Saturday, 12 December 2015

பாஸிட்டிவ் செய்திகள்

இந்த வெள்ளக் காலத்தில் கண்ணில் கிடைத்த பாஸிட்டிவ் மனிதர்களைச் சொல்ல இந்த ஒரு பதிவு போதாது.  தங்களுக்கு படுக்க வீடு கூட இல்லாத நிலையில் 100 பாய்கள் அளித்த நரிக்குறவர் சமுதாய மக்கள் முதல் தனது உண்டியல் சேமிப்பைக் கொடுத்த சிறுவர் சிறுமியர் வரை.

இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எழுச்சி மிக மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.  பால் போடும் ராதாம்மா செய்த சேவை பார்க்கும்போது அவரவர்கள் அவரவர்கள் கடமையை அந்த நாளில் கஷ்டம் பார்க்காமல் தொய்வின்றிச் செய்தலே பெரிய சேவையாக இருந்த காட்சியையும் கண்டோம்.  எங்கள் ஏரியாவிலேயே எல்லாக் கடைக்காரர்களும் பால் அரைலிட்டர் கவர் 35 ரூபாய் என்று விற்றபோது ஒரு கடைக்காரர் மட்டும் 20 ரூபாய்க்கே விற்றார்.  தண்ணீர் ஒரு கேன் 30 ரூபாய் என்று கையிலிருந்த வரை கொடுத்தார்.
 
 
வாழ்க அவர்கள் அனைவரும்.. இன்றைய பாஸிட்டிவ் செய்திகள் பகுதியில் நிறையச் செய்திகள் இந்தவகைச் செய்திகளே இடம் பெற்றிருப்பதைத் தவிர்க்க முடியாது! 


1) "...எனது தாய் பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார். அவர் படும் கஷ்டத்தை மனத்தில் வைத்து இந்த வடிவமைப்பை உருவாக்கினேன்” என்னும் ஜெயக்குமார் ஜமீன் சல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவன்.


2) அவசரத் தேவைக்கு உதவுவது மட்டுமில்லை, உடற்பயிற்சிக்கும்நல்லதாச்சே..  சமீபத்தில் மழை, வெள்ளம் காரணமாக இரண்டு, மூன்று நாட்கள் மின்சாரம் தடைப் பட்டபோது இதைப் போன்றதொரு மாற்று ஏற்பாட்டுக்கு மனம் ஏங்கியது என்னவோ உண்மை.  ஏனெனில் இன்வெர்ட்டர் கூட குறைந்த காலமே பயனளிக்கும்!3)  இப்படி உடனடியாகச் செயல் பட்டால் சந்தோஷம்தான்!


4)  வேலைக்கு வெளியிலும் யோசித்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த். 

5)  தற்கொலைக்கு முயன்ற வரை தன் உயிரையும் துச்சமாக மதித்து துணிச்சலுடன் நீரில் குதித்து காப்பாற்றிய சிறப்பு எஸ்ஐ கோதண்டம்.7)  இன்றைய நிலையில் மிக மிகஅத்யாவசியத் தேவை. 


8) 55 வயது ராதா.


9) ஆருப் முகர்ஜி என்னும் மாமனிதர். 

10) தக்க சமயத்தில் காப்பாற்றிய,யூனுாஸ்‬ பெயரையே தங்கள் குழந்தைக்கு வைத்திருக்கின்றனர் மோகன் - சித்ரா தம்பதி.இதைவிட மிக சிறந்த தருணம் வேறேதும் இல்லை, என முகமது யூனுாஸ்‬ தெரிவித்து உள்ளார்.


11)  அடடே என்று சொல்ல வைக்கும்புதிய ஐடியாக்கள்!12)  அடையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் தூள் ...தூள்:மாநகராட்சிக்கு வழிகாட்டுகிறார் காஞ்சிபுரம் கலெக்டர்.                                                  

13)  அவிந்திர பிரதாப் பாண்டே.  இவர் யார் என்று தெரிகிறதா?


  


14)  குப்பைகளை சுத்தம் செய்த போது டிஎன்டிஜேவினர் கண்டெடுத்த 1லட்சம் ரூபாய்; 10 பவுன் நகை:   பூரணி என்ற உரிமையாளரிடம் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்தினர்!  மெய்சிலிர்க்க வைத்த மனிதநேயப்பணி!!  15)  மகாராஷ்டிரா பெண்கள்சென்னைக்குக் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் நிதி.No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.