Monday, 30 November 2015

ஆனந்தவிகடனும்--”அம்மா--அய்யா”--”விகடமும்”

ஆனந்த விகடன் பத்திரிக்கையின் “ஜாதகத்தில்”
ஆளும் கட்சியால் குறிப்பாக அ.தி.மு.க வால்..அடிக்கடி “அல்லலுறவேண்டும்” என்று இருக்கிறது போலும்..

அன்று எம்ஜியார் அவர்கள் ஒரு “கார்ட்டூனுக்காக” உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்து ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களை உள்ளே தள்ளீனார்..உய்ர்நீதி மன்றம் அதை தள்ளுபடி செய்து வெளியே கோண்டுவந்தது வேறு கதை..

இன்று அம்மாவின் விசுவாசிகள்..அம்மா பாசத்தால் மறுபடியும் ஆனந்த விகடனின் “ஆனந்தத்தை அவதிக்கு உள்ளாக்கியுள்ளனர்..

சிறைச்சாலை..கோர்ட்டு..வழக்கு

கள்...இவைகள் அரசியல் வாதிகளின் பொதுச்சொத்து என்பது போய்..இன்று பத்திரிக்கைகளும் அதை பங்குபோடும் நிலை வந்துள்ளது..
இன்று அதிகமாக் பேசப்படும் “சகிப்பின்மை” “இண்ட்டாலரன்ஸ்”..அம்மாவுக்குத்
தான் அதிகமாக உள்ளது என்பது இப்போது புரிகிறது..
அரசை விமர்சிக்கும் உரிமை ஊடகங்களுக்கு உள்ளது என்பது உலகறிந்த உண்மை..அதை ஏற்பதும் மறுப்பதும் அரசின் உரிமை--அல்லது ஆட்சியாளரின் உரிமை..

”நாங்கள் விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர்கள்”--இந்திரலோ

கத்தின் “இம்யூனிடி” முத்திரை பத்திரம்  வைத்துள்ளோம் “-என்று எவரும் சொல்லமுடியாது அதிமுக உட்பட..
தனது அரசியல் எதிரிகளை “கோர்ட்--கோர்ட்டாக” ஏறி இறங்க வைப்பது அம்மாவிற்கு கைவந்தகலை..தன்னை ஊழல் குற்றச்சாட்டில் கோர்ட் தண்டித்தாலும் நீதிபதியை விமர்சித்து தீர்மானம் போடுவது அதிமுகவின் நிலை..
இந்தியாவில் “ஊடகச் சுதந்திரத்தை” ஊற்றி மூடி--”கல்லரையில் “ போட்டு கட்டடம் கட்டிய பெருமை காங்கிரசுக்கே சேரும்..1975 அவசரநிலை காலத்தில் அத்தனை ஊடகங்களையும் சிறச்சலைக்குள் பூட்ட்டிய “கொடுங்கோன்மையை” காங்கிரசே செய்தது..
சமீபத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பேரன்..மதிப்பிற்குறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், ஒரு தொலைகாட்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே அதன் கேள்விகளை பொறுக்க முடியாமல் வெளிநடப்பு செய்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததோடு அதை ”இன்கம் டாக்ஸ்”துறை மூலம் “ரெய்ட்” விட்டு செய்தும் காட்டினார்..

இடையே இடையே புகுந்து “எரிந்த வீட்டில் பிடுங்குவது “ என்பதே கலைஞருக்கு கைவந்த கலை..பல நேரங்களில் அதுவே அவருக்கு எதிராக திரும்புவதும் அவரின் துர்பாகிய நிலை..

இப்போதும் அப்படி ஒரு நிலையில்---வலையில் கலைஞர் வீழ்ந்துகிடக்கிறார்..ஆனந்த விகடனுக்கு ஆதரவாக “முரசொலி” கச்சை கட்டிக்கொண்டு முதல் பக்கத்தில் எழுதுகிறது..அம்மாவை திட்ட தீர்க்கிறது..பத்திரிக்கை சுதந்திரத்திற்காக வரிந்துகட்டி எழுந்து நிற்கிறது..

ஆனால் அடுத்த பக்கத்தில் “தந்தி டி.வி.யின் “ “ அராஜகபோக்கை “கண்டித்து கழகத்தின் “பேனலிஸ்ட்” “போராளிகள்” இனி தந்தி டி.வி.யில் பங்குபெற மாட்டார்கள்..என “பாக்ஸ் நியூஸ்” போட்டிருப்பதுதான் விந்தையிலும் விந்தை..

முதல் பக்கத்தில் ஊடகச்சுதந்திரத்தை காப்பதில், தன்னை முதன்நிலை போராளியாக பிரகடன படுத்திக்கொள்கிறார்..மூன்றாவது பக்கத்தில் தன் உண்மை நிலையை காட்டுகிறார்..

இந்த “ஊடக போராளியின்” உண்மை முகம் என்ன?

தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பத்திர்க்கைகள் கலைஞருக்கு “கப்பம் கட்டும் சிற்றரசர்கள்” போல் தான் நடத்தபட்டு வர்கிறார்கள்..அவ்ருக்கு எதிராக எழுதிய தலையங்கங்களுக்கும், செய்திகளுக்கும் “கோபால புரத்திலிருந்து எத்தனை முறை “--எததனை சுந்தரத்தமிழால் --அர்ச்சனைகளை-- ஊடகங்கள் வாங்கியிருக்கும்..

அவரது குடும்ப உடன் பிறப்புக்கள் எத்தனைமுறை ‘செல்லகுட்டு “ கொட்டியிருப்பார்கள்..ஏன் தன் சொந்த பேரன் கலாநிதியின் “தினகரன்” தாக்குதலில் இரண்டு அப்பாவிகள் கொல்லப்பட்டதும் இவரது சுதந்திர வேட்கையின் சாட்சிகள்தானே..

பத்திரிக்கை சுதந்திரத்து கல்லறை எழுப்பிய காங்கிரசோடு இவர் 20 ஆண்டுகளுக்குமேல் கூட்டணியில் இருந்தாரே..

இப்படி எண்ணற்ற ஊடக சுதந்திர எதிர்ப்பு--கொலை--மிரட்டல் “சர்ட்டிபிகேட்” வாங்கியுள்ள இவருக்கு ஆனந்த விகடன் மேல் பாசம்  வந்துள்ளது பயமாக இருகிறது என்று நினைத்த மாத்திரத்திலேயே” அது சரிதான்”-- என சொல்லும் வகையில் “தினத்தந்தி” புறக்கணிப்பை--முரசொலி வெளியிட்டு பயத்தை உறுதி செய்துள்ளது..

அம்மாவும் அய்யாவும் தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதுதான் மற்றவரை “நல்லவர் “ ஆக்கிவிடுகிறார்கள்..ஆனால் தினத்தந்தி புறக்கணிப்பு மூலம், தனது உண்மை முகத்தைக்காட்டி “அய்யா” அந்த தற்காலிக நல்லபேரையும் இழந்துவிட்டார்..

ஆனந்த விகடன் மீது தொடுத்த அவதூறு வழக்கு ”இருவரின்”--”விகடத்தையும்”--
வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது..


No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.