Wednesday, 18 November 2015

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா🚶🚶

பள்ளியில் பாடத்தில் ஏமாற்றலாம் கடைசி பக்கம் விடையை பார்த்து.... ஆனால்.,

வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. இறுதி பக்கமே தெரியாது. !

கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !


அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!

பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை!

படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க
பசங்கதான் வேலைதேடி தெருத்தெருவா சுத்துறாங்க
என்னடா டிசைன்!!

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

விவசாய நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு வித்து காசு பாத்தோம்.
இப்போ விலைவாசி ஏறிப்போச்சு.
இனி பிளாட்டை விற்று பருப்பு வாங்கும் நிலைகூட வரும்.!


பென்சில் ஷார்ப்பனரை எல்லாம் ஆயுதமாக்கிய பெருமை இந்த சரஸ்வதி பூஜையைத்தான் சேரும் !!


எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.


ஜெயிக்கிறதுங்கிறது
வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி
சொத்தாகவும் உள்ளது.


பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-))


தெருவை கடந்தேன்
ஜாதியைகேட்டான்
மாவட்டத்தை
கடந்தேன்
ஊரை கேட்டான்
மாநிலம்கடந்தேன்
இனமொழியை கேட்டான்
நாட்டை கடந்தபிறகே
இந்தியன் ஆனேன்!


குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது


காலையில வாக்கிங் போரதல கெடச்ச ஒரே நன்மை தெருநாய் எல்லாம் தோஸ்த்ஆனது தான்.. இப்பெல்லாம் நைட் லேட்டா வந்தாலும் நம்மள பாத்து குலைக்கிறதில்ல


கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...!
உண்மைதான்...!
ஆனால் 2G யில் தேடாதீர்கள்...!
கூகுளே கிடைக்காது.!


உலகினில் எவருமில்லை-சைவமென!
தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது ?


தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!

சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு!


விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும். !


'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!


விமரசனத்துக்கு பயந்தவன் வாழத்தகுதியற்றவன்.!


உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலைகொள்ளாதே!!


இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து...
"இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. !


வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !


என் தந்தையை யாரோ நாலு பேர் ஏளனம் செய்யகூடாது என்ற பயத்தில் படித்து முடித்ததும் கிடைத்த வேலையை செய்ய தொடங்கினேன். ..! (ஆணின் முதல் தியாகம்)


ஒரு முதலாளியை ''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு மிரட்ரளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை! !

தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை !!


அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் உண்மை.
இதுல எது உண்மை?எது பொய்?...அதுதான் கடவுள்.


இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.!

500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின் .,..ஏன்னா அது மெசின்,மனிதமனமில்லை

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

சொகுசு பேருந்து என்பது பெரிய சைஸ்
"ஷேர் ஆட்டோ"!

என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க!

இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்

சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் வாய்ப்பு நிச்சயம் இருக்காது !

இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!😐

வாட்ஸாப்ல "Hey there iam using watsapp"ன்னு ஸ்டேட்டஸ் வச்சிருக்குறவன் தான் உண்மையில யூஸ் பண்ணாதவன்.

சிலர் நம் பெயரை அழகா வித்தியாசமா கூப்பிடுவதால் அவர்களை அதிகம் பிடிக்கிறது.

வெளிநாட்டில் வேலையில் இருக்கும் மகனுக்கு தன் பெற்றோர் கூட தூரத்து சொந்தம் தான் 😐

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.

கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள்,டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான்.!

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

ஒரு ஆண் 25 வயதுக்கு மேல் எடுக்க போற ஒவ்வொரு முடிவும் தீப்பெட்டியில் உரசும் கடைசி தீக்குச்சியை போல அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது.!!

கிலோ கணக்குல புத்தகம் தூக்கிட்டு குழந்தைங்க போறதாலதான் அதுக்கு L"KG".... U"KG"...னு பேருபோல...😐

நீண்ட நேர தேடுதலுக்கு பின் கிடைக்கும் ஒவ்வொன்றுமே, என் முந்தைய தேடுதலில் கிடைத்திருக்க வேண்டியவைகளாகவே இருக்கின்றன!

கொட்டும் "மழையில்" இரண்டு விதமான பிள்ளைகள்
மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க😅
அம்மா.!
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா🚶🚶

3 comments:

 1. TNTET -2013 :தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...
  நமது மாபெரும் கவன உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் ( 01.12.2015) அன்று அனுமதி கிடைத்துள்ளது.

  நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,
  இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITYபின்புறம் )

  நம்முடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்ல அனைவரும் முடிந்தவரை நேரில் வந்து தங்கள் பங்களிப்பினை தவறாது வழங்குமாறுஅழைக்கிறோம் .அங்கு வந்து தங்கள் பெயர் ,ஊர் ,பாடம் மற்றும் மதிப்பெண்களை தவறாது பதிவுசெய்ய வேண்டுகிறோம்.

  இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

  தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
  திருமதி பாரதி : 94426 91704
  திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
  திரு.பரந்தாமன் : 94432 64239
  திரு.சக்தி : 97512 68580
  திரு.லெனின் ராஜ் : 80125 32233

  இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

  ReplyDelete
 2. TNTET -2013 :தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...
  நமது மாபெரும் கவன உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் ( 01.12.2015) அன்று அனுமதி கிடைத்துள்ளது.

  நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,
  இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITYபின்புறம் )

  நம்முடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்ல அனைவரும் முடிந்தவரை நேரில் வந்து தங்கள் பங்களிப்பினை தவறாது வழங்குமாறுஅழைக்கிறோம் .அங்கு வந்து தங்கள் பெயர் ,ஊர் ,பாடம் மற்றும் மதிப்பெண்களை தவறாது பதிவுசெய்ய வேண்டுகிறோம்.

  இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

  தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
  திருமதி பாரதி : 94426 91704
  திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
  திரு.பரந்தாமன் : 94432 64239
  திரு.சக்தி : 97512 68580
  திரு.லெனின் ராஜ் : 80125 32233

  இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

  ReplyDelete
 3. ALL study materials in one blog visit www.tnpscsaiohealth.blogspot.com

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.