Thursday, 26 November 2015

மனசாட்சிப்படி சரியென்பதை மட்டும் செய்யுங்கள்.

ஒருவன் ஒரு மகானிடம் சென்று,
"ஐயா, நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?"
என்று
கேட்டான்.
"தாராளாமாக சாப்பிடலாம்" என்றார் மகான்.
"தண்ணீர் குடிக்கலாமா?" என்று கேட்டான் அவன்.
"குடிக்கலாம்" என்றார் மகான்.
"சிறிது புளிப்புப்பொருள்..." என்று இழுத்தான்
அவன்.
"தவறேதும் இல்லை...சாப்பிடலாம்" என்றார் மகான்.
"இவை மூன்றையும் சாப்பிடலாம் என்கிறீர்கள்... இவை
மூன்றையும் சேர்த்து தானே மது தயாரிக்கப்படுகி
றது... அதை ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?"
என்றான் அவன்.
உடனே மகான் அவனைப் பார்த்து கேட்டார்,
"நான் உன் தலையில் சிறிது மண்ணைப் போட்டால்...."
"சிறிதும் கவலைப்பட மாட்டேன்?" என்றான் அவன்.
"சிறிது நீரைத் தெளித்தால்.....?" என்று மீண்டும்
கேட்டார் அவர்.
"அப்பொழுதும் கவலைப்பட மாட்டேன்" என்றான் அவன்.
"அப்படியானால், நான் அந்த மண்ணையும் நீரையும்
ஒன்றாகச் சேர்த்து, இரண்டையும் தீயில் சுட்டு
உருவாக்கப்பட்ட செங்கல்லினால் உன் தலையில்
அடித்தால்...??
இங்க பல பேரு இப்படித்தான் இருக்காங்க... தாம்
செய்வது தவறென்று தெரிந்தும் சரியென
வாதாடுகிறார்கள்.
நீங்களும் அவ்வாறில்லாமல் மனசாட்சிப்படி
சரியென்பதை மட்டும் செய்யுங்கள். கூடவே
குடிப்பழக்கம் இருந்தால் கைவிடுங்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.