலிதா-

தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஈடுபாடு காட்டி வந்தாலும்,
பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் அவ்வப்போது சுருக்கமாக கருத்துகளைத் தெறித்து கவனம் ஈர்த்து வருகிறார்.
இவரது கருத்துகளை முன்வைத்து இணையவாசிகள் கலாய்ப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதேவேளையில், அரசியல் ரீதியில் மற்ற கட்சித் தலைவர்களை உடனுக்குடன் கலாய்ப்பது என்ற வகையில் ராமதாஸ் தான் முன்னிலையில் உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆகியோரை குறிவைத்தே பெரும்பாலான விமர்சன கருத்துகள் இடம்பெற்றுள்ளனர்.
அந்த வகையில், சமீப காலமாக பாமக நிறுவனர் ராமதாஸ் தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம்மூலம் இம்மூவர் குறித்தும் வெளியிட்ட கலாய்ப்பு கருத்துகளில் முதன்மை வகிக்கும் 20 ட்வீட்கள் இதோ...
* மதுவுக்கு எதிராக விதவைகளை திரட்டி போராட்டம் - ஸ்டாலின் : வாக்குறுதி அளிப்பதிலும் காப்பி... போராட்டம் நடத்துவதிலும் காப்பியா?
* தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எல்லா குறைகளும் களையப்படும் - ஸ்டாலின் : அப்படின்னா... இவ்வளவு கலாமும் உறங்கினோம்னு சொல்லுங்க.
* ஜெயலலிதா தொகுதியில் போட்டியிட விருப்பமனு செய்தவர் கைது: அடிமைகள் அடிமைகளாகவே இருக்க வேண்டும்... அம்மாவுக்கு சமமாக நினைத்தால் இதுதான் கதியோ?
* மக்கள் காதில் அரசு பூ சுற்றுகிறது: கலைஞர் -நீங்க அண்ணாவை பின்பற்றுகிறீர்களோ இல்லையோ.. இந்த விஷயத்தில் ஜெயலலிதா உங்களைத் தானே பின்பற்றுகிறார்.
* என் வீடு மீதான தாக்குதலை கலைஞர் கண்டித்தது நெகிச்சியளிக்கிறது: பழ.கருப்பையா - ஆமாம்... 5 வருசத்துக்கு முன் அடித்தவரே கண்டித்தால் சும்மாவா?
* அனைத்து மாவட்டங்களிலும் BPO அமைப்போம்: மு.க.ஸ்டாலின் - பா.ம.க. தேர்தல் அறிக்கையில் இருந்து காப்பியடிக்கப்பட்ட 10ஆவது திட்டம்!
* அதிமுகவை விமர்சித்த பழ.கருப்பையா வீடு மீது ஆட்டோவில் வந்து தாக்குதல்: இந்த ‘அம்மா ஆட்டோ சேவை’ 1991 முதலே சிறப்பாக செயல்படுகிறதே!
* மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது: கலைஞர் - பிள்ளையையும் கிள்ளுவோம்... தொட்டிலையும் ஆட்டுவோம்... சூப்பர் அரசியல் தலைவரே!
* தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை: ஸ்டாலின் - போன 5 ஆண்டுகளில் வேலையற்றோர் எண்ணிக்கையை 73 லட்சமாக அதிகரித்ததே நீங்க தானே?
* கச்சத்தீவை மீட்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் &மதுக்கடைகளை திறந்தவங்களே மூட சொல்றாங்க, கச்சத்தீவை தாரை வார்த்தவங்களே மீட்க சொல்றாங்க!
* உயிர் குடிக்கும் ஜிகா வைரஸ் வேகமாக பரவுகிறது: குடி கெடுக்கும் திராவிடக் கட்சிகளை விடவா அந்த வைரஸ் கொடுமையானது?
* நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், அதனால் விவசாயிகளுக்கு நன்மை செய்வேன்:கலைஞர் - அப்படியா...! இது எப்போதிலிருந்து கலைஞரே!
* ஓட்டுக்கு பணம் தருவது தடுக்கப்படவேண்டும்: கலைஞர் - திருமங்கலம், பெண்ணாகரம், வந்தவாசி, 2009, 2011 தேர்தல்கள் மீது சத்தியமா சொல்லுங்க கலைஞரே!
* யாரும் ஓட்டுக்கு பணம் தராமல் தடுக்க வேண்டும்: கலைஞர் - உங்கள் மகன் அழகிரி பேரை நேரடியாக சொல்ல பயமா கலைஞரே?
* தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு:கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு... ஜெயலலிதா புளுகு 24 மணி நேரத்திற்கு மட்டும்!
* திமுகவில் சேர்ந்த மதிமுக மாவட்ட செயலர் ரூ.50 லட்சம் தேர்தல் நிதி: வாங்கியதில் கொஞ்சத்தை திருப்பி தந்தால் அதுவும் ‘நமக்கு நாமே’ தான்.
* 5 ஆண்டில் 1.08 கோடி பேருக்கு வேலை கொடுத்தோம்: ஜெயலலிதா- அப்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்துக்கிடக்கும் 85 லட்சம் பேர் செவ்வாய்கிரகவாசிகளா?
* குறைகளை களைய எண்1100-ல் அம்மா அழைப்பு மையம்:110 விதியில் அறிவிக்கப்பட்டதெல்லாம் வீண். அதனுடன் ஜீரோ சேர்த்த இத்திட்டத்தால் மட்டும் என்னபயன்?
* 36 துறைகளின் சாதனைகளை விளக்க 36 நாட்கள் தேவை: ஜெயலலிதா- அவ்வளவு பொய்யை எப்படி தயாரிச்சீங்கன்னு சொல்ல இன்னும் 36 நாள் தேவைப்படுமே?
* பொன்குடத்திற்கு பொட்டு வைத்த அளவுக்கு அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது: ஜெயலலிதா - மின்சாரமே தராமல் இருமுறை கட்டணத்தை உயர்த்தியதை சொல்றாங்க!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.