Wednesday, 16 December 2015

அனுபவம் என்பதே நான்தான்!

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்...
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பென சொல்வது யாதெனக் கேட்டேன்...
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது
யாதெனக் கேட்டேன்...
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது யாதெனக் கேட்டேன்...
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்...
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்...
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
 பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்...
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்...
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது யாதெனக் கேட்டேன்...
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்...
இறந்து பாரென இறைவன் பணித்தான்! ‘அனுபவித்தே தான்அறிவது வாழ்க்கையெனில்,ஆண்டவனே நீ ஏன்..?’ எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி "அனுபவம் என்பதே நான்தான்" என்றான்!     - கவிஞர் கண்ணதாசன்.....

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.