Saturday, 31 October 2015

அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு தெரியலணே!

👉அண்ணே அடுத்தவாரம் +2
ரிசல்ட் வருது..


❗அதுக்கு என்னல தம்பி?

👉அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு
தெரியலணே,


❗மொதல்ல ஒன்னோட ஆசையச்
சொல்லுடே..

👉அண்ணே டாக்டருக்கு படிக்கவா?

❗டாக்டராகி சேவை செய்வேனு
பேட்டி மட்டும் தான்
கொடுக்கத்தெரியும், ஆனா
செய்யமாட்டிங்க, வேற சொல்லு..

👉அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?

❗இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல
நாலுபேரு கெடக்கானுவோடே..

👉அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே,

❗ஏன்டா? ஏன்? நான் படுற பாடு
போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட்
ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு
கெடைக்காதுடா..

👉அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?
ஏதுக்கு?

❗மலேசியா பிளேன
பாத்தல்ல..

👉அப்போ மரைன் ஓகேவா?

❗வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம்,
நீச்சல் வேற தெரியாது..

👉பேசாம ராணுவத்துக்கு
போகட்டுமாணே?

❗அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..

👉போலீசு வேலைக்காவது ட்ரை
பன்னவாணே?

❗லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள
போலீசு கூட போன்ல "ஒன்னு
குடுக்கட்டுமா?னு" கேப்ப,
வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..

👉அப்போ ஏதாவது டிகிரியவாது
முடிக்கவாணே?

❗சத்தியமா வேலை கிடைக்காதுல,
தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு
கோடி பேரு கெடக்கான்..

👉கேட்ரிங் ஓகேவா?

❗சமையல் செய்றதெல்லாம் கல்யாணம்
முடிஞ்சதும் நீயே கத்துப்ப ,
வேஸ்ட்ல..

👉ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ்
பன்னட்டுமா?

❗ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது
இல்ல ..

👉ஏதாவது யாவாரம் பன்ன கடைய
ஆரமிக்கட்டுமா?

❗இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த
இடத்தில யாவாரம் பண்ணி
திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா
மண்டக்கா" திட்டீருவேன்..

👉டீக்கடைய போடட்டுமா?

❗பிரதமர் ஆகி நாடு நாடா
சுத்திகிட்டும், முதல்வர் போல
டம்மியா இருக்கலாம்னு பாக்க,
"தூக்கி அடிச்சிருவேன்
பாத்துக்கோ"..

👉வெளிநாட்டுக்கு போய்
சம்பாதிக்கட்டுமா?

❗அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக
கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய்
நாட்டப்பத்தி கூட சிந்திக்க
மாட்டானுங்கல..

👉👉👉 அப்போ நான் என்னதான் பன்ன?


❗❗❗அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத
தூக்கு, போய் வயல கொத்து, நாலு
வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து
பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி
எங்களுக்கு கடவுள்.

👉ஏன்ணே இப்புடி சொல்ற?

❗ஆமால தம்பி, எல்லா படிப்ப
படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா
எல்லோரும் சாப்பிடுறதுக்கு
விவசாயம் பன்ற ஆள் இல்லடே..
👉👉அப்புடி சொல்லாதணே நான்👍
இருக்கேன்,

❗அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி,
தூக்குடா மம்புட்டிய, வாடா
வயலுக்கு போவோம், உனக்கு நான்
உதவி பன்றேன்டா..
# விவசாயி_அழிந்தால் ?
# விவசாயம்_அழியும் ,
# விவசாயம்_அழிந்தால் ?
# உலகமே_அழியும் .
🌾🌾🌾🌾🌾
உங்க நண்பன்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.