Tuesday, 20 October 2015

இன்றைய அரசுப் பள்ளிகளில் - குறிப்பாக தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் என்னதான் நடக்கிறது?

ஓட்டுநர் என்றால் பேருந்தை ஓட்ட வேண்டும்;நடத்துனர் என்றால் பயணச்சீட்டு வழங்கவேண்டும். ஒரு வேளை பட்டதாரி ஆசிரியருக்கானதகுதி பெற்ற பலரும் அவ்வேளை கிடைக்காமல்ஓட்டுநர் பணிக்கு வந்துவிட்டனர் என்றுவைத்துக்கொள்வோம்
 
           அதற்காகபேருந்தைப் புளியமரம்புளியமரத்திற்கு நிறுத்தி முறைசாராக் கல்விஎன்னும் பேரில் பயணிகளுக்குப் பாடம் நடத்தச்சொல்லி அவர்களுக்கு அரசு உத்தரவிட்டால்(அப்படியும் நடக்கலாம்யார் கண்டது?) அதுஎவ்வளவு பெரிய கேலிக் கூத்துஅது மட்டுமல்ல,அப்பேருந்து ஊர்போய்ச் சேருவது எப்பொழுது?ஆசிரியர்கள்மீது திணிக்கப்படும்அவர்களுக்குத்தொடர்பே இல்லாத பிறபணிகள் இத்தகையனவே!கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள் கேட்கும்பள்ளி விவரங்கள் எழுதிக் கொடுத்தே பள்ளிப்பாடங்களை மறந்து போனார்கள் ஆசிரியர்கள்!
பொதுவாக அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கும்தரமின்மைக்கும் ஆசிரியர்களே முழுக்காரணம்என்பது போல மக்களிடம் பொதுப்புத்தியை அரசும்ஊடகங்களும் விதைத்திருக்கின்றன.உண்மையில் தவறுகள் யாவும் அதிகாரப்படிநிலையின் மேல்மட்டத்தில் கட்டியமைக்கப்பட்டு,அவை கீழ் நோக்கிக் கடத்தப்படுகின்றன.பலியாவதென்னவோ கீழ அலகுகளில்பணியாற்றும் ஊழியர்களேஇதைத் தெரிந்தும்,தெரியாததுபோல் முதலாளித்துவ ஊடகங்கள்தொழிலாளர்களையேகுற்றவாளிகளாக்குகின்றன.
நூறுநாள் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில்(?) வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள் ஆங்காங்கே மரநிழலில்படுத்துறங்கிவிட்டு ஊதியம் வாங்குவதாகப்பிரச்சாரம் செய்யும் மூளைகள்தாம் ஆசிரியர்கள்வகுப்பில் பாடமே நடத்தாமல் சம்பளம்வாங்குவதாகப் பரப்புகின்றனஇக்கூற்றில்ஓரளவு உண்மையிருக்கலாம்ஆனால்இந்த சமூகஅமைப்பு எத்தகையதுஇந்த அரசு யாருக்கானது?என்ற கேள்விகளோடு தொடர்புடையதுதொழிலாளர்கள் முதல் ஆசிரியர்கள் வரைபொறுப்புடன் பணியாற்றுவதும் பணியாற்றாமல்இருப்பதும்சமனற்ற திறந்தவெளிப் போட்டியில்வேலை கொடுப்பவர் - வேலை பெறுபவரிடையேநிகழும் மறைமுகப் போராட்டம் என்றும்இந்தச்சமூக அமைப்புச் சிதைவதன் அடையாளம் என்றும்இதனைக் கூறலாம்.
பற்றாக்குறையால் பொருள்தேடி ஓடுகின்றவனைஏன் இந்த நிலை எனக் கேட்கவும் ஆள் இல்லை!மிகை நுகர்வுக்காக ஓடுகின்றவனைத் தடுக்கவும்ஆள் இல்லைஇந்தச் சமனற்ற ஓட்டப்பந்தயமேஇச்சமூக அமைப்பின் யதார்த்தம்இந்தச்சூழ்நிலைகளிலும் மனசாட்சியுடனும்பொறுப்புடனும் பணியாற்றக் கருதும் ஆசிரியர்கள்சந்திக்கும் இன்னல்கள்கூடுதல் பணிகள்தாம்எத்தனைஎத்தனை!
