Thursday, 5 November 2015

அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்

கோவை மாவட்டம் காரமடை ஒன்றிய அளவிலான கலை இலக்கிய  போட்டிகளில்
மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்

       அனைவருக்கும் கல்வி இயக்கமானது  பெண்கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான கலை இலக்கிய போட்டிகளை நேற்று (04-10-2015-இல்) மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. காரமடை ஒன்றியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் 6,7 & 8 வகுப்புகளுக்கான பிரிவில்சிறுமுகை அருகேயுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ர.நவீன்  (8ஆம் வகுப்பு ) பேச்சுப்போட்டியில் முதலிடத்தையும், கு.லாவண்யா (7ஆம் வகுப்பு)கட்டுரை போட்டியில் முதலிடத்தையும், ரா.பத்ரிபிரசாத்(7ஆம் வகுப்புஓவிய போட்டியில் போட்டியில் இரண்டாமிடத்தையும்பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.500உம், இரண்டாமிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.400உம் பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்படுகிறது. இம்மாணவர்கள் அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்கள்.      முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.