Monday, 7 December 2015

அறிவோம் அறிவியல் - காந்தம், மின்சாரம்,அம்மோனியா

1. காந்த விசைக்கோடுகள் வட முனையில் தொடங்கி தென் முனையில்
முடிவடைகின்றன.
2. காந்த விசைக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.
3. காந்த விசைக்கோடுகள் மற்ற பகுதியைக் காட்டிலும் முனைகளின் அருகில் அதிக செறிவுடன் இருக்கும்.
4. காந்த விசைக்கோடுகள் மூடிய வளைகோடுகள் ஆகும்.
5. ஒரே சீரான காந்தப் புலத்தில் காந்த விசைக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.

6. இரும்பின் கியூரி வெப்பநிலை 770 டிகிரி சென்டிகிரேட்.
7. காந்தத்தைச் சுற்றி அமைந்திருப்பது காந்தப்புலம்.
8. இரும்பு ஒரு மென்காந்தப் பொருள்.
9. காந்தக் கேடயமாகப் பயன்படும் பொருள் தேனிரும்பு.
10. காந்த ஒதுக்கத்தை அளக்கப் பயன்படும் கருவி கியூ காந்தமானி.
11. காந்தக் கேடயத்திற்கு புவிக் காந்தப் புலம் கிடையாது.
தற்காலிக காந்தம் - இரும்பு.
12. காந்தமாக்கப்படக் கூடிய பொருள் - நிக்கல்.
13. காந்தப் புலச் செறிவின் அலகு ஆம்பியர்/மீட்டர்
14. காந்த உட்புகு திறன் அலகு ஹென்றி/மீட்டர் ஆகும்.
15. ஒரு சட்டக் காந்தத்தினை தடையின்றி தொங்கவிடும்போது அதன் முனை, புவியின் வடக்கு தெற்கு திசையை நோக்கி நிற்கும்.
மின்விசைக் கோடுகளின் பண்புகள்
16. மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் துவங்கி எதிர் மின்னூட்டத்தில் முடிவடையும்.
17. மின்விசைக்கோட்டுக்கு ஒரு புள்ளியில் வரையப்படும் தொடுகோடு அப்புள்ளியில் மின்புலத்தின் திசையைக் குறிக்கும்.இக்கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்வதில்லை.
18. கடத்தியின் பரப்புக்கு விசைக்கோடு எப்போதும் செங்குத்தாக இருக்கும்.
19. மின்னழுத்தத்தின் அலகு வோல்ட் ஆகும். சாதாரணமாக நாம் மின்னழுத்தத்தை வோல்டேஜ் என்று குறிப்பிடுகின்றோம்.
20. மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.
21. ஒரு கூலும் மின்னூட்டம் கடத்தி ஒன்றின் வழியே ஒரு வினாடியில் பாய்ந்தால் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.
22. மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டுக்கு நேர்த்தகவில் இருக்கும்.
23. மின்திறனின் அலகு வாட் ஆகும்.
மின் அதிர்ச்சி:

24. உலர்ந்த தோலுக்கு உயர் மின்தடை இருக்கும். அப்போது பாயும் மின்னோட்டம் குறைவாகும். மின்னதிர்ச்சி அங்கு மென்மையாக இருக்கும். ஈரத்தோலுக்கு மின்தடை மிகக் குறைவு.
25. மின்னோட்டம் மிக அதிகமானால் சுவாச சிக்கல்கள் ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படக்கூடும்.
26. மின்னோட்டமே மனிதனைக் கொல்லும்; உயர்ந்த மின்னழுத்தம் கொல்லுவதில்லை.
27. எபொனைட் தண்டை கம்பளியால் தேய்ப்பதால் உண்டாகும் மின்சாரம் எதிர்மின்னூட்டம்.
28. பொதுவாக உலோகங்கள் ஓர் நற்கடத்தியாகும்.
29. கூரிய முனையில் அதிக மின்னூட்டம் இருக்கும்.
30. உலோகங்களின் மின் கடத்தலுக்குக் காரணம் கட்டுறா எலெக்ட்ரான்கள்.
31. கடத்திகளின் கூரான முனைளிலிருந்து மின்னூட்டம் மிக விரைவாக வெளியேறுவதை பெஞ்சமின் பிராங்க்லின் கண்டுபிடித்தார்.
32. மனித உடல் ஒரு மின்கடத்தி.
33. மின் தூண்டுதலால் ஏற்படுத்தப்படும் மின்னூட்டம் தூண்டப்பட்ட மின்னூட்டம் என்கிறோம்.
34. நீர்த்துளிகள் சேர்ந்த தொகுப்பே முகில் எனப்படும்.
35. மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் மின்தடை.
36. மின்சார மணி மின்காந்த விளைவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
37. நீச்சல் விதியை உருவாக்கியவர் ஆம்பியர்.
38. மின்சார மணியில் மின்சாரத்தை விட்டு விட்டு பாய்ச்ச உதவும் அமைப்பு ஆர்மச்சூர்.
இயற்கை கதிரியக்கத் தனிமங்கள்:
39. யுரேனியம், தோரியம், பொலோனியம், ரேடியம் போன்றவை இயற்கை கதிரியக்கத் தனிமங்கள் ஆகும்.
40. செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் ரேடியோ நியூக்ளைடு அல்லது கதிரியக்க ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
41. ஆல்ஃபா துகள்கள் ஹீலியத்தின் உட்கருவைப்பெற்றவை. ஹைட்ரஜன் அணுநிறையைவிட 4 மடங்கு கனமானது.
42. ஆல்ஃபா துகளானது கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் மிகப்பெரிய துகள் ஆகும்.
43. ஆல்ஃபா துகளானது அதிக நிறையும் அதிக திசைவேகத்தையும் பெற்றிருப்பதால், இவற்றின் இயக்க ஆற்றல் அதிகமாகும். எனவே இவை செயற்கை தனிமங்களை உருவாக்கப் பயன்படும் தாக்கிகளாகப் பயன்படுகிறது.
44. பீட்டா கதிர்கள் புகைப்படத் தாள்களை பாதிக்கும்.
45. பீட்டா கதிர்கள் மெல்லிய அலுமினியத் தகடைக் கடக்கக் கூடியது.
46. காமா கதிர்கள் கண்ணிற்கு புலப்படாது.
காமா கதிர்கள் நின்றொளிர்தலை உண்டாக்கும்.