•‘‘தேர்தல் பணி ஆசிரியர்களுக்குக் கட்டாயம் எனஅரசு ஆணை கூறுகிறதுதேர்தல் நேரத்தில்வாக்குப்பதிவுவாக்கு எண்ணிக்கை மற்றும்அவற்றுக்கான பயிற்சி என்பதோடு மட்டும்இப்பணி முடிவதில்லைஅவ்வப்போது வாக்காளர்பட்டியலில் பொதுமக்களின் பெயர் சேர்த்தல் -நீக்கல் பணியையும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.
• குடும்ப அட்டைகளைப் புதுப்பித்தலுக்கான பெயர்சேர்த்தல் - நீக்கல் பணிகளை ஆசிரியர்கள்தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியைச் சுற்றியுள்ளவசிப்பிடங்களில் (Habitations) செய்தல் வேண்டும்.
• ‘‘மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியைஆசிரியர்கள் செய்தாக வேண்டும் என அரசுஆணை கூறுகின்றதுபத்தாண்டுகளுக்குஒருமுறை நடத்தும் தேசிய அளவிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மட்டுமல்ல,ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில்தொடக்கநடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள்பள்ளி சார்ந்த வசிப்பிடங்களில் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பதோடு அவர்களின் கல்வி,வயதுசாதிமதம் உள்ளிட்ட பல்வேறுவிவரங்களைப் பதிவேடுகளில் பராமரித்தல்வேண்டும்அவை குறித்து அவ்வப்போதுஅனைவருக்கும் கல்வி இயக்கம்தொடக்கக் கல்விஇயக்கம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
• குழந்தைகளின் கல்விக்கு அனைத்தும்விலையில்லாமல் கொடுப்பதாக அரசு தம்பட்டம்அடிக்கிறதுஆனால்கல்வியின் பெயராலேயேகற்பிக்கும் நேரம் பறிக்கப்படுகிறது என்பதை அரசுஉணரவே இல்லைமிதிவண்டியும்மடிக்கணிணியும்தான் பள்ளிக்கு நேரில் வந்துஇறங்குகின்றனமற்றபடி சீருடைசெருப்பு,புத்தகங்கள்நோட்டுகள்புத்தகப்பைமுதலியனயாவும் ஓர் ஒன்றியத்திற்கு ஓர்அலுவலகமாக இருக்கின்ற உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கோமாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கோ வந்து இறங்குகின்றன.
ஐம்பதுஅறுபது கி.மீசுற்றளவில் உள்ளபள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் சென்றுவாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும்.அதுவும் ஒரே தவணையாக அனைத்தும் வந்துஇறங்குவதில்லைபுத்தகங்கள்நோட்டுக்கள் பாதிவந்து சேரும்அதை எடுத்துச் செல்ல ஒருமுறைசெல்லவேண்டும்மீதியை எடுத்துச் செல்லஅடுத்த முறை வரவேண்டும்சீருடைகள்,செருப்புகள் சரியான அளவில் இல்லையென்றால்அதை மாற்றிப்பெறுவதற்கு மீண்டும்வரவேண்டும்செருப்பிற்காக முன்னரேகுழந்தைகளின் கால் அளவு எடுத்துக்கொடுத்தவர்களும் ஆசிரியர்களே!
முன்பெல்லாம் ஒரே தவணையில் புத்தகம்நோட்டுகள் எல்லாம் பள்ளிக்கு எடுத்துச்சென்றுவிடலாம்முப்பருவக் கல்விமுறைஅறிமுகப்படுத்தப்பட்ட பிறகுகடந்த மூன்றுஆண்டுகளாக வருடத்திற்கு மூன்றுமுறைஇப்பொருட்களைத் தூக்கிச் செல்ல வேண்டும் ஒருபருவத்திற்கு 4 நாட்கள்வீதம் முப்பருவத்திற்கும். 12வேலை நாட்கள் இதில் கழிந்துவிடும். (வேலைநாட்களில் வேண்டாம்விடுமுறை நாட்களில்இவற்றை ஆசிரியர்கள் எடுத்துச் சென்று தங்கள்பாதுகாப்பில் வைத்துக்கொண்டு பள்ளியில்சேர்த்துவிடுங்கள்’ என அதிகாரிகள் கூறுவதுஆசிரியர்களின் விடுமுறையைக் காலி செய்யும்இன்னொரு விதி மீறலே!)
• ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 400 முதல் 600வரை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிஆசிரியர்கள் இருப்பர்அவர்களின் ஊதியப்பட்டியலை எழுதித் தொகுத்து கணிணியில் ஏற்றிக்கருவூலத்திற்கு அனுப்புகிற பணியை உதவித்தொடக்கக் கல்வி அலுவலகம் கவனிக்கவேண்டும்அங்குப் பணியில் போதுமானபணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
அங்குப் பணியாற்றும் ஓரிருவருக்கும்கணிணியைக் கையாளுதல் போன்றவற்றில்சிரமம் உள்ளதுஇம்மாதிரியான காரணங்களால்ஆசிரியர்களே ஐந்துமுதல் பதினைந்துபேர் வரைஊதியப்பட்டியல் தயாரித்தல்சரிபார்த்தல்பணிக்கு உதவித் தொடக்கக் கல்விஅலுவலர்(AEEO) ‘அறிவுரையின்பேரில்அவ்வலுவலகத்திற்கு வந்துவிடுவர்அப்பணிஒவ்வொரு மாதமும் குறைந்தது பத்து நாட்கள்வரை நீடிக்கும்இப்படி இவர்கள் செய்யவில்லைஎன்றால் ஆசிரியர் சமூகத்திற்கு அந்த மாதச்சம்பளம் வர அடுத்த மாதம் 20 ஆம் தேதி ஆகலாம்;அல்லது அதற்கடுத்த மாதத்திற்கும் தள்ளிப்போகலாம்தமிழகத்தின் அனைத்துஒன்றியங்களிலும் இதுதான் நிலைமை!
• 2000 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆசிரியர்கள்பொதுவைப்புநிதிபங்களிப்பு ஓய்வூதிய நிதி ((GPF, CPS)) முதலிய கணக்குகளைச் சரிபார்த்தல்,தணிக்கைக்கு உதவுதல் (Auditing)) முதலியபணிகளுக்காக கடந்த ஆண்டு இறுதியில்இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஒவ்வொருஒன்றியத்திலும் 15 ஆசிரியர்கள்வரை AEEOஅலுவலகத்திற்கு வேலை பார்த்தனர்இப்படியானசிறப்புப்பணி’ அவ்வப்போது வரும்இவையாவும்கிணிணிளி அலுவலகத்தின் வேலையே!
• பள்ளிகளைக் கண்காணிக்க அதிகாரிகளின்படிநிலைத் தவிரஒவ்வொரு அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில்பள்ளி மேலாண்மைக்குழுகிராமக் கல்விக் குழுஅன்னையர் குழு,பெற்றோர் ஆசிரியர் கழகம் எனப் பல ‘சனநாயகஅமைப்புகள்’ உள்ளனபள்ளி மேலாண்மைக் குழுஎன்பது பெற்றோர் ஆசிரியர் கழகப் பெண்உறுப்பினர் (தலைவர்), மாற்றுத் திறனாளிகளின்பெற்றோர் (துணைத் தலைவர்), தலைமைஆசிரியர் (செயலர்), உதவி ஆசிரியர்,பெற்றோர்கள் 75%, அதில் பெண்கள் 50% வார்டுஉறுப்பினர்தன்னார்வலர்கல்வியாளர்சுயஉதவிக்குழு உறுப்பினர் முதலிய 20உறுப்பினர்களைக் கொண்டது.
பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல்செயல்படுத்தவழிகாட்டல் முதலியன இக்குழுவின் முக்கியப்பணிகள்இக்குழு மாதம் ஒரு முறை கூட்டப்படவேண்டும்இக்கூட்டத்தை ஒவ்வொரு மாதமும்கூட்டுவதோடு கூட்ட நிகழ்வு மற்றும் கலந்துகொண்டோர் வருகை பதிவேடு முதலியவற்றைப்பராமரிப்பதும்அனைவருக்கும் கல்வி இயக்கவட்டார வளமையத்திற்கு இதன் நகலைஅனுப்பிவைப்பதும் தலைமை ஆசிரியர்கடமையாகும்.
