Wednesday, 27 January 2016

திருக்குறள் Vs. குரான் –வம்புக்கிழுக்கிறது தெளகீத் ஜமாஅத்?

‘ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுசனைக் கடிச்சுதாம்’என்ற பழமொழி போல் கடைசியில் தமிழர்களின் திருக்குறளும் மதப்பிரச்சாரப் பொருளாக மாறி விட்டது. சாதிபாகுபாடுகளுக்கும், மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது,  எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய உயர்ந்த நூல் என்ற கருத்தில்'உலகப் பொதுமறை' என்று தமிழர்கள் மட்டுமன்றி பன்னாட்டு அறிஞர்களும் போற்றுவதுடன், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுமுள்ள தமிழர்களின் பெருமைக்குரிய திருக்குறளைப் பற்றி   விவாதிக்க சீமானை, தெளகீத் ஜமாஅத் எனப்படும் முஸ்லீம் இயக்கம் அழைக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது ஜப்னா முஸ்லீம்(JaffnaMuslim) என்ற இணையத்தளம். 


தெளகீத் ஜமா அத் எனப்படும் முஸ்லீம் இயக்கம் திருக்குறள் எந்த மதத்தின் நூல்களையும் விட சிறந்த உலகப் பொதுமறை அல்ல என்று விவாதிக்கும் போது அவர்களின் மதநூலுடன் (அரபுக்களின் குரான்) ஒப்பிட்டு, அவர்களின் மதக் கொள்கைகளின் அடிப்படையில்  தானே விவாதிப்பார்கள். ஒரு மதநூலை எவ்வாறு எந்த மதத்துடனும் சம்பந்தமில்லாத நூலுடன் ஒப்பிட்டு விவாதிக்க முடியும்? 
தமிழர்களுக்கும் திருக்குறளுக்கும் இதைப் போன்ற அவமானம் வேறேதுமிருக்க முடியாது. தமிழ்நாட்டில் தமிழர் மத்தியில் ‘தமிழர்களாக’ வாழ்ந்து கொண்டே, தமிழர்களையும், தமிழர்கள் யாரை, எதை உயர்ந்ததாக நினைக்கிறார்களோ, போற்றுகிறார்களோ அவற்றை இழிவு படுத்த இவர்களுக்கெல்லாம் இடம் கொடுத்தது யார்? எந்தளவுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் இளிச்சவாய்த் தமிழர்களாக இருக்கிறார்கள் என்று எண்ணி  நொந்து கொள்வதைத் தவிர உலகத் தமிழர்களால் எதுவுமே செய்ய முடியாது.
கண்டவனுக்கெல்லாம் இப்படியான துணிச்சல் வருவதற்கு பெரியாரியம் முக்கிய காரணம் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அவர்கள் தான் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் தமிழர்களின் முன்னோர்களை, தமிழ் மாமன்னர்களை, தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்களை, தமிழர்களின் கலை, இலக்கியங்களை இழிவு படுத்தி, பேசி மற்றவர்களுக்கும் வழி காட்டியவர்கள். கடைசியில் மத வேறுபாடேயற்ற திருக்குறளை அவர்களின் மதப்பிரச்சாரக் கருவியாக்கி   வள்ளுவப் பெருந்தகையை இழிவுபடுத்தத் துடிக்கின்றனர் வஹாபிகள். இந்த விடயத்திலாவது தமிழர்கள் தமது சாதி, மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு இதைத் தடுக்க வேண்டும்.

http://www.jaffnamuslim.com/2016/01/blog-post_766.html

7 comments:

  1. அனைத்து இலக்கியங்களும் விவாதத்திற்க்கு உட்பட்டது தான் என் தாய் தமிழ் என்றும் தளே நிமிர்ந்து நிற்க்கும். அதற்க்கு எவரும் மதச்சாயங்கள் பூசவேண்டாம்.இப்படிக்கு தமிழழன்.

    ReplyDelete
  2. not functions this web page .admin where?

    ReplyDelete
  3. Very good...this shows that many viewers are following this site regularly but not commenting here......your comments only boost the site to grow....comment daily....

    ReplyDelete
  4. தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்.
    விவாதத்திற்கு தயார் என நான்காம் தமிழ்ச்சங்கம் அறிவித்துள்ளது.
    விவாதத்திற்கு நானே போதும் தயார். குல்லா ஆசாமிகளே வாங்க பார்க்கலாம்

    ReplyDelete
  5. தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்.
    விவாதத்திற்கு தயார் என நான்காம் தமிழ்ச்சங்கம் அறிவித்துள்ளது.
    விவாதத்திற்கு நானே போதும் தயார். குல்லா ஆசாமிகளே வாங்க பார்க்கலாம்

    ReplyDelete
    Replies
    1. இது மதப் பிரச்சனை அல்ல.மதி பிரச்சனை.குறிப்பு : இந்த தகவல்களை எனக்கு அளித்ததே என் முகமதிய நண்பர் சஃபியுல்லா MA,B.ED (TAM)

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.