Tuesday, 5 January 2016

தொல்காப்பியம் - மரபியல் கூறும் உண்மைகள்

வணக்கம் !!
என்ன கேள்வி கேட்டு இருந்தானா , "தாவரங்களுக்கு உயிர் உண்டுன்னு" கண்டு பிடிச்சுது யாரு ?
எல்லாரும் சொன்னங்க "ஜெ.சி.போஸ்" அப்பிடின்னு. சரி ; ரொம்ப சரி ; ஆனா எப்ப கண்டு பிடிச்சாரு ? 1900-ல.
நான் என்ன சொல்லுரன்னா 2௦௦௦ வருசம் முன்னாலேயே நம்ம தொல்காப்பியர் இத சொல்லிடாரு.
அப்பிடி என்னதான் சொல்லிஇருக்காருன்னு பாக்கலாமா?
தொல்காப்பியம் => 3 அதிகாரங்கள் => சொல் , எழுத்து , பொருள் ;
1 அதிகாரம் => 9 இயல்கள் ;
அதுல பொருளதிகாரத்துல இருக்குற மரபியல்தான் நமக்கு இப்ப வேணும். இது தமிழர் வாழ்வியல் மரபுகளைக் கூறுவது. இதுல இருக்க செய்யுள் 571 to 578 மட்டும் நாம இப்ப பாக்கலாம்.
571 - > இதுல தொல்காப்பியர் ஒரு அறிவு முதல் ஆறு அறிவு உடைய உயிரினங்களை வகைப்படுத்துகிறார்.
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
ஓரறிவு - > உடம்பால் உணர்வன ;
ஈரறிவு -> உடம்பு & நாக்கால் உணர்வன ;
மூன்று அறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கால் உணர்வன ;
நான்கறிவு - உடம்பு, நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வன ;
ஐந்தறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காதால் உணர்வன ;
ஆறறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது , மனசு ;
572 -> ஓரறிவு உயிரினங்கள் ஏதுன்னு இதுலதான் சொல்லுறாரு
புல்லும் மரனும் ஓர் அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.
புல்லும் , மரமும் ஓர் அறிவு கொண்டவை. புல்லுனா அருகம் புல், கோரைப் புல் மட்டும் இல்ல. தென்னை, பனை. பாக்கு, மூங்கில், வாழை, முருங்கை இது எல்லாமே புல்தான். மா மரம், ஆல மரம் அது மாதிரிலாம் மரம்-ல சேரும்.
சரி ; எது மரம் ? எது புல் ? அதுக்கு ஒரு கணக்கு சொல்லுறாரு தொல்காப்பியர்.
வைரம் பாய்ந்து உறுதியாக இருப்பது மரம் ; மற்றவை = புல் ;
அடுத்த வரியை பாருங்க : "பிறவும் உளவே" == மரம் , புல் மட்டும் இல்ல ; இன்னும் கொஞ்சம் ஓரறிவு உயிர்கள் உள்ளன ;
தாமரை , கழுநீர் -> இந்த ரெண்டும் ஓரறிவு உயிர்தான் ; தாமரை தெரியும் ; அது என்ன கழுநீர் ?? குளத்துல தேங்கி நிக்கிற தண்ணில இருக்க "பாசி".
இப்ப சொல்லுங்க தாவரங்களுக்கு உயிர் உண்டுன்னு கண்டுபிடிச்சது யாரு??
மத்த செய்யுள்ளும் பாத்துருவோம்.
573 -> ஈரறிவு உயிரினங்கள் ஏதுன்னு இதுல சொல்லுறாரு
நந்தும் முரளும் ஈர் அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.
நத்தை , சங்கு, சிப்பி, கிளஞ்சில் => ஈரறிவு உயிரினங்கள்
574 -> மூன்றறிவு உயிரினங்கள்:
சிதலும் எறும்பும் மூ அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.
ஈசல், எறும்பு ; "பிறவும் உளவே" => அட்டை போன்றவை
575 > நான்கு அறிவு உயிரினங்கள்:
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.
நண்டு, தும்பி ; "பிறவும் உளவே" = ஞிமிறு (தேனீ) , வண்டு
576 > ஐந்து அறிவு உயிரினங்கள்:
மாவும் மாக்களும் ஐஅறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.
பறவைகள் , நான்கு கால் விலங்குகள் ; "பிறவும் உளவே" = எட்டு கால் விலங்குகள் :))
577 > ஆறு அறிவு உயிரினங்கள்
மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.
மனிதர்கள் ஆறு அறிவு உடையவர்கள் ;
ஒரு twist இருக்கு பாருங்க இங்க ; இதுலயும் "பிறவும் உளவே" சொல்லுறாரு .
அது என்னனா சில வகை குரங்குகள் , கிளி , யானை :)))
இன்னும் நிறைய இருக்கு தொல்கப்பியத்துல..
தொல்காப்பியம்
முதல் பாகம் - எழுத்ததிகாரம்
தலைப்பு விதிகளின் எண்ணிக்கை
நூல மரபு 33
மொழி மரபு 49
பிறப்பியல் 21
புணரியல் 40
தொகை மரபு 30
உருபியல் 30
உயிர்மயங்கியல் 93
புள்ளிமயங்கியல் 110
குற்றியலுகரப்புணரியல் 77
இரண்டாம் பாகம் - சொல்லதிகாரம்
தலைப்பு விதிகளின் எண்ணிக்கை
கிளவியாக்கம் 62
வேற்றுமையியல் 22
வேற்றுமைமயங்கியல் 35
விளிமரபு 37
பெயரியல் 43
வினையியல் 51
இடையியல் 48
உரியியல் 98
எச்சவியல் 67
மூன்றாம் பாகம் - பொருளதிகாரம்
தலைப்பு விதிகளின் எண்ணிக்கை
அகத்திணையியல் 58
புறத்திணையியல் 30
களவியல் 51
கற்பியல் 53
பொருளியல் 52
மெய்ப்பாட்டியல் 27
உவமயியல் 38
செய்யுளியல் 235
மரபியல் 112

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.