கிராமக் கல்விக் குழு என்பது 20 பேர் கொண்டஇன்னொரு குழுவாகும்பள்ளி உள்ளடங்கியஊராட்சிஊராட்சி ஒன்றியநகராட்சி தலைவர்கள்,வார்டு உறுப்பினர் போன்றோருள் ஒருவர்தலைவராகவும்பள்ளித் தலைமை ஆசிரியர்செயலாளராகவும் பெற்றோர் ஆசிரியர் கழகஉறுப்பினர்சுய உதவிக்குழு உறுப்பினர்(பெண்),பெற்றோர்கள்அங்கன்வாடிப் பணியாளர்,அரசுசாரா தொண்டு நிறுவன உறுப்பினர்,கல்வியாளர்ஆசிரியர் பிரதிநிதிகிராம நிர்வாகஅலுவலர்வார்டு உறுப்பினர் (தாழ்த்தப்பட்டோர்),மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனபொறுப்பாளர்இளைஞர் மன்ற நிர்வாகிகள்முதலியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.
இக்குழுவின் முக்கியப் பணிஅனைவருக்கும்கல்வி இயக்கம் வழங்குகிற பள்ளி மானியம்பராமரிப்பு மானியம்புதிய வகுப்பறைகழிப்பறை,சுற்றுச்சுவர்சாய்தளம் முதலியன கட்டுவதற்கானநிதி ஆகியன சரியாகச் செலவழிக்கப்படுகிறதா?எனக் கண்காணிப்பதாகும்பள்ளிக்குவழங்கப்படும் நிதியை இக்குழுவின் தலைவர்மற்றும் செயலராகிய தலைமை ஆசிரியர் ஆகியஇருவர் கூட்டாகத் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்பள்ளிக்குத்தேவையான செலவுகளைச் செய்ய தீர்மானம்நிறைவேற்றி காசோலையில் தலைவர்செயலர்கையெழுத்திட்டுப் பணத்தை எடுத்துச்செலவழிக்க வேண்டும்கிராமக் கல்விக்குழுவையும் மாதம் ஒருமுறை கட்டாயம் கூட்டவேண்டும்இக்குழுவும் பள்ளி மேலாண்மைக்குழுவும் ஒரே நாளில் கூட்டப்படக் கூடாது.இக்கூட்டத்தைக் கூட்டுவதும் கூட்டப் பதிவேட்டைப்பராமரிப்பதும் பள்ளித் தலைமை ஆசிரியரின்பொறுப்பு.
இம்மாதிரியான சனநாயகத் தன்மை வாய்ந்தகுழுக்கள் வரவேற்கத்தக்கவைதானேஎன்று சிலர்கேட்கலாம்உண்மையில் நிலப்பிரபுத்துவக்கூறுகளை ஆழமாகக் கொண்ட முதலாளித்துவசமுதாயத்தில் வடிவ அளவில் இத்தகையகுழுக்களை அறிமுகப்படுத்துவது வெறும் சடங்குத்தனமானதுஅதிகார வர்க்கத்திற்கு இது ஒருசனநாயக முகமூடியாகப் பயன்படும்,அவ்வளவுதான்நடைமுறையில் எந்த நல்லவிளைவுகளையும் ஏற்படுத்தாது.தலைமையாசிரியருக்கும் இதுவும் ஒரு கூடுதல்சுமையே.
இது கூட்டப்படவில்லையென்றால்உயரதிகாரிகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்என்பதற்காகவே அனைவருக்கும் செய்திசொல்லிவிட்டு பள்ளியில் காத்திருப்பார்.பெரும்பாலான கூட்டங்களுக்கு யாரும்வருவதில்லைவரவேண்டிய தார்மீகக்கடமையுள்ள அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள்இக்கூட்டத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவேமதிப்பதில்லை. (விதிவிலக்குகள் உண்டு.)அவரவர் சார்ந்த கட்சிப்பணி அல்லது காண்ட்ராக்ட்பணியில் தொடங்கி அவரவர் சொந்தத்தொழிலைப் பார்க்கச் சென்றுவிடுவர்மேலும்,தாழ்த்தப்பட்டோர் அதிக எண்ணிக்கையில்பள்ளிகளில் படிப்பார்களேயானால்தலைவர்பிற்படுத்தப்பட்டோராக இருப்பின்அப்பள்ளிகளைக் கண்டுகொள்ளவே மாட்டார்.அப்பள்ளி இருப்பதையே அவர்கள் தொந்தரவாகக்கருதுவர்.
