Friday, 4 December 2015

வெள்ளம் வடிந்தாலும் கோபத்தை வடியவிடாதே

#MLA_MP_வீடுகளில்_குடியேறு
#கலெக்டர்ஆபீசை_கழிப்பறையாக்கு


50ஆண்டுகளாக மாபியா கும்பலாக இடத்தை ஆக்ரமித்த ஜெ.வின்
போயஸ் தோட்டத்தில் குடியேறு

மு.கவின்கோபாலபுரத்தில் குடியேறு

ரியல்எஸ்டேட்டின் ரியல் மாபியா சசிகுடும்பத்தினர் வீட்டில் குடியேறு.

போலிப்பட்டா தயாரித்துத் தந்த
வருவாய்துறையினர் வீட்டில் குடியேறு

நீர்நிலைகளை சீர்படுத்தென சீறாத
ஹெல்மெட்டுக்காகத் சீறிய
நீதிபதிகள் வீட்டில் குடியேறு.

அரசுமீது குற்றமில்லை, மழைதான் அதிகம் பெய்ததென ஜால்ரா அடிக்கும் தினமலர், புதியதலைமுறை, தினத்தந்தி அலுவலகங்களில் குடியேறு.

நீர்நிலைகளை ஆக்ரமித்த
மக்கள்மீதுதான் குற்றம் என்று திமிரில் உளறும் அதிகாரி நாய்களின் வீட்டில் குடியேறு.

பிராடுபேசி இடத்தை விற்ற பில்டர்களின் வீட்டில் குடியேறு.

ராஜ்பவனில்,உயர்நீதிமன்றத்தில்
காவல்நிலையத்தில் குடியேறு

கார்ப்பரேட் கட்டிடங்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்க நாம் கார்ப்பரேசன் பள்ளிகளில் மட்டும் தங்குவதா?

விளிம்புநிலை மனிதர்கள் நிற்க இப்போது,விளிம்புகூட இல்லை.

மூத்திரம் பெய்ய முட்டுச்சந்தாவது கிடைக்கும்
நகர்மயம் உருவாக்கிய நவீன சூத்திரர்கள் தங்க மூத்திரச் சந்துகூட கிடைக்கவில்லை.

வாழ்வாதாரத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மிச்சம்மீதி வைத்ததை வெள்ளம் அடித்துச் சென்றது.

வெள்ளம் வடிந்தாலும் கோபத்தை வடியவிடாதே.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதிலும்,
மீட்புப் பணியிலும்
தோல்வியடைந்துள்ளது அரசு.
இதல்ல நமது குற்றச்சாட்டு
அதிமுக சாராய மாபியா அரசு முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுக்கவில்லை.

எடுத்ததாதச்
சொல்லி600கோடி ஆட்டையப் போட்டதும்தான்
மிகப்பெரியக்குற்றம்.
அடுத்ததாக மீட்பு நடவடிக்கை படுமோசமாக கடனுக்கு
செயல்படுகிறார்கள் அதிகாரிகள்.
இவர்கள் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டார்கள்.
அடுத்துதான் திருத்த வேண்டும்.

எந்த அதிகாரி MLA,MP வீடாவது வெள்ளத்தில்மூழ்கியுள்ளதா?
எந்த கலெக்டர் தாசில்தார் வீடோ,அலுவலகமோ
பாதிப்புக்குள்ளாகியுள்ளதா?

15லட்சம் வீடுகள் சென்னையில் மழைநீரால்மூழ்கிக்கொண்டிருக்கும் போதுபோயஸ்தோட்டமோ,
கோபாலபுரமோ அதன் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறதா?

எந்த அபார்ட் மெண்டாவது எந்த அக்ரகாரமாவது எந்த
தொழிலதிபர் வீடாவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா?

அப்படியானால் அந்த இடத்தை நோக்கிமக்கள் இடம்பெயர்வது தான் சரியானது

MLA,MPக்களின் வீடுகள்,பினாமி காம்ளக்ஸ்கள், தனியார்
பள்ளிகளில் குடியேறுங்கள்.
கலெக்டர் வீடு , அலுவலகத்தில் போய் மக்கள்தங்கவேண்டும்

தாசில்தார் ஆபிசை கக்கூசாகப் பயன்படுத்த வேண்டும்

கொடநாடு, போயஸ்தோட்டத்தை முற்றுகையிட வேண்டும்.
அப்போதுதான் மீட்புப்பணியைத் தீவிரப்படுத்துவார்கள்
அடுத்தமுறை மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுப்பார்கள்.
மீட்புப்பணிக்கு வராத அரசியல் தலைவர்கள்அதிகாரிகளை அடுத்து இந்தப்பகுதிக்குள்வரவிடக்கூடாது.

மீட்புப்பணி தாமதமாக நடக்கிறதே
என்று கேட்டபோது
“எங்களுக்கென்ன நாலுகையும் காலுமா இருக்கு”
முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை
என்று கேட்டால்
மழை இவ்வளவு பெய்யுமென வருணபகவான்போன்போட்டா சொல்றார். இவ்வளவு பெய்யுமென
யாருக்குத் தெரியும்”? என்கிறாள்
திமிர்பிடிச்ச சிறுக்கி சி,ஆர் சரஸ்வதி.

இது இவளுடைய கருத்துமட்டுமல்ல
கொழுப்பெடுத்த அதிகாரிகள்
ஆட்சியாளர்களின் பொதுவான கருத்தும் இதுதான்.
வெள்ளம்,நிவாரணம்,மீட்புப்பணிகளை,தொல்லையாகத்தான் கருதுகிறார்கள்.

மழைவிட்டால் வெள்ளம் வடிந்தால்
மக்கள் எல்லாம் மறந்து விடுவார்கள் நிவாரணமாக நாலு காசை வீட்டெறிந்தால் எல்லாம் மறந்து விடுவாக்களென ஏகத்தாளமாக இருக்கிறார்கள்

பள்ளத்தை நோக்கிப்போவது வெள்ளத்தின் இயல்பு
இருக்குமிடத்திலிருப்பதை எடுப்பது
தொழிலாளிவர்க்கத்தின் இயல்பு.
தவிர்க்கமுடியாத நிகழ்வு.

வெள்ளம் வடிந்தாலும்
கோபத்தை வடியவிடாதே

8 comments:

  1. நல்ல கருத்து இதுக்கு ஒரே தண்டனை ஆட்சி மாற்றம் மட்டுமே Nwes 7 channel தடுப்பு நடவடிக்கை பற்றி பயந்து ஓடினாளே அவளைப் பார்த்து சொல்லுங்க

    ReplyDelete
  2. Sir makkalluku ippavathu arivu varatum

    ReplyDelete
  3. Sir makkalluku ippavathu arivu varatum

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சார் எதையும் யோசித்து பதிவிடுங்கள்.உண்மையை சொன்னா யாருக்கும் பிடிக்காது. பிறகு நமக்கு குடைச்சல் கொடுப்பாங்க

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.