Wednesday, 7 October 2015

எங்களை மீண்டும் மீண்டும் கோமாளியாக்கிவிடாதீர்கள்.

தயவுசெய்து படியுங்கள்... ஜேக்டோ போராட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ஓர் ஆசிரியரின் வேதனை கலந்த  வேண்டுகோள்
... அரசு பேச அழைத்தவுடன் வெற்றி என நினைக்க வேண்டாம். 28 சங்கங்களும் உடையாமல் ஒற்றுமையுடன் இருப்பதை கண்டு ஒரு சிறிய பயம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த பேச்சுவார்த்தை அழைப்பு. பேச்சுவார்த்தையின் போது நம் கோரிக்கையில் உறுதியாக இருங்கள். சிறப்பூதியம் 500, தனிஊதியம் 750, தர ஊதியம் 100 -ல் திருப்தி அடைந்தது போல இந்த முறையும் இருந்துவிடாதீர்கள். நீங்க எங்கு , எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் , எத்தனை முறை ஏமாற்றினாலும் இன்னும் உங்களை நம்பி அனைத்து போராட்டத்திலும் கலந்துகொள்கிறோம். இந்த முறையாவது எங்களை ஏமாற்றாமல் கடைசி வரை அனைத்து சங்கங்களும் ஒற்றுமையுடன் நின்று கோரிக்கைகளை வெல்ல வேண்டும். அமைச்சரிடம் பேசி விட்டோம் அமைச்சர் அம்மாவிடம் பேசி நம் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி கொடுத்தார் என்று சொல்லி பொன்னாடை போர்த்தி, மீடியாவுக்கு பேட்டி கொடுத்து எங்களை மீண்டும் மீண்டும் கோமாளியாக்கிவிடாதீர்கள். இந்த முறையாவது வென்றுவிடுவோம் என  இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்... 😂😂😂

1 comment:

  1. RMSA சார்பாக ஆங்கில ஆசிரியர்களுக்கு 10நாள்கள் பாயிற்சி அளிக்கப்பட்டது. அதனை பற்றி பயிற்சிக்கு போனவர்கள் உங்கள் அனுபவங்களை பகிரவும்

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.