Thursday, 8 October 2015

“உன்னைப் போல் ஒருவன்” என் பெயர் [[[[[[[[[[”இடைநிலை ஆசிரியன்” ]]]]]]]]]]

நாள்தோறும் நான் பூசனை செய்யும்கோவில் பள்ளிக்கூடம்
கோவிலைச் சுற்றிவரும் பக்தர்கள்பசங்க
பள்ளியிலே பறந்து திரியும் நான்அரண்மனைக் கிளி
பள்ளியை ஆளவந்த நான்ஆளவந்தான்
எனது பள்ளி வாழ்க்கை ஓர் ஆல்பம்
குறும்பு செய்யும் மாணவர்களுக்கு நான்இம்சை அரசன்
வகுப்பறையைச் சுற்றி வரும் நான் 
அடிப்படையில் ஊதியம் குறைவுஎன்பதால் என் வாழ்க்கை மிடில் கிலாஸ்மாதவன்
அடிப்படை அறிவைப் புகட்டுவதால்உள்ளத்தால் நான் பணக்காரன்
குழந்தைகளோடு விளையாடுவதால்மற்றவர் பார்வைக்கு நான்படிக்காதவன்
குழந்தைகளின் உள்ளக் கிடக்கையைஉணர்ந்து கொள்ளும் நான் மேதை
பள்ளியில் கன்றுகள் வளர்த்து வரும்நான் தோட்டக்காரன்
பள்ளியைக் கோவிலாக்கும் நான்தெய்வப்பிறவி
குழந்தைகளுக்காகப் பாடும் ஒவ்வொருவரியும் எனது அபூர்வ ராகங்கள்
குழந்தைகளோடு சேர்ந்து பாடும் போதுஎன்னுள் கேட்கும் ஆனந்த ராகம்
வறுமையில் வாடும் குழந்தைகளுக்குநான் கொடுத்துச் சிவந்த கை
வார்த்தைகளால் பேச இயலாத போதுஎனது கைகள் துடிக்கும் கரங்கள்
பேச்சாற்றலினால் குழந்தைகள் என்னைஅழைப்பது எங்கள் அண்ணா
அறிவாற்றலால் குழந்தைகள் கூறும்எங்கள் ஆசான்
தீண்டாமைக் களையைக் களைவதால்நானும் ஓர் பெரியார்
மதிய உணவை குழந்தைகளோடுபகிர்ந்துண்பதால் நானும் ஓர் காமராசர்
மாணவர்கள் ஓட்டுப் போடாமலேபள்ளிக்கு நான் முதல்வன்
பள்ளியில் உள்ள ஓட்டையை அடைக்கும்நான் மாடி வீட்டு மாப்பிள்ளை
புத்தக மூட்டை சுமக்கும் நான்சுமைதாங்கி
விலையில்லாப் பொருள்களைவினியோகிப்பதால் நான் வள்ளல்
விலையில்லாப் பொருளையும்விலைகொடுத்து ஏற்றிவரும் நான்ரிக்ஷாக்காரன்
முக்காலமும் சுமந்து வருவதால் நான்ஆட்டோகாரன்
இவ்வேளைகளைச் செய்ய மறுத்தால்நான் புரட்சிக்காரன்
ஊதிய முரண்பாடுகளைக் களையமுரண்படும் எங்கள் வருத்தப்படாதவாலிபர் சங்கம்
ஊதியம் குறைந்தாலும் குறையாதஎங்கள் சங்கங்களின் எண்ணிக்கை “49o+
மாத ஊதியம் உயராவிட்டாலும் சந்தாத்தொகையை உயர்த்திக் கொடுக்கும்நான் உயர்ந்த மனிதன்
அனைத்து சங்கங்களுக்கும் சந்தாசெலுத்த நான் மகான் அல்ல
சங்கத்தில் சேர மறுத்தால் நான் ஓர்அந்நியன்
எங்களில் சிலர் வட்டிக்கு விடுவதில்வசூல் ராஜா
பள்ளித் தளவாடங்களைப்பாதுகாப்பதால் நான் காவல்காரன்
புரவலர்களிடம் கை கூப்பும் நான்சுயேட்சை MLA”
மாணவர்களிடம் அன்பு காட்டும் நான்புன்னகை மன்னன்
முப்பருவமும் மாணவர் படையைக்கையாளும் நான் தளபதி
பல்வகுப்புக் கற்பித்தலில் நான் பத்துத்தலை இராவணன்
வகுப்புகளுக்கும் நான் ஒருவனே பாடம்நடத்துவது பஞ்ச தந்திரம்
வகுப்புகளையும் தேர்ச்சி பெற வைக்கநான் வகுப்பது ராஜ தந்திரம்
எல்லையில் உள்ள மாணவர்களைக்கண்காணிப்பதில் நான் இராணுவவீரன்
எல்லையில்லாத் தேர்ச்சி பெற வைப்பதுஎனது விதி
பட்டப் படிப்பு முடித்தும் நான்வேலையில்லாப் பட்டதாரி
முதுமையானாலும் மாணவர்களால்மறக்க முடியாத நான் ஜென்டில் மேன்
மாணவத் தலைமுறை போற்றும் நான்வரலாற்று நாயகன்
எங்களில் சிலர் பள்ளி வேளையில்மறையும் மாயமான்கள்
மாயமான்களைக் கண்டறிய அதிகாரியிடும் கட்டளை  வேட்டையாடு விளையாடு
வேட்டையில் சிக்கிய மான்கள் கேட்பதுபாவ மன்னிப்பு
சத்துணவைப் பார்வையிடும் நான்சர்வர் சுந்தரம்
மாணவர்களைப் பாதுகாப்பதில் நான்பரமசிவன்
கற்பித்தலே எனது தொழிலாதலால்நானும் ஓர் தொழிலாளி
ஓய்வுவேளை என்பதே எங்கள் துறையில்இல்லாததால் நானும் ஓர் உளைப்பாளி
கல்விக்கு ஒளி ஏற்றுவதால் நான்ஆதவன்
SABL முறையில் பாடம் எடுப்பதால்நானும் ஓர் கஜினி
SABL முறையில் மாணவர்களை வெற்றிபெறச் செய்வதில் நானும் ஓர் சிவாஜி
காலை வழிபாட்டுக் கூட்டத்தில் நான்கூறுபவை(GO 264) யாவும் அரசகட்டளை
ஆடிப்பாடி நடிப்பதால் நானும் ஓர்அவ்வை சண்முகி
பள்ளிக்குள் நுழைந்ததும் சின்ன பசங்கநாங்க
எழுத்தறியாக் குழந்தைக்கும்எழுதுகோல் வழங்கும் நான் தர்மத்தின்தலைவன்
எல்லா மாணவரும் கைகூப்பித்தொழுவதால் நானும் ஓர் எஜமான்
உத்தரவுகளை உடனே நிறைவேற்றும்நான் எந்திரன்
உண்மையைச் சொல்லித் தரும் நான்உத்தம புத்திரன்
குழந்தைகள் என்னைப் பின்பற்றுவதால்நான் குரு
குழந்தைகள் சுற்றிவரும் என் வாகனம்மோட்டார் சுந்தரம் பிள்ளை
மதிய உணவிற்கு முன் என்னுள் கேட்கும்மௌனராகம்
நன்மை விதைக்கும் நான் நல்லவனுக்குநல்லவன்
மாணவர்களுக்காக நான் நினைத்ததைமுடிப்பவன்
கல்லாமைக் கள்வனை விரட்ட வந்தநான் ஊர்க்காவலன்
குழந்தைகளிடம் நான் காட்டும் அன்புபாசமலர்
குழந்தைகளுக்காக நான் எழுதும்பாடக்குறிப்பு பொக்கிஷம்
SABL வானிலே பறக்கும் நான் புதியபறவை
SABL ல் நான் விதைக்கும் விதை புதுநெல்லு புது நாத்து
நான் எழுதும் உண் மை ரெட்
நான் கற்றுத்தரும் விளையாட்டுசதுரங்கம்
நான் எழுதும் கோப்புகள் வரலாறு
நான் கூறும் கவிதை செந்தமிழ் பாட்டு
நான் கட்டமைத்த கல்விக்கூடம்தாஜ்மஹால்
வருங்கால இந்தியாவை உருவாக்கும்நான் வல்லரசு
வருந்தாமல் ஒலிக்கும் என் குரல்சலங்கை ஒலி
அயர்ந்தவனுக்கு நான் கூறும் அறிவுரைதூங்காதே தம்பி தூங்காதே
அயராமல் உழைப்பதால் என் முதுகில்தெரியும் மூன்றாம் பிறை
அதிகாரி வந்தால் என் உள்ளத்தில்கேட்கும் டிக் டிக் டிக்
வந்தவர் சென்றால் பள்ளியில் ஒலிக்கும்டும் டும் டும்
4.10 க்குத் தெரியும் எங்களது கடமைகண்ணியம் கட்டுப்பாடு
மாணவர்கள் சுற்றிவரும் நான்திருவண்ணாமலை
களப்பணியாற்றுவதில் நான் நாடோடிமன்னன்
படி நிலையில் உச்சிக்குக் கொண்டுசெல்லும் நான் ஏணிப்படிகள்
வெற்றிக் கோப்பையில் விளக்கேற்றும்நான் பட்டணத்து பூதம்
நான் அமைத்த கம்பிப் பந்தல் சிலந்திவலை
நம்பிக்கை இழந்தோருக்கு நான்சொல்வேன் உன்னால் முடியும் தம்பி
நான் சுழற்றும் ஆரோக்கியத்திற்கானதர்மச் சக்கரம்
என் வேலைகளை பகிர ஒருவரும்இல்லையாதலால் நானே ராஜா நானேமந்திரி
ஔவையார் அட்டை எடுத்தால் நான்பாட்டு வாத்தியார்
நான் பெறும் பணியிடைப்பயிற்சிமீண்டும் கோகிலா
நான் பதிக்கும் எழுத்துக்கள் சிவகாசி
நான் உதிர்க்கும் சொல்லமுதம்திருநெல்வேலி
என் வார்த்தைகளின் கூர்மைதிருப்பாச்சி
என் சொற்கலவைகள் திருப்பதி
நான் 5 வகுப்புகளிலும் கலந்தபஞ்சாமிர்தம்
ஐந்து வகுப்புக்கும் அவதரித்த நான் தனிஒருவன்
மொத்தத்தில் நான்
சதாவதானி
மதிப்பெண் போடுவதில் மட்டுமல்ல!! செயலிலும் தான்!!!
நானும்
 உன்னைப் போல்ஒருவன்
என் பெயர்
[[[[[[[[[[இடைநிலைஆசிரியன்” ]]]]]]]]]]

மேற்கண்ட காட்சிகள் 100 நாட்கள்ஓடியவை மட்டுமல்ல !!!
எங்கள் வாழ்வில் 365 நாட்களும்ஓடிக்கொண்டிருப்பவை !!!
இடைநிலையில் தவிக்கும் எங்களை ஏற்றிவிடுங்கள் !!!
உச்சிக்கு அல்ல !!! உயர்வுக்கு !!!
OPERATER: ப.சரவணன்          SHOW: ஊ.O..U.பள்ளி             PLASE: போலம்patti.                 TIME: 09:00  TO  04:30

1 comment:

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.