Saturday, 16 January 2016

கோல்கேட் இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குகிறது – ஆய்வில் அதிர்ச்சி!!

உலக அளவில் பெரும் முன்னணி டூத்பேஸ்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது கோல்கேட்.
பெரும்பாலான மக்கள் இந்த டூத் பேஸ்ட்டை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால், கடந்த வருடம் நச்சுயியல் ஆய்வு கழகத்தினால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கோல்கேட் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயனம் ஆனது புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது, துணி துவைக்கும் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைக்ளோசான்(triclosan) எனப்படும் இந்த இரசாயனம் குறித்த ஆய்வுகள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்தே பெருமளவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

பயங்கரமான இரசாயனம்
ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் மிகவும் பயங்கரமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது டியோடிரன்ட், ஆன்டிசெப்டிக், மற்றும் கை கழுவும் திரவங்கள் போன்றவற்றில் பரவலாக சேர்க்கப்படும் இரசாயனம் என்று கூறப்படுகிறது. மேலும் சில வகையான துணி துவைக்கும் சலவை சோப்புகளிலும் கூட இது சேர்க்கப்படுகிறது.

நச்சுயியல் ஆய்வு கழகம் (Chemical Research in Toxicology) வெளியிட்ட ஆய்வறிக்கையில் , இந்த இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இந்த தீங்கு விளைவிக்கும் மூலப்பொருள், சருமத்தை ஊடுருவி, இரத்தத்தில் கலந்து ஹார்மோன் சமநிலையை சீர்குலைந்து போக செய்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கனடாவில் தடை

உலகிலேயே கனடாவில் மட்டும் தான் ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் இதன் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்ட கனடா அரசு பின்னாளில் மொத்தமாக தடை செய்தது.

ஆதாரங்களும், ஆய்வாளர்களும் இவ்வாறு கூற, வழக்கம் போல் கோல்கேட் தரப்பு, தங்கள் தயாரிப்பு பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானவை என்று அவர்களது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.
கனடா  தடையை அடுத்து மேலைய,அமெரிக்க நாடுகள் தடை செய்ய ஆய்வு செய்து வருகின்றன.
ஆனால் இந்தியாவில் அது நடக்கும் என்று தெரியவில்லை.
மேகி ஆபத்து என்று நிறுபனமாகி  தடை போட்டார்கள்.ஆனால் இன்று ?இந்திய மக்கள் ஆய்வுக்கான எலிகள்,தவளைகள்தான்.அதைத்தான் மேகி,கோக்ககோலா ,பெப்சி போன்றவைகள் நிருபித்துள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.