பொதுமக்களாகிய குழந்தைகளின் பெற்றோர்மிகவும் பின்தங்கிய பொருளியல் சூழலில்அன்றைக்குக் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டுபள்ளியின் கூட்டங்களுக்கு வர நேரம் ஒதுக்கமுடியாமல் இருப்பர்.
வேலையில்லாக் காலங்களில் நேரங் கிடைத்தபோதும் பள்ளிகளில் சென்று எதைச் சொல்வதுஎன்று தயங்குகிற பெற்றோர்களே அதிகம்.இவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள்முதல்தலைமுறையாகப் பிள்ளைகளைப் பள்ளிக்குஅனுப்பியவர்கள்தலைமை ஆசிரியரோ கூட்டம்நடந்ததாகக் காட்டதானே வீடுவீடாகச் சென்றுதலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கையெழுத்துவாங்கி வருவார். (12 பேர் கையெழுத்துகுறைந்தபட்சம் வேண்டுமே!). சிலர் அலட்டிகாமல்தாமே வலதுகையால் சில கையெழுத்துகளையும்,இடது கையால் சில கையெழுத்துகளையும்போட்டுக் கூட்டத்தை முடித்துவிடுவர்ஆனால்இவற்றையெல்லாம் செய்துமுடிக்க ஆகும் நேரம்குழந்தைகளுக்கும் கற்பிக்கப்படும்நேரத்திலிருந்து களவாடப்படுகிறதே!
• பள்ளிக்குக் கழிவறைபுதிய வகுப்பறைக் கட்டடம்முதலியவற்றிற்குப் பணம் ஒதுக்கியிருந்தால்,அதற்குக் கிராமக் கல்விக்குழுவில் தீர்மானம்நிறைவேற்றுவதுகாசோலையில் கையெழுத்துவாங்க அவ்வப்போது தலைவரைத் தேடுவது (ஒரேநேரத்தில் மொத்தமாகப் பணம் எடுக்க முடியாது),குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டடப் பணி முடிக்கவேண்டி கொத்தனாசித்தாளைத் தேடுவது,அவர்களின் வேலையைக் கண்காணிப்பது,கட்டுமானப் பொருட்கள் வாங்குவது,அவற்றுக்கான பில் தொகுப்பதுபல்வேறு பணிநிலைகளைப் படம் எடுப்பதுவங்கிக் கணக்குப்புத்தகம்காசோலைப் புத்தகம்ரொக்கப் புத்தகம்,செலவினம் வாரியாகப் பேரேடுபற்றுச் சீட்டுகள்,கோப்புகள் முதலியனவற்றைப் பராமரித்தல்ஆகிய பணிகளைத் தலைமையாசிரியர் செய்தல்வேண்டும்இவற்றோடு பள்ளி மற்றும் பராமரிப்புமானியச் செலவினப் பதிவேடுகளைப்பராமரித்தல் வேண்டும்இவற்றை ஆண்டுக்குஒருமுறை வட்டார வளமையத்தில் கொண்டு வந்துசரிபார்த்துச் செல்ல வேண்டும்மாநிலத்திலிருந்துவரும் தணிக்கைக் குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
• அன்னையர் குழு என்பது 6 பேர் கொண்டபெண்கள் குழுஇது பள்ளியின் கழிப்பறைமதியஉணவு முதலியவற்றைப் பார்வையிடும்.இவர்களுக்கான பார்வையாளர் பதிவேட்டையும்தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டும்.
பெரும்பாலான கிராமங்களில் பள்ளிமாணவர்களின் எண்ணிக்கையே இருபது,பதினைந்துபத்துஎட்டுஐந்து என்றுஇருக்கும்போது இவர்களைக் கண்காணிக்க 46பேர் கொண்ட இத்தனை குழுக்கள் அவசியமா?ஒரே குழு போதாது என்றால் குறைந்தபட்சம்மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இக்குழுக்களைஅமைத்துக் கொள்ளக் கூடாதா?
• நூற்றுக்கும் மேற்பட்ட பதிவேடுகளை ஒவ்வொருபள்ளியிலும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும்.பாடம் நடத்தும் நேரத்தைவிட பதிவேடுகள் பூர்த்திசெய்யும் நேரமே அதிகம்.
• ‘அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டாரஅளவில்குறுவட்டார அளவில் நடத்தும் பல்வேறுபயிற்சிகளில் (குறைந்தபட்சம் 10 + 10 )ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.பயிற்சி என்பது தேவையை ஒட்டிஉண்மையிலேயே ஆசிரியரிடமிருந்து கோரிக்கைவந்தால் வழங்குவதில் தவறில்லைபுதிதாகப்பணியில் சேர்ந்தவர்க்கு வேண்டுமானால்கட்டாயம் வழங்கலாம்ஆனால்ஒதுக்கப்பட்டநிதியைச் செலவு செய்தே ஆக வேண்டும்என்பதற்காகஆண்டுதோறும் அரைத்த மாவையேஅரைப்பதுபோல் தன்சுத்தம்பல்சுத்தம்உடல்நலம்,கை கழுவுதல்உடற்பயிற்சிகலை மற்றும்கைவினைப் பொருட்கள் தயாரித்தல்வாசித்தல்,எழுதுவதில் மேம்பாடுபோன்ற தலைப்புகளில்சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வர்.
• மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்மாவட்டக்கல்வி அலுவலர்அனைவருக்கும் கல்வி இயக்கக்கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர்உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்மேற்பார்வையாளர் முதலியோர்கூட்டும் கூட்டங்களில் கலந்துகொண்டுஅவர்களின் வழிகாட்டுதல்களைத் தலைமைஆசிரியர்கள் பெறவேண்டும்இம்மாதிரியானகூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை என்றகணக்குக் கிடையாது!
• மாணவர்களுக்கு இலவசப் பேருந்துக் கட்டணச்சலுகை பெற அதற்கான விண்ணப்பங்களைப்பூர்த்திசெய்து தொகுத்து வட்டாரப் போக்குவரத்துஅலுவலகத்தில் கொடுத்து பஸ் பாஸ் பெற்றுத்தருவதும் ஆசிரியர்கள் கடமை.
• தற்போது சாதிச் சான்றிதழ் பெற்றுத் தருகிறகடமையையும் ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.
• மேல்நிலைஉயர்நிலைப் பள்ளிகளின்கல்விசாரா வேலைப்பளு தனி என்றாலும்,தற்போது குறிப்பாக 12, 10ஆம் வகுப்புத் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு அவர்களின் சான்றிதழைவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கிறவேலையும் ஆசிரியர்கள் செய்கிறார்கள்.
பெரும்பாலும் தலைமையாசிரியர்கள்தாமேஇப்பணிகளைக் கவனிக்கிறார்கள்மற்றஆசிரியர்கள் கல்விப் பணியைக் கவனிக்கலாமே?’என்று கேட்கத் தோன்றும்தமிழகத்தில்பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் 2ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 6,7,8வகுப்புகளுக்கு தலைமையாசிரியரையும் சேர்த்துமூவர்தான் உள்ளனர்ஆகஈராசிரியர்களில்ஓராசிரியர் எப்போதும் கல்வித்துறை சார்ந்தபணிகளுக்காக பள்ளியைவிட்டு வெளியே சுற்றிக்கொண்டிருக்க வேண்டிய சூழலை அரசேசெய்கிறது!
இங்ஙனம் பல துறையினர் செய்யவேண்டியநிறையப் பணிகளை ஆசிரியர்களேசெய்கின்றனர்பாடம் நடத்துவதைத் தவிரதமிழகபள்ளி மாணவர்களுக்கு எல்லாம் இலவசமாய்கிடைக்கிறதுகல்வியைத் தவிரதனியார்பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதுஉழைப்புச்சுரண்டலும்மாணவர்கள் மீதானகட்டணக் கொள்ளையும் கொடுமையாகஅரங்கேறுகிறதுஆனால் ஒப்பீட்டளவில்கல்விப்பணி தவிரபிற பணிகள் அந்தஆசிரியர்களுக்கு இல்லைஎப்போதும்மாணவர்களோடு அவர்கள் இருக்கிறார்கள்.உழைக்கும் மக்கள் உட்பட தங்கள் குழந்தைகளைகடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்க்ககாரணம் இதுவே.
இந்தச் சூழலை உருவாக்கியவை மத்திய மாநிலஅரசுகளே.
விவரங்கள்
எழுத்தாளர்சிற்பி மகன்
தாய்ப் பிரிவுமக்கள் விடுதலை
பிரிவுமக்கள் விடுதலை - பிப்ரவரி 2015
வெளியிடப்பட்டது: 30 நவம்பர் -0001

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.