47. காமா கதிர்கள் காற்றினை அயனியாக்கும்.
48. காமா கதிர்கள் பொருள்களின் மீது விழும்போது பீட்டா கதிர் அல்லது எலெக்ட்ரான்களை வெளியேற்றுகின்றன.
49. எலெக்ட்ரோ மீட்டர், கெய்கர் முல்லர் எண்ணி, மேகப்பெட்டகம், குறைகடத்தி மின்சுற்றுகள் இவை யாவும் கதிரியக்க வீச்சுகளை அறிய பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும்.
50. பாஸ்பரஸ் 32 அல்லது ஸ்ட்ரான்சியம் - 90 ஆகியவை தோல் புற்றுநோயைக் குணப்படுத்தும்.
51. மருத்துவக் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்க கதிர்வீச்சு பயன்படுகிறது.
52. டிரிட்டியம், கார்பன் 14 போன்றவை உயிரியல் மூலக்கூறுகளைக் கண்டறிய பயன்படுகிறது,.
53. ரேடியோ ஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர்விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை, ஆகியவற்றை உருவாக்கலாம்.
54. காமா கதிர்களைப் பயன்படுத்தி அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை அறிய முடியும்.
55. கதிர்வீச்சுகளின் உதவியால் பொருள்களின் அமைப்பு வாய்ப்பாட்டை கண்டறியலாம்.
56. கதிரியக்க அயோடினைப் பயன்படுத்தி கரைசல்களில் தங்கியிருக்கும் மிகச்சிறிய அளவு சில்வர் கசடுகளையும் கண்டறியலாம்.
57. கதிரியக்க ஐசோடோப்புகள் வேதிவினைகளின் சுவடறி தனிமங்களாகப் பயன்படுகிறது.
58. நியூட்ரான் கிளர்வு ஆய்வு மூலம் ஆர்செனிக் நச்சுத் தன்மையைக் கண்டறிவதில் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
59. தொல்பொருள் மற்றும் பழம்பொருளின் வயதை அறிய கார்பன் -14 ஐசோடோப்பு பயன்படுகிறது.
60. கதிரியக்க கார்பனின் அரை ஆயுள் காலம் 5,730 ஆண்டுகள்.
61. கார்பன் - 14  கதிரியக்கத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் படிவங்களின் வயதை கண்டுபிடிக்கலாம். இது கதிரியக்க கார்பன் தேதியிடல் எனப்படுகிறது.
62. ரேடியோ தேதியிடுதல் முறையில் விண்கற்கள், நிலவில் உள்ள பாறைகள் ஆகியவற்றின் வயது கணக்கிடப்படுகிறது.
அம்மோனியா:

63. நிறமற்ற, கார நெடியுடைய வாயு.
64. காற்றைவிட லேசானது. மிக எளிதாக அதனை நீர்மமாக்கலாம்.
65. அம்மோனியம் சல்பேட், அம்மோனியம், நைட்ரேட் போன்ற உரங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது.
66. நைட்ரிக் அமிலம், அம்மோனியம் குளோரைடு போன்ற சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
67. பனிக்கட்டி தயாரிக்கவும், அம்மோனியா குளிர்ப்பானாகவும் பயன்படுகிறது.
68. மருந்தாகவும், எண்ணெய், கொழுப்பு முதலியவற்றை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
69. அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருளாகப் பயன்படுகிறது .

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.