Wednesday, 28 October 2015

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி..!!!!!?

பதிவு செய்த நாள்

27அக்
2015 
22:27

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வில், 'பிளாஸ்டிக் அரிசி' விற்பனை கண்டறியப்பட்டது.
அதன் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துள்ளனர்.தீபாவளி பண்டிகை ெருங்குவதையொட்டி தமிழகத்தில் உணவு பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாநில உணவு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், அனைத்து 
மாவட்டங்களிலும் கண்காணிப்பில் ஈடுபடவும், போலி உணவை கண்டறியவும் அரசு உத்தரவிட்டது.எனவே திண்டுக்கல்லில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சாம் இளங்கோ, அலுவலர்கள் லாரன்ஸ், செல்வம் ஆய்வில் ஈடுபட்டனர். கச்சேரி தெருவில் முறையின்றி விற்பனைக்கு வைத்திருந்த எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மார்க்கெட்டில் அழுகியதாக கண்டறியப்பட்ட 15 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாம் இளங்கோ கூறியதாவது: திண்டுக்கல்லில் இன்று நடந்த ஆய்வில், பிளாஸ்டிக் அரிசி கலப்படமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது அதை ஆய்வுக்கு எடுத்துள்ளோம். ஆய்வில் பிளாஸ்டிக் அரிசி தான் என தெரியவந்தால், உணவு பாதுகாப்பு சட்டத்தில் விற்பனையாளர் கைது செய்யப்படுவார், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.