Saturday, 31 October 2015

வென்றெடுப்பதற்கான வியூகமாய் தெரியவில்லை

ஜாக்டோவின் முடிவு கோரிக்கையை வென்றெடுப்பதற்கான வியூகமாய் தெரியவில்லை.
அடையாள வேலைநிறுத்தம் செய்த பிறகு தொடர்மறியல் போராட்டம் ????? அதுவும் மாவட்ட தலைநகரில்.....
ஜாக்டோ உயர்மட்டப் பொறுப்பாளர்களே,
நாம் உண்மையில் போராடப் போகிறோமா போராடுவது போல் பாவனை செயயப் போகிறோமா?
இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக விரைவில் தொடர் வேலைநிறுத்தம் என அமைதியாக மிரட்டிக் கொண்டு (மட்டும்) இருக்கலாம்.
தேர்தல் புறக்கணிப்பு என அச்சுறுத்திக் கொண்டாவது இருக்கலாம்.
போராட்டங்கள் அரசுக்கு நெருக்கடியூட்டுவதாய் அமைய வேண்டுமே தவிர ஆசுவாசப் படுத்துவதாய் அமைக்கக் கூடாது.
போராட்டங்களின் தொடர்ச்சி ஆசிரியர்களை உணர்வூட்டி உத்வேகப்படுத்த வேண்டுமே தவிர உணர்வுகளை தொய்வடையச் செய்து உளைச்சல் ஏற்படுத்தக் கூடாது.
குறைந்தபட்சம் மாநிலத் தலைநகரில் தொடர் மறியல் என்றால் கூட ஊடக கவனத்தையும் பொதுஜன விவாதங்களையும் ஈர்க்க முடியும். மாநில உண்ணாவிரதம், அடையாள வேலைநிறுத்தம் என மாநில அளவிற்கு உருமாற்றப்பபட்ட போராட்ட வீச்சை மாவட்டத்திற்கு மடைமாற்றுவதேனோ?
பத்து பேர் நிற்கையில் கோரிக்கை வைப்பதும் நூறு பேர் நிற்கையில் குரல் எழுப்புவதும் ஆயிரம் பேர் நிற்கையில் ஆர்ப்பரித்து எழுவதும் பத்தாயிரம் பேர் நிற்கையில் முன்னகர்ந்து முண்டா தட்டுவதும்
லட்சம் பேர் பின்நிற்கையில் லட்சியத்தை அடையும்வரை அனைத்தையும் ஸ்தம்பிக்கச் செய்வதுமே
போராட்ட குணாம்சம்.
(அளவு மாற குணமும் மாறும்)
தீப்பொறியை பெருந்தீயாய் மாற்றாமல் கனன்று நிற்கும் கனலை கரியாக்கிடாதீர்.
மீளமுடியாத போராட்ட பயணத்தில் ஒற்றுமையே ஆயுதமாய் நம்மோடு நிற்கும் ஆசிரிய சமூகத்தை கடைத்தேற்ற வேறு வழியறியா நிலையில் நம்மை நாமே கண்டித்து நமக்கு நாமே துணையாய் வினையாற்றுவோம் கனத்த இதயத்தோடும்... பனித்த விழிகளோடும்...
மாறாத தோழமையோடும்
மாற்றமில்லா வர்க்க உணர்வோடும்.ll

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.