Monday, 5 October 2015

இந்த உலகம் உன் வெற்றிக் கதையைப் படிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது .

படித்துப் பகிர்ந்தவை...

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ

அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் . - விவேகானந்தர் .
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல ;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல !
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம் .
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம் .
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது ; ஆனால் ,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும் .
=========================
நல்ல முடிவுகள் , அனுபவத்திலிருந்து பிறக்கின்றன ;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது . - பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை , ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை .
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை !
=========================
மேலாளர் : உன் தகுதி என்ன?
சர்தார் : நான் Ph .D
மேலாளர் : Ph .Dன்னா என்ன?
சர்தார் : Passed high school with Difficulty .
=========================
நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன் .
அங்கே 5 பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன் .
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா .
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான் .
சரின்னு நானும் 4 ஆவது மாடிக்குப் போனேன் .
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது ?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா .
=========================
( தேர்வு அறையில் )
ஆசிரியர் : டேய் என்னடா. .. கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன் : எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார் .
=========================
விட்டுக் கொடுங்கள் ; விருப்பங்கள் நிறைவேறும் .
தட்டிக் கொடுங்கள் ; தவறுகள் குறையும் .
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும் .
=========================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள் .
ஏன்னா அறிவு. ... ..
சரி விடு . இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம் .
=========================
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள் !
=========================
எனக்கு இட்லியைப் பிடிக்காது
தோசையைத்தான் பிடிக்கும் .
ஏன்னா , இட்லி கூட்டமா வேகும் .
தோசை சிங்கிளாத்தான் வேகும் .
கூல் . ..
=========================
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா .
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல ;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல !
அதனால் ,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம் ;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம் !
=========================
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள் !
=========================
தோல்வியின் அடையாளம் தயக்கம் !
வெற்றியின் அடையாளம் துணிச்சல் !
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை !
=========================
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள் !
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள் !
அந்த 11 ஆவது ரோஜா ,
உங்கள் புன்னகை !
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன் !
=========================
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
=========================
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல ;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது . - பாரதியார்
=========================
எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும் !
இன்றும் நாளையும் என்றும் .
=========================
இதை மெதுவாகப் படியுங்கள் :
LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா ?
LIFE IS NOW HERE என்றா ?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
=========================
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள் !
உங்கள் கண்ணீர் ,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும் !
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்
=========================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய் .
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய் ?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது .
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம் .
=========================
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம் .
ஆனால் ,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும் .
=========================
ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு .
கேரளா : நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை : செழுமையான கன்னங்கள்
பஞ்சாப் : பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு : ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது
=========================
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால் ,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம் .
- அப்துல்கலாம் .
=========================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது ,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய் !
நீ துயரத்தில் இருக்கும்போது ,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய் !
=========================
உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும் !

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.