Friday, 11 December 2015

குமாரசாமி நீ பரவாயில்லையடா.எதோ கணக்குதான் சரியாப் போடத் தெரியல.

சல்மான் கான் விடுதலை.இவரது காரில் அடிபட்டு நூருல்லா என்பவர் நடைபாதையிலேயே மரணம்
.மேலும் ஐந்து பேர் படுகாயம்.இடித்த காரை சல்மான்கான்தான் ஓட்டியதற்கு போதிய சாட்சியில்லையாம்.ஐகோர்ட் தீர்ப்பு. சரி.
அப்படியானால் காரை ஓட்டி வந்தது யார்?கூட இருந்த body guard சிறிதுகாலம் முன்பு இறந்து விட்டார்.இவர் கார் ஓட்டவில்லை என்பது தெளிவு.  Body guard தான் முக்கிய சாட்சி.கமால்கான் எனப்படும் பாடகரும் காரில் இருந்துள்ளார்.இவரிடம் சாட்சியே கேட்கப்படவில்லை.என்னடா போலீசு நீங்கள்? சரி.மீதம் உள்ளவர் சாட்சாத் சல்மான்கான் மட்டுமே.ஆனால் சல்மான்தான் காரோட்டினான் என்பதற்கு சாட்சியே இல்லையாம்.
அப்படியானால் இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.
விபத்தில் இறந்ததாக சொல்லப்படும் நூருல்லா எறும்பு கடித்து இரண்டு நாட்கள் முன்பாகவே இறந்திருக்க வேண்டும்.எறும்பு கடித்த வலி தாங்காமல் இறந்தபின் தானாகவே வந்து சல்மான்கான் காரின் அடியில் படுத்துக்கொண்டிருக்க வேண்டும்.அடிபட்ட மேலும் ஐந்து பேர் சாலையில் யோகா செய்யும் பொழுது வழுக்கி அடிபட்டிருக்கலாம்.
நல்லா சொல்றாங்கடா ஹைகோர்டல தீர்ப்பு.
குமாரசாமி நீ பரவாயில்லையடா.எதோ கணக்குதான் சரியாப் போடத் தெரியல. பாம்பேக்காரன எப்படி பார்த்தாயா? பிணமே வந்து கார்ல உழுந்திருச்சுன்னு ஒரே போடு போட்டுட்டான்.
வாழ்க நீதி.வாழ்க பணநாயகம்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.