Saturday, 16 January 2016

அரசு நல்ல திட்டங்களை அறிவிக்கிறது. அதே நேரத்தில் ..

Please read fully and share to others

2015 டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது
வெளியான ஒரு தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக உள்ளது.

அந்த சமயத்தில் சிம்புவின் பீப் பாடலைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த தமிழக ஊடகங்கள் எதிலுமே அந்த செய்தி வந்ததாகத் தெரியவில்லை.

"Economic Times" நாளேடுதான் அந்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்து பிரசுரித்திருந்தது.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் இணையர்களுக்கு
(ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு குறைவாகவும், இருபாலருக்கும் முதல் திருமணமாகவும் இருத்தல் வேண்டும் ) ரூபாய் 2.5 லட்சம் உதவித் தொகை வழங்குவதென்று 2013-ஆம் ஆண்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஆண்டிற்கு 500 தம்பதியருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்றும், பயனாளிகளின் எண்ணிக்கை மாநிலங்களின் தலித் மக்கள் தொகை அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த உதவித் தொகைக்காக விண்ணப்பித்துள்ளவர்கள்
19 பேர் மட்டுமே......

ஆந்திரா - 5
தெலுங்கானா - 5
புது தில்லி - 3,
மேற்கு வங்காளம் - 3
ஹரியானா - 2
ராஜஸ்தான் - 1

ஆக மொத்தம் 19 இணையர்கள் தான் பயன் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரு பயணாளி கூட இல்லை என்பதால் இங்கு ஒரு தலித் ஆணா, பெண்ணோ சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதா பொருள்?

தலித் ஆணை மணந்த
வேற்று சாதி பெண்....!

தலித் பெண்ணை மணந்த
வேறு சாதி ஆண்....!

கெளரவக் கொலைகள்...!

கலவரங்கள்...!

என தினம் தினம் செய்திகளை வெளியிடுகின்றன நமது ஊடகங்கள் .ஊடக வெளிச்சத்தில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாக, ஆரவாரமின்றி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு அவர்கள் உற்றார் உறவினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இனிதே இல்லறம் நடத்துகின்ற இணையர் எண்ணிக்கை பண்மடங்கு அதிகம். குறிப்பாக தமிழகத்தில் அதிகம்.

ஆனால் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர் கூட உதவித் தொகை பெறவில்லை.
காரணம். இப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்பதே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதால் தான்.

அதிலும் தமிழக SC/ST WELFARE DEPARTMENT அதிகாரிகளுக்கே இப்படி ஒரு திட்டம் இருப்பது தெரியவில்லை என்று எகணாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்றை துவங்கி நூற்றுக்கணக்கான தம்பதியருக்கு பாதுகாப்பு அளித்து வரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண்ணுரிமைப் போராளி ஜக்மதி சஸ்வான் என்பவர் இப்படி ஒரு திட்டம் இருப்பது தனக்கே தெரியாது என்று வியப்படைந்துள்ளார்.

மேலும் அவர், "மக்கள் எழுச்சியின் விளைவாக அரசு நல்ல திட்டங்களை அறிவிக்கிறது. அதே நேரத்தில் அது வெளியே தெரியாத படி அதிகாரிகள் கவணமாக பாதுகாக்கின்றனர் ", என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசு மக்கள் நலனுக்காக அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் மக்கள் மன்றத்தை அடையாமல் இருப்பதற்கு யார் காரணம் இதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் யார்?

அதிகாரிகளா....?
அரசியல்வாதிகளா...?
ஊடகங்களா.....?
சமூக நீதிப் போராளிகளா....

ஆதாரம் கீழே 👇🏻👇🏻👇🏻👇🏻
http://ambedkarfoundation.nic.in/html/ICMScheme.pdf

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.