Friday, 15 January 2016

திருக்குறள் என்ற கடலுக்கு செல்ல சொல்லிக் கொடுங்கள்

குழந்தை என்னும் நட்சத்திரம் மின்ன
பெற்றோர்கள் இரவாக இருக்க வேண்டும் .

சூரியன் வந்தால் மறைந்து விடுவேனே என்று கூறினால்
ஒற்றை விரலில் சூரியனையே மறைத்து விடலாம்
என்று நம்பிக்கை தரவேண்டும்.

அறிவு என்ற மீன் பிடிக்க திருக்குறள்
என்ற கடலுக்கு செல்ல சொல்லித்தரவேண்டும் .
லட்சியம் என்ற விதையை நூலகம் என்ற கடையில் 
தான் கிடைக்கும் என்று சொல்லவேண்டும்.

கடவுள் என்ற முகவரிக்கு செல்ல பெரியவர்கள் 
தான் தபால் நிலையம் என்று புரிய வைக்கவேண்டும்.
இலக்கு என்று பந்தயத்தில் ஓட ஆசிரியர் என்ற 
ஊக்க மருந்தை பயன்படுத்த சொல்லவேண்டும்.

லட்சியதுக்கு அடிமையாக வாழ்வது தவறு இல்லை 
மற்றவர் இடத்தில அடிமையாக வாழ்வத தான் 
தவறு என்று சொல்லவேண்டும்.
உள்ளத்தில் உருவாக்க பட்ட விதையை பாலை நிலத்தில்
பயிர் வைக்க கூடிய ஆசிரியர் இடம் தரசொல்ல வேண்டும்.

இந்த விதை மரம் ஆகும் வரை பாலை நிலத்து 
விவசாயிகள் தான் பாதுகாப்பு தரவேண்டும்
இது வேலி இல்லாத மரமாக ஆன பின்னர் தினம் நல்ல 
பழங்களை தர புத்தகங்களை காவலாளிய போட வேண்டும் 

இந்த உலகத்தில் லஞ்சம் என்ற புற்றுநோய்
சாதி மதம் என்ற மன நோய்
இந்த முறையில் வளர்க்க பட்ட மரங்களில் தான் 
இதை குணபடுத்தும் மருந்து கிடைக்கும்.

by நமண்டி ராஜசேகரன்

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.