Monday, 11 January 2016

வாங்குற என் வீட்டாளு சரியில்ல..

படம்-Oneindia Tamil

அக்கா......என்னக்கா...... எங்க பையொட கிளம்பிட்டீங்க.....”

“வேற எங்க போவேன்.... ரேசன் கடைக்கு தாண்”...

அங்க என்னக்கா விசேசம்...”

“உனக்கு தெரியாதா.....ஸ்டிக்கர் ராணி, இந்த பொங்கலுக்கு. பச்சை அரிசியும்,வெல்லமும், கூடவே ஒன்றையடி கரும்பும், 100ரூபாயும் தாராலாம்.... அத வாங்கிட்டு வர... உங்க மாமா போயிருக்காரும்மா... காலைல போன மனுசன் இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் வரலீயே ன்னு போயி பாக்கலாமுன்னு போறேன்ம்மா.......


ஓ....பொங்கல் பரிசு வாங்கப் போறேன்னு சொல்லுக்கா.......”


“ஓமா.....பொல்லாத பொங்கள் பரிசு...... ஏங்கன்னு நீயுதான் படிச்சுட்டு வேலை இல்லாமா இருக்க..... ஒனக்கு ஒரு வேல கிடைச்சா .....  நீ இந்த பொங்கல் பரிச வாங்கவா போற.......

“ சத்தியமா.... வாங்க மாட்டேன்க்கா...ஆனா நிலம அப்படி இல்லக்கா...... ஸ்டிக்காரி தர்ர 100ரூபாய்க்கு இருக்கிறவனுங்களும்....இல்லாதவங்களும் பிச்சைகாரனாக மாறிவிடுறாங்க........ எ ங்க அப்பா போயி பாத்துட்டு வந்து கூட்டமாக இருப்பதாக சொன்னார்க்கா.......

“ஏதுக்கும் நான் போயி பாத்துட்டு வந்துடுறேனே....”

“ சரிக்கா...போயிட்டு வாங்க்கா....”

.....................................


என்னக்கா......போன வேகத்துல...திரும்பி வந்துட்டீங்க....... ரேசன் கடையில கூட்டமக்கா.....”

“ஆமாக் கன்னு பொம்பள கூட்டம் அதிகமாக இருக்கு, ஆம்பிள கூட்டம் கொஞ்சம் குறைவாக இருக்கு....”

“ அப்போ....மாமா.....ரேசன்ல வாங்கிட்டாரா.....”

அந்த கூத்த ஏன்? கேட்குற.......ரேசன் கடையில  கொடுத்த  100ரூபாய்க்கு உன் மாமன். சரக்கு வாங்கி ஊத்திகிட்டு போனதா...... அந்தாளு கூட நின்னாளு ஒருத்தரு சொன்னாரும்மா......என்  பொழப்ப பாத்தீயாம்மா....”

இல்லக்கா......கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு கொடுத்தவங்களே...பறித்துகிட்டாங்கக்கா..........

“ என்னா செய்யிறதுகொடுக்கிற ஆளும் சரியில்ல.......  வாங்குற என் வீட்டாளு சரியில்ல....இந்தக் கொடுமை என்னிக்குத்தான்  தீரப் போகுதோ தெரியலையம்மா.........??????

4 comments:

  1. ஐயா நீங்கதான் உண்மையை சொல்றீங்க இதை சொல்றதுக்கு தில் வேணும் அது உங்ககிட்ட இருக்கு I LIKE U

    ReplyDelete
  2. Kovan madhiri மூடு மூடுன்னு சொன்னா புடிக்கிறாங்களாம்பா... அனிருத் மாதிரி Open the tasmac சொன்னா அவார்டு தருவாங்களோ... வாழ்க தள்ளாடு ..ச்சீ தமிழ்நாடு

    ReplyDelete
  3. ஐயா பார்த்து போடுங்க

    ReplyDelete
  4. Good job admin sir

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.