Tuesday, 5 January 2016

பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு?

#உஷார்உஷார்உஷார்உஷார்

முக்கிய தகவல்...

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு?
இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்-
இனிமேல் யாரும் இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக.
வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.
அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா - பெட்ரோல் முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும் முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி விடுவார்கள்.
உதாரணமாக நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லி இருப்பீர்கள். அந்த நபர் 100 ரூபாய் என பொத்தானை அழுத்தி பெட்ரோல் போட ஆரம்பிப்பார்.
ஆனால் பெட்ரோல் இறங்கி கொண்டிருக்கும்போதே மீட்டரில் 90 ரூபாய்க்கு அருகில் வரும்போது அவர் கையில் உள்ள விசையை அழுத்தி பின் ரிலீஸ் செய்வார். பின்னர் பெட்ரோல் மெதுவாக இறங்கி 100 ரூபாயை தொடும்.
இது வழக்கமாக எல்லோரும் பார்க்கும் ஒரு விஷயம்தான். ஆனால் இந்த சாதாரண விஷயத்தினால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மதிப்புள்ள பெட்ரோல் உங்களுக்கு குறைகிறது என்று தெரியுமா?
எவ்வாறெனில், பெட்ரோல் பம்ப் மீட்டர் ஒரே சீராக இயங்கினால்தான் சரியாக 100 ரூபாய்க்கு பெட்ரோல் இறங்கும். நடுவில் தடை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் இயங்கினால், மீட்டர் recalibration ஆகி குறைவான அளவு பெட்ரோல் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
இது போல நூதன திருட்டு மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நாள்தோறும் 10000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை லாபம் அடைகிறார்கள்.
மிகவும் கவனமாக இருக்கவும்... விசையை அழுத்த அனுமதிக்க வேண்டாம்.
விழிப்புடன் இருங்கள். ஏமாற்றப்படுவதை தவிருங